எல்லாமே ஹிட்தான்!

நடிப்பு, பிசினஸ் என சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார், சந்திரா லஷ்மணன்.

“பூர்வீகமான கேரளாவில் இருந்து ஸ்கூல் படிக்கிறப்போ சென்னைக்கு ஷிஃப்ட் ஆனோம். ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்கறப்போ,‘மனசெல்லாம்’ படத்துல நடிக்கிற வாய்ப்பு வர, ஸ்ரீகாந்தோட சிஸ்டரா நடிச்சேன். அந்தப் படத்துல நடிக்க ஆரம்பிச்ச மூணாவது நாளே, மலையாளத்துல ப்ரித்திவிராஜ் ஜோடியா நடிக்கிற வாய்ப்பு வந்துச்சு. அப்படியே நிறைய மலையாளப் படங்கள்... பல மொழி சீரியல்கள். விஜய் டி.வி.யில ‘காதலிக்க நேரமில்லை’, ‘வசந்தம்’னு பல சீரியல்கள் நல்ல ரீச் கொடுக்க, அப்படியே 10 வருஷத்துல 30 - க்கும் அதிகமான சீரியல்கள்ல நடிச்சுட்டேன். எல்லாமே ஹிட்தான்!

இப்போ நடிச்சுட்டு இருக்குற சன் டி.வி சீரியல் ‘பாசமலர்’... இந்தப் பெயருக்கு ஏத்த மாதிரியே, சீரியல்ல நடிக்கிற ஆர்ட்டிஸ்ட் எல்லோரும் சொந்த பந்தங்களாகவே பழகுறது நடிப்பைத் தாண்டி, மனசுக்கு சந்தோஷத்தைக் கொடுக்குது. அப்பா-அம்மாகூட சேர்ந்து ‘மியூரல் ஆரா’ங்கிற பெயர்ல நேரடியாவும், ஆன்லைன் மூலமாவும் பிசினஸ் செய்துட்டும் இருக்கேன். சாரீஸ்ல கேரளா மியூரல் பெயின்ட்டிங் வேலைப்பாடு செய்றதுதான் அந்த பிசினஸ். இப்படி என் வாழ்க்கைப் பயணம் சீராக போயிட்டு இருக்கு'' என புன்னகைக்கிறார், சந்திரா!

கலக்குங்க சிஸ்டர்!

குட்டீஸ் கொண்டாட்டம்!

'ஜீ தமிழ்’ சேனலின் ‘ஜுனியர் சூப்பர் ஸ்டார்ஸ்’ நிகழ்ச்சியின் ஷூட்டிங் ஸ்பாட் சென்றோம். குட்டீஸின் சேட்டைகளால் திணறிய நடுவர்கள் பாக்யராஜ், குஷ்பு, அர்ச்சனா ஆகியோரிடம் கேட்ட ஒரேவிதமான கேள்விகளும், `டக் டக் டக்' பதில்களும்!

இந்த குழந்தைகள் போல, சின்ன வயசுல உங்ககிட்ட இருந்த திறமைகள்..?

பாக்யராஜ்: சின்ன வயசுல என் அம்மா என்னைக் கூட்டிட்டு ரோட்டுல போறப்போ, யாராச்சும் மியூசிக் இன்ஸ்ட்ரூமென்ட்ஸை வாசிச்சுட்டுப் போனா, என்னையே அறியாம நான் ஆட்டம் போடுவேனாம். அப்படி மெருகேறி சின்ன வயசுல இருந்தே சினிமா மேல ஈர்ப்பு வந்ததாலதான், நிறைய முயற்சி செஞ்சு, சினிமாவுக்குள்ள வந்தேன்.

குஷ்பு: ஸ்கூல் படிக்கிறப்போ நிறைய ஸ்டேஜ் டிராமாஸ்ல பெர்ஃபார்ம் செய்திருக்கேன். படிப்புல கொஞ்சம் பிரைட் ஸ்டூடன்ட்டா இருந்ததால, மத்த விஷயங்கள்ல அதிகமா கவனம் செலுத்தினது இல்லை. கேம்ஸ்ல மட்டும் கொஞ்சம் ஆர்வமா விளையாடியிருக்கேன். நான் டைரக்ட்டா ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்டுல சேர்ந்து ஸ்கூல் லைஃப் ஸ்டார்ட் பண்ணினேன். அப்போ, 'தொடர்ச்சியா ஸ்கூல் பெல் அடிச்சா வீட்டுக்கு விட்டுட்டாங்கன்னு அர்த்தம்... உடனே வீட்டுக்குக் கிளம்பி வந்திடணும'்னு அம்மா சொல்லிருந்தாங்க. ஆனா, பிரேக் அப்பவும் லாங் பெல் அடிப்பாங்கன்னு சொல்லாம விட்டுட்டாங்க. ஸ்கூல் சேர்ந்த முதல் நாளே பிரேக் டைம் லாங் பெல் அடிச்சதும், உடனே நடந்து வீட்டுக்கு வந்துட்டேன். அது பிரேக் பெல்னு அம்மா பலமுறை சொல்லியும், நான் ஏத்துக்கவே இல்லை. அப்போ என்னைத் தேடி என் டீச்சரே வீட்டுக்கு வந்து என்னைக் கட்டாயப்படுத்தி ஸ்கூலுக்கு கூட்டிப்போனது மறக்க முடியாத நிகழ்வு. அதே மாதிரி 'ஹோம்வொர்க் செஞ்சிட்டேன்'னு பொய் சொல்லி, அம்மாகிட்ட சூடு வாங்கினதையும் மறக்கவே முடியாது!

அர்ச்சனா: நான் ஸ்கூல் படிக்கிற நேரத்துல ஃபேன்ஸி டிரெஸ் போட்டிகள்தான் திறமையை வெளிக்காட்ட பிரதான வாய்ப்பா இருந்துச்சு. நானும் பல வேடங்கள் போட்டிருக்கேன். அதைத் தாண்டி அஞ்சு வயசுலயே சாமர்த்தியமா கோலம்போட கத்துக்கிட்டு, எல்லா வகையான கோலங்களும் போடுவேன்!

சினிமா துறையில இருக்குறதால, உங்க பிள்ளைங்களோடு நேரத்தை செலவழிக்காமல் போயிட்டோம்னு ஃபீல் செய்தது உண்டா?

பாக்யராஜ்: அப்போதும் இப்போதும் நிறையவே ஃபீல் பண்ணியிருக்கேன். நான் பீக்ல இருந்த நேரத்துல வீட்டுல இருக்குறதே குறைவுதான். அப்போ என் மனைவி பூர்ணிமாதான் குழந்தைகளைக் கவனிக்கிறது, ஸ்கூலுக்கு அனுப்பி கூட்டிட்டு வர்றதுன்னு எல்லாமே செய்வாங்க. ஒரு தகப்பனா நான் நிறையவே மிஸ் பண்ணிட்டேன். குறிப்பா, இந்த நிகழ்ச்சில குழந்தைங்களோட குறும்பைப் பார்த்து ரசிக்கிறப்போ, நம்ம பிள்ளைங்களோட சேட்டைகளை பார்க்க முடியாம போயிடுச்சேன்னு ஃபீல் செய்திருக்கேன். இப்போ என்ன செஞ்சாலும் வளர்ந்த பிள்ளைங்களோட குழந்தைப் பருவம் திரும்ப வராதே!

குஷ்பு: கல்யாணமாகி குடும்பம்னு வந்தபிறகு சினிமா வாய்ப்புகளை நிறையவே குறைச்சுக்கிட்டேன். அதனால, என் பொண்ணுங்ககூட நேரம் செலவழிச்சிருக்கேன். நான் எப்போ வெளிய போனாலும் நான் போடுற டிரெஸ்ஸை என் பொண்ணுங்ககிட்ட காட்டி `ஓகே' வாங்கிட்டுதான் யூஸ் பண்ணுவேன். அவங்க இப்பவும்கூட என்னை ஜாலியா கிண்டல் பண்ணுவாங்க. இப்படி நிறைய விஷயங்கள்ல என் பொண்ணுங்ககூட கனெக்டடா இருக்குறது சந்தோஷமா இருக்கு. குடும்பம்தான் எனக்கு பிரதானம். அதனாலயே 6 மணிக்கு மேல எந்த வெளிவேலையும் செய்ய மாட்டேன்.

அர்ச்சனா: குழந்தைக்கான நேரத்தை சரியா ஒதுக்கி, நல்லா கவனிப்பது என் வழக்கம். குழந்தைக்கே உண்டான சேட்டைகளையும் சந்தோஷமா ரசிச்சிருக்கேன்.

பிள்ளைங்களோட சேட்டைகளை ரசிப்பீங்களா... கண்டிப்பீங்களா?

பாக்யராஜ்: நான் வீட்டுல இருக்குறதே கொஞ்ச நேரம் என்பதால, பிள்ளைங்க ரெண்டு பேரும் செய்ற எல்லா விஷயத்தையும் சப்போர்ட் செய்திருக்கேன். இப்போ விஷயங்களைப் பொறுத்துதான் ஆதரவும் எதிர்ப்பும்!

குஷ்பு: என் பொண்ணுங்க தப்பு செஞ்சா கண்டிக்கிறதும், நல்ல விஷயங்கள் செய்றப்போ முதல் ஆளா இருந்து பாராட்டுறதும்னு பேலன்ஸ்டு அம்மாவாதான் இருப்பேன். ஆனா, பொண்ணுங்களுக்கு கணவர் சுந்தர் எப்பவுமே சப்போர்ட் பண்ணிட்டே இருப்பாரு. அதனாலயே அவங்களை தூக்கத்துல எழுப்பினாலும் 'நாங்க அப்பா செல்லம்'னுதான் சொல்லுவாங்க.

அர்ச்சனா: செல்லம் கொடுக்கிற போர்ஷனை தாண்டி, ரொம்பவே டிசிப்ளினாவும், செய்ய வேண்டிய வேலைகளை சரியாவும் செய்ய வைப்பேன். கணவர் ராணுவத்தில் இருக்கிறார். பொண்ணோட வளர்ப்பில் சரியா அக்கறை செலுத்த வேண்டிய காரணத்தால, போதுமான கண்டிப்போடுதான் வளர்க்கிறேன்.

நிகழ்ச்சித் தொகுப்பாளினி கீர்த்தி என்ன சொல்கிறார்?

கல்யாணத்துக்கு முன்னாடியே பாக்யராஜ் அப்பாவும், நானும் ஒரு நிகழ்ச்சி செய்திருக்கோம். அப்போ சார்னு கூப்பிட்டேன். இந்த நிகழ்ச்சிக்கு அவரை கமிட் செய்த பிறகுதான், என்னை தொகுப்பாளினியா கேட்டாங்க. அப்பாகூட நான் எப்படி தொகுப்பாளினியா வொர்க் பண்றதுன்னு ரொம்பவே குழப்பமா இருந்துச்சு. என் கணவர் சாந்தனு, பூர்ணிமா அம்மா, என் ஃபேமிலி எல்லோருமே ஊக்கம் கொடுத்து செய்ய சொன்னாங்க. முதல் ரெண்டு எபிசோட்ல 'சார்'னுதான் கூப்பிட்டேன். அப்புறமாதான் அப்பான்னே கூப்பிட ஆரம்பிச்சேன். நிகழ்ச்சியில குழந்தைங்க என்னை பயங்கராமா கிண்டல் செய்வாங்க... பெர்ஃபார்ம் பண்ண சொல்லுவாங்க. நானும் அதை எல்லாம் சந்தோஷமா பண்ணிட்டு இருக்கேன்!

- ரிமோட் ரீட்டா, படங்கள்: எம்.உசேன்

வாசகிகள் விமர்சனம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ.150

பொது அறிவு தகவல்!

``குழந்தைகளைக் கவர்ந்திழுக்கும் சுட்டி டி.வி-யில் நிகழ்ச்சிகளின் நடுவே ‘பாமி அண்ட் ஃப்ரெண்ட்ஸ்’ என்ற குறுநிகழ்ச்சி இடம்பெறுகிறது. அதில் பாமி என்ற பெண் பொது அறிவு சம்பந்தமான தகவல் களை தகுந்த புகைப்படத்துடன் கூறுவது குழந்தைகளுக்கு எளிதில் புரியக் கூடியதாக உள்ளது’’ என்று பாராட்டு கிறார் திருச்சியில் இருந்து அ.அன்புச் செல்வி.

விழிப்பு உணர்வு நிகழ்ச்சி!

``புதிய தலைமுறை தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகும் ‘இடம்... பொருள்... ஆவல்’ நிகழ்ச்சி, தமிழகத்தில் நடைபெறும் புதுமையான நிகழ்வுகளை அரங்கேற்றி ஆவலைத் தூண்டுகிறது. இது... சுற்றுலாத்தலம், பொழுதுபோக்கு மட்டுமின்றி புத்தகக் கண்காட்சி, மரம் நடுவது, மாசுக்கட்டுப்பாடு போன்ற நிகழ்வுகளையும் காட்டி புதிய விழிப்பு உணர்வை தருகிறது’’ என்கிறார் மதுரையில் இருந்து ஆர்.பிரவீணா.

பழைய பாடல், பழைய நினைவுகள்!

``புதன்கிழமை தோறும் பொதிகை தொலைக்காட்சியில், `டி.எம்.எஸ். நேரம்’ என்னும் தலைப்பில் அவரது குரலில் பாடுபவர்களைக்கொண்டு பாட வைப்பது எங்கப்பாவுக்கு பழைய நினைவுகளை கொண்டு வந்து விடுகிறது. மேலும், அந்நிகழ்ச்சியைப் பார்த்து இன்றைய பாடலுக்கும், பழைய பாடலுக்கும் உள்ள வித்தியாசத்தை நானும் என் தங்கையும் ஆராய்வோம். அருமையான நிகழ்ச்சி தொடர வேண்டும்’’ என்று கோரிக்கை வைக்கிறார் ராயனூரில் இருந்து ச.லட்சுமி.