“ஒரு பூனை தன்னோட நாலு குட்டிங்களுக்கும் பால் கொடுத்துட்டு இருந்துச்சாம். குட்டிப்பூனைங்க பால் குடிக்கிறதை பார்த்து அம்மா பூனைக்கு செம ஹேப்பியாம். அந்த நேரத்துல ஒரு நாய், பூனைக் குட்டிங்களை பார்த்து பயங்கரமா கொலச்சதாம். பயந்து போன குட்டிங்க ஓடிப்போய் அம்மா பின்னாடி ஒளிஞ்சுகிருச்சு. ஆனாலும் விடாம நாய் கொலைக்க... கோபமான அம்மா பூனை, ‘லொள்...லொள்’னு நாய் மாதிரியே குரைக்க... ‘என்னடா இந்த பூனை குரைக்குது'னு நாய் மிரண்டு பயந்து ஓடிப்போச்சாம். அதைப்பார்த்த குட்டிங்க ஆச்சர்யமா `எப்டிமா'னு கேட்க ‘எப்பவும் ஒரு செகண்ட் லாங்குவேஜ் தெரிஞ்சு வெச்சுக்கறது நம்ம லைஃப்க்கு நல்லது’னு அம்மா பூனை நம்பிக்கையா சொல்லுச்சாம்...” என கதையில் நம்மை சொக்க வைத்தபடி பேசத்தொடங்குகிற கீதா ராமானுஜம், இந்தியாவின் பிரபலமான கதைசொல்லி... குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்தவர்.

“சின்ன வயசுல நீங்க உங்க அம்மாகிட்ட கதைகள் கேட்டு வளர்ந்திருப்பீங்க. ஆனா, இப்போ உள்ள குழந்தைகளுக்கு கதைகள் சொல்ல பெத்தவங்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சுத்தமா நேரமே போதலை. அப்புறம் கதைகள் கேட்க குழந்தைங்க எங்கதான் போவாங்க சொல்லுங்க? யூடியூப், கார்ட்டூன் சேனல் பார்க்கிறது, வீடியோ கேம் விளையாடுறது மட்டுமே போதுமா? குழந்தைகளுக்கு கதை சொல்லி வளர்க்கும் கலாசாரத்தை மறுபடியும் கொண்டு வரணும்" என்கிறவர் 98 - ம் வருடம் ஆரம்பித்ததுதான் `கதாலயா'.

“இப்பதானே டி.வி., மொபைல், சோஷியல் மீடியா எல்லாம்... நாங்க வளர்ந்தப்ப வீட்டுல ரேடியோ இருக்கிறதே ரொம்ப பெரிய விஷயம். அப்பல்லாம் நிறைய நேரம் இருக்கும். அந்த நேரத்தை சந்தோஷமா ஓடியாடி ஒருவழியாக்குவோம். அதுல ஒண்ணுதான் அப்பா, அம்மாகிட்ட கதை கேட்குறது. எங்க அப்பா, அம்மா நிறைய கதைகள் சொல்லிதான் என்னை வளர்த்தாங்க. கதைகளால் சூழப் பட்டதுதான் என் இளமைப் பருவம். இந்தத் தாக்கத்தால எனக்கு இயல்பிலேயே கதை சொல்லும் ஆர்வம் உருவாச்சு. அந்த உற்சாகம் நிறைய புத்தகங்களைத் தேடிப்பிடிச்சு வாசிக்க வெச்சது. தொடர்ந்து வாசிக்க வாசிக்க... நிறைய கதைகள் எனக்குள்ளேயும் உருவாச்சு.

1977-ல பெங்களூர்ல உள்ள ஒரு ஸ்கூல்ல ஹிஸ்டரி டீச்சராக சேர்ந்தேன். ஹிஸ்டரி சப்ஜெக்ட் எல்லாருக்கும் பிடிக்கும்னு சொல்ல முடியாது. சிலர் ஆர்வமா இருப்பாங்க. சிலர் ‘கஜினி முகமது 18-வது முறை படை எடுக்கும்போது’னு ஆரம்பிச்சதுமே கொட்டாவி விடுவாங்க. எல்லா மாணவர்களும் சுவாரஸ்யமா பாடத்தைக் கவனிக்கணும்னா ஒரே வழி... ஆசிரியர்கள் ரொம்ப ஜாலியா பாடம் நடத்தணும். நான் புத்தகத்தை வெச்சு பாடத்தை வாசிக்காமல், அதையே கதையாக்குவேன். நானே ராஜாவாகவும், சிப்பாய்களாகவும், கஜினி முகமதாகவும் மாறி குரலையும் மாத்தி கதையை சொல்லி நடித்து காண்பிச்சு பாடம் நடத்துவேன். அதனால, எல்லா மாணவர்களுக்கும் என் ஹிஸ்டரி கிளாஸை அவ்வளவு பிடிக்கும். என் கிளாஸை மிஸ் பண்ணவே மாட்டாங்க. கதைகள் அவங்க பாடத்துல நல்லா வொர்க் அவுட் ஆச்சுங்கிறதை மார்க் மூலமா தெரிஞ்சுகிட்டேன். ஸோ... குழந்தைகளின் கவனத்தை ஈர்க்க, கதைகள் சொல்லணும்கிறதை அப்பதான் உணர்ந்தேன்" என்கிறவரின் `கதாலயா' மூலம் லட்சம் பேருக்கு கதைகள் சொல்லப்பட்டிருக்கிறது என்று சொல்லி வாயடைக்க வைக்கிறார். தற்போது கீதாவின் மாணவர்கள் கதைசொல்லிகளாக உலகம் முழுவதும் கலகலப்பு ஊட்டுகிறார்கள் என்பது எக்ஸ்ட்ரா தகவல்.

``கதைகளுக்கான ஒரு வொர்க்ஷாப் நடத்த சந்தர்ப்பம் தானா உருவாச்சு. குழந்தைகளை ஈர்க்குற மாதிரி ஏகப்பட்ட கதைகள், விஷயங் களோட அந்த வொர்க்ஷாப்பை நடத்தினோம். நாங்க எதிர்பார்த்ததைவிட குழந்தைங்க சைடுல இருந்து செம ரெஸ்பான்ஸ். என்னோட வொர்க்ஷாப் பத்தி வெளிய பரவ, அதைக் கேள்விப்பட்ட நிறைய பேர்... கதை சொல்லித்தர அவங்க இடத்துக்கு கூப்பிட்டாங்க. அப்புறம் மாஸ்க் மற்றும் சில பொருட்களை வாங்கி கதைத்தளத்தை இன்னும் ஆர்வமா மாத்தினேன். குழந்தைகள் மட்டும் இல்லாமல் பெரியவர்களும் ‘எங்களுக்கும் கதை சொல்லுங்க’னு கேட்டாங்க. முதன்முதலா பெற்றோருக்கு ‘ஸ்டோரி டெல்லிங்’ வொர்க்ஷாப் நடத்தினோம். அதுவும் சூப்பர் டூப்பர் ஹிட். கதை சொல்றதுங்கிறது பெரிய வேலை.. ஒரே சமயத்துல பல எண்ணங்களை கொண்டவங்களை ஆச்சர்யமாக்கணும், அதிசயிக்க வைக்கணும், சிரிக்க வைக்கணும். அந்தக் கலை எனக்கு வாய்ச்சது. ஆசிரியர் பணியில இருந்ததைவிட `கதை சொல்லி' பணி திருப்தியா இருக்குது.

‘கதை சொல்றது எல்லாம் பெரிய விஷயமா? இது எல்லாம் எப்படி சக்சஸ் ஆகும்?’னு பலரும் கேட்டுட்டு என்னை கடந்து போயிருக்கிறாங்க. `கதாலயா' ஆரம்பிச்சப்ப ஆதரவு தராதவங்ககூட, போகப் போக எங்களோட முயற்சியைப் பார்த்துட்டு வரவேற்பு கொடுத்தாங்க. வெளிநாடுகளிலும் கதை சொல்லித்தர கூப்பிட்டாங்க. 2005-ல ‘ஸ்டோரி டெல்லிங் ஃபெஸ்டிவல்’ நடத்தி 40 ஆயிரம் பேருக்கு ஒரே நேரத்துல கதைகள் சொல்லி ‘லிம்கா சாதனை’ செஞ்சோம். 2006-ல கதை சொல்றவங்களுக்காக ஜெர்மனியில் உள்ள பல்கலைக்கழகத்துலயே கோர்ஸ் தொடங்கினோம். சில முக்கியமான பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும் இப்ப `ஸ்டோரி டெல்லிங்' ஒரு பாடமாவே இருக்கு. 2012-ல இந்தியாவுலயும் டிப்ளோமா கோர்ஸ் தொடங்கி இருக்கோம். பல சர்வதேச விருதுகளையும் வாங்கியாச்சு. இப்போ கதை கேட்க ஆர்வமா இருக்கறவங்க எண்ணிக்கை அதிகமாகிட்டே போகுது. அதே நேரத்துல கதை சொல்லுறவங்க எண்ணிக்கை குறைஞ்சுட்டே வருது. கதை சொல்ல ஆர்வமா இருக்கிறவங்க இந்தத் துறைக்கு வரலாம். நல்ல எதிர்காலம் கண் முன்னே காத்திருக்கு!” என்று புன்னகைத்தப்படி தன் கதா உலகுக்குள் மூழ்குகிறார் கீதா ராமானுஜம்.

கதைகளால் உலகை ஆள்வோம்!

- நா.சிபிச்சக்கரவர்த்தி