Published:Updated:

மிருதம் வளர்ப்போம்!

மிருதம் வளர்ப்போம்!
பிரீமியம் ஸ்டோரி
மிருதம் வளர்ப்போம்!

வலிகளைக் கடந்த வாழ்க்கைஆர்.வைதேகி

மிருதம் வளர்ப்போம்!

வலிகளைக் கடந்த வாழ்க்கைஆர்.வைதேகி

Published:Updated:
மிருதம் வளர்ப்போம்!
பிரீமியம் ஸ்டோரி
மிருதம் வளர்ப்போம்!
மிருதம் வளர்ப்போம்!

‘‘கோலிவாக்... எங்க சென்டரோட செல்லக் குட்டி! ஆனா, அவனை முதல் முதல்ல நாங்க பார்த்தப்ப ரெண்டு பின்னங்கால்களையும் தேய்ச்சுத் தேய்ச்சு நகரவே ரொம்பக் கஷ்டப்பட்டுக்கிட்டிருந்தான். எங்களோட கால்நடை மருத்துவர்கள் அவனைக் காப்பாத்தப் போனபோது, அவனுக்கு இடுப்புக்குக் கீழே உணர்ச்சிகளே இல்லாதது தெரிஞ்சது. கொஞ்சம்கூட யோசிக்காம தூக்கிட்டு வந்தோம். இன்னைக்கு கோலிவாக் ரொம்ப சந்தோஷமா இருக்கான்!

ருடால்ஃப் ட்ரெயின்ல அடிபட்டதுல ஒரு கை போயிடுச்சு. சரியான நேரத்துக்கு ட்ரீட்மென்ட் கொடுத்துக் காப்பாத்தினதுல பிழைச்சுக்கிட்டான். எங்க சென்டர்ல அவன்தான் பயங்கர வாலு... செம சேட்டை!

மிருதம் வளர்ப்போம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜியாவுக்குப் பிறக்கும்போதே ஒரு கால் இல்லை. நல்லா இருந்த இவளோட ஃப்ரெண்ட்ஸை எல்லாம் மத்தவங்க தத்து எடுத்துக்கிட்டுப் போயிட்டாங்க. ஜியா மட்டும் பாவமா இருந்தப்ப, ஒரு தம்பதி ஜியாவைப் பார்த்துட்டு, ‘அவதான் வேணும்’னு விருப்பப்பட்டு தத்து எடுத்துட்டுப் போனாங்க. ‘ஒரு கால் இல்லைங்கிறதை அவ ஒரு குறையாவே நினைக்கிறதில்லை... ரொம்ப துறுதுறுனு ஓடிக்கிட்டு, எங்களையும் ஓட வைக்கிறா’னு அவங்க வீட்ல சொல்றதைக் கேட்கறப்ப சந்தோஷமா இருக்கு...’’

இன்னும் இப்படி நிறைய நிறைய கேரக்டர்கள்... ஒவ்வொரு உயிரின் பின்னணியிலும் வலிகளைக் கடந்த வாழ்க்கை.

ஆம்புலன்ஸ் அலறலுக்கு ஒதுங்கி வழிவிடுகிற அக்கறையைவிடவும், ஆம்புலன்ஸின் வேகத்தினோடே சிக்னலை கடந்துவிட நினைக்கிற அவசரம்தான் மனிதர்களாகிய நம்மிடம் மேலோங்கி இருக்கிறது. மனிதமே செத்துக்கொண்டிருக்கிற நிலையில் மிருதம் பற்றி யோசிக்கத் தோன்றுமா என்ன?

பெங்களூரில் உள்ள கியூபா (Compassion Unlimited Plus Action) அமைப்பு, வாயில்லா ஜீவன்களின் வாழ்க்கைக்காகவே இயங்குகிறது. மனிதர்களில் மாற்றுத்திறனாளிகள் இருப்பதைப் போல மிருகங்களிலும் உண்டென்பதே பலருக்குப் புதிய தகவல். இந்நிலையில் ஊனமுற்ற, விபத்தில் அடிபட்டு உறுப்புகளை இழந்த வாயில்லா ஜீவன்களை மீட்டு, அவற்றின் எஞ்சிய வாழ்க்கையை மகிழ்ச்சியாகக் கழிக்க உதவுகிற அமைப்புதான் கியூபா.

மிருதம் வளர்ப்போம்!

“இந்த வருஷம் கியூபாவுக்கு சில்வர் ஜூபிளி. 1991-ம் வருஷம் கிறிஸ்டல் ரோஜர், சுபர்ணா கங்குலி மற்றும் டாக்டர் ஷீலா ராவ்னு மூன்று நபர்களால ஆரம்பிக்கப்பட்டது கியூபா. விபத்துல அடிபட்ட தெரு நாய்கள் உள்ளிட்ட ஜீவன்களுக்கான ஆம்புலன்ஸ் வசதி, குடும்பக் கட்டுப்பாடு, நாய், பூனைகளை விருப்பப்பட்டவங்களுக்கு தத்து கொடுக்கிறது, வாயில்லாத வயசான ஜீவன்களுக்கான புகலிடம், 24 மணி நேர மருத்துவ வசதி என முக்கியமான விஷயங்களை செய்திட்டிருக்கு. மிருக நலன் காப்பது பத்தின விழிப்பு உணர்வை கிராமங்கள் வரை  கொண்டு போறோம். வாயில்லா ஜீவன்கள் வாழ்வாதாரத்தோட சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும் செய்யறோம்’’ - கியூபா அமைப்பு பற்றிய அறிமுகம் தருகிறார் அதன் அறங்காவலர் சந்தியா மாடப்பா.

மிருதம் வளர்ப்போம்!

நகரமயமாக்குதல் என்கிற பெயரில் காடுகள் அழிக்கப்படுகின்றன. காட்டில் மட்டுமே வாழ்ந்து பழகிய மிருகங்களும் பறவைகளும் வாழ வழி தெரியாமல் வீதிக்கு வருகின்றன. நம்மிடமிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்ள வழி தெரியாமல் தவிக்கிற அவற்றை மனிதர்கள் எதிரிகளாகப் பார்க்கிறார்கள். அடித்துக் கொல்கிறார்கள். அழிக்கிறார்கள். இத்தகைய ஜீவன்களை மீட்டு புகலிடம் கொடுத்துக் காப்பாற்றுகிறது கியூபா அமைப்பின் பிரிவான ‘வைல்ட் லைஃப் ரெஸ்க்யூ அண்ட் ரீஹேபிளிட்டேஷன் சென்டர்’ (WRRC).

பறத்தல் பறவையின் இயல்பு. ஆனால், சட்டத்துக்குப் புறம்பாக அவற்றைப் பிடித்து வந்து கூட்டில் அடைத்து வளர்க்க விரும்புவோருக்கு விற்க நினைக்கிற ஒரு கும்பலிடமிருந்து ஜனவரி மாதம், 29 

மிருதம் வளர்ப்போம்!

கிளிகளைக்  காப்பாற்றியிருக்கிறது கியூபா. தவிர, இவர்களது டபிள்யூ.ஆர்.ஆர்.சி. பிரிவானது சர்க்கஸில் வித்தைக்காகப் பயன்படுத்தப் பட்ட 11 பறவைகளையும் மீட்டிருக்கிறது. “அந்தப் பறவைகளுக்கு சரியான உணவும் கொடுக்கலை. சிகிச்சையும் கொடுக்கலை; வித்தைக்காக மட்டும் பயன்படுத்தி இருக்காங்க. மோசமான நிலைமை யிலதான் பறவைகளை மீட்டோம். அதுலயும் ரெண்டு பறவைகளை எங்களால காப்பாத்த முடியலை.  உயிருக்குப் போராடற நிலைமை யில தேவாங்குகளைக்கூட எங்க கால்நடை மருத்துவர்கள் மீட்டெடுத்துட்டு வந்திருக்காங்க.  உடம்பு முழுக்க பொத்தல்களும், ரத்தக் காயங்களுமா அதுங்களைப் பார்க்கவே பரிதாபமா இருந்தது. பிளாக் மேஜிக் பண்றவங்க தேவாங்குகளை இப்படிப் பயன்படுத்தறாங்க. அது மட்டுமா... பார்க்கறதுக்கு முதலைகளைப் போல இருக்கிற பெரிய சைஸ் பல்லிகளைக்கூட நாங்க காப்பாத்தியிருக்கோம். அந்தப் பல்லிகளோட தோலும் தசையும் மருத்துவக் குணம் வாய்ந்ததுங்கிற நம்பிக்கையில அதுங்களைக்கூட வேட்டையாடறாங்க.

மிருதம் வளர்ப்போம்!

இன்னைக்கு எல்லாரும் வெளிநாட்டு நாய்கள்தான் வேணும்னு வாங்கறாங்க. ஆனா, கொஞ்ச நாள் வளர்த்துட்டு அதுங்களை தெருவுல விரட்டி விட்டுடறாங்க. இதை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது கியூபா. விற்பனைக்காக நாய்களை இனவிருத்தி பண்றவங்கக்கிட்டயும் இந்த விஷயத்தைப் பத்திப் பேசிட்டிருக்கோம். இந்த வருஷம் ஒரு பரிசோதனைக்கூடத்துலேருந்து பீகல் இன நாய்களை அதிக அளவுல மீட்டு, உண்மையிலேயே மிருகங்கள் மேல அன்புள்ள குடும்பங்களோட சேர்த்துவிட்டிருக்கோம்’’ - சந்தியா விவரிக்க... விழிகள் கசிகின்றன நமக்கு.

மிருதம் வளர்ப்போம்!

50 வயது பெண் யானை அனீஷா, அவளது பாதுகாவலர்களால் அதிகபட்ச வன்முறையை அனுபவித்தவள், இப்போது டபிள்யூ.ஆர்.ஆர்.சி. மாலூரில் அமைத்துள்ள யானைகள் பாதுகாப்பு மையத்தில் பத்திரமாக இருக்கிறாள். சென்னை ட்ரீ ஃபவுண்டேஷனுடன் இணைந்து மரக்காணத்திலும் யானைகளுக்கான புகலிடம் அமைத்திருக்கிறார்கள். காஞ்சிபுரம் கோயில்களைச் சேர்ந்த மூன்று யானைகளை வாஞ்சையுடன் பார்த்துக்கொள்கிறார்கள் இங்கே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism