Published:Updated:

பட்டதாரிகளை உருவாக்கும் பஞ்சாலை!

பட்டதாரிகளை உருவாக்கும் பஞ்சாலை!
பிரீமியம் ஸ்டோரி
பட்டதாரிகளை உருவாக்கும் பஞ்சாலை!

வித்தியாசம்ச.ஜெ.ரவி படங்கள்: தி.விஜய்

பட்டதாரிகளை உருவாக்கும் பஞ்சாலை!

வித்தியாசம்ச.ஜெ.ரவி படங்கள்: தி.விஜய்

Published:Updated:
பட்டதாரிகளை உருவாக்கும் பஞ்சாலை!
பிரீமியம் ஸ்டோரி
பட்டதாரிகளை உருவாக்கும் பஞ்சாலை!
பட்டதாரிகளை உருவாக்கும் பஞ்சாலை!

சுமங்கலித் திட்டம் என்ற பெயரில் இளம் பெண்களை சிறைப்பிடித்து, அடைத்துவைத்து கொடுமைப்படுத்துவதாக பஞ்சாலைகள் மீது பரபரப்பான புகார்கள் தொடர்ந்துகொண்டே இருக்கும் சூழலில், கோவையில் ஒரு பஞ்சாலை நிர்வாகம் இளம்பெண்களை பட்டதாரிகளாக்கி அழகு பார்த்து வருகிறது என்றால் உங்களை நம்ப முடிகிறதா?

8 மணி நேர வேலை, 4 மணி நேர படிப்பு, 12 மணி நேர ஓய்வு என இளம்பெண்கள் கல்வி பயில வழி வகுத்து சாதித்து வருகிறது கோவை கே.பி.ஆர். ஆலை நிர்வாகம். கடந்த 10 ஆண்டுகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், 10-ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை இங்கே தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். பெரிய பஞ்சாலையின் ஒரு பகுதி கல்விச்சாலையாகவே காட்சியளித்து வருகிறது. ஆண்டுதோறும் திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் சார்பில் பட்டமளிப்பு விழா நடக்கிறது. ஆயிரக்கணக்கானோர் பட்டம் பெற்று வருகிறார்கள்.

ஆலையைச் சுற்றி வலம் வந்த போது, நாம் கண்ட  காட்சிகள் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தின. பல ஆயிரம் பெண் தொழிலாளிகள் பணியாற்றும் இந்த ஆலையில், நம்மைக் கவனிக்கும் ஒவ்வொரு தொழிலாளியும், கைகளால் வணக்கம் சொல்லியபோது உதடுகள் ‘வாழ்க வளமுடன்’ என உச்சரித்தன.

பட்டதாரிகளை உருவாக்கும் பஞ்சாலை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கார்மென்ட் ஆலையில் வலம் வந்திருந்த போது, தையல் வேலை செய்துகொண்டிருந்த கோமதியைச் சந்தித்தோம். “எனக்கு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சொந்த ஊர். அப்பா கூலித்தொழிலாளி. 10-ம் வகுப்புல 480 மார்க் எடுத்தேன். குடும்பத்துல ரொம்ப கஷ்டம். மேற்கொண்டு படிக்க முடியலை. வேலைக்குப் போய்தான் ஆகணும்னு சொன்னாங்க. அப்போதான் என் ஃப்ரெண்ட் இந்த மில் பத்தி சொன்னா. உடனே எங்க அப்பாவை இந்த மில்லில் சேர்த்துவிட சொன்னேன். இங்கே வந்து வேலை செஞ்சுட்டே படிச்சேன். இங்கேயே டீச்சர் சொல்லி கொடுக்கறாங்க. புக்ஸ் உள்பட எல்லாத்தையும் கொடுக்கறாங்க. ஈஸியா படிச்சேன். இந்த வருஷம் ப்ளஸ் டூ-வில் 1118 மார்க் எடுத் திருக்கேன். இங்கேயே டிகிரியும் படிக்க முடியும். இன்னும் நிறைய படிக்கணும்னு ஆசை இருக்கு” என்றார் கோமதி.

பட்டதாரிகளை உருவாக்கும் பஞ்சாலை!

இன்னுமொரு மில் தொழிலாளி யான சித்ரா, 9-ம் வகுப்பு படித்தபோது பொருளாதார நெருக்கடியால், படிப்பை பாதியில் நிறுத்திவிட்டாராம். வெளியில் 2 ஆண்டுகள் வேலை செய்துவிட்டு இந்த ஆலைக்கு வந்தவர், 10-ம் வகுப்பில் 436 மதிப்பெண் எடுத்திருக்கிறார். கடந்த கல்வியான்டில் ப்ளஸ் டூ தேர்வு எழுதி 1137 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார். ‘‘என் சொந்த ஊர் வேலூர் பக்கத்துல சின்ன கிராமம். வீட்டுல ரொம்ப கஷ்டம். நான் வேலைக்குப் போயே ஆகணுங்கற சூழல் ஏற்பட்டுச்சு. அதனால படிப்பை நிறுத்திட்டு வேலைக்குப் போனேன். 2 வருஷம் இப்படியே போச்சு. இப்போ, 8 மணி நேரம் வேலை முடிஞ்ச உடனே, மில்லுக்குள்ளேயே 3-4 மணி நேரம் படிப்பேன். அடுத்து டிகிரி படிக்க போறேன்’’ என்றார் சித்ரா.

இந்த மில்லில் ப்ளஸ் டூ படித்து விட்டு ரிசப்ஷனிஸ்ட் வேலைக்கு வந்த திவ்யா, கார்மென்ட் தொழிற்சாலையின் கம்ப்ளெயின்ட்ஸ் ஆபீஸர்!

பட்டதாரிகளை உருவாக்கும் பஞ்சாலை!
பட்டதாரிகளை உருவாக்கும் பஞ்சாலை!

“ஐ.ஏ.எஸ் படிக்கணும்னு ஆசை இருந்துச்சு. ஆனா, ப்ளஸ் டூ-க்கு மேல படிக்க முடியலை. இங்கே வந்து பி.எஸ்.டபிள்யூ. படிச்சேன். தொடர்ந்து எம்.எஸ்.டபிள்யூ முடிச்சேன். ஹெச்.ஆர் துறையில வேலை பார்க்கணும்னு எனக்கு விருப்பம் இருந்துச்சு. இப்போ டிகிரி முடிச்சுட்டு, இங்கேயே பதவி உயர்வுல கம்ப்ளெயின்ட்ஸ் ஆபீஸர் ஆகிட்டேன்” என்கிறார் திவ்யா.

‘‘இங்கே முன்பு பணியாற்றிய பலர் காவல்துறை முதல் வருவாய்த்துறை வரை பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகிறார்கள். நாங்க தொழிலாளிகள்கிட்ட வேலை வாங்குறதை மட்டும் சிந்திக்கிறது இல்லை. அவர்களின் எதிர்காலம் நல்லா இருக்கணும்னு செயல்படுறோம். அதுக்கு வெறும் பணம் மட்டுமே பயன்படாது. பெண்களுக்கு கல்வி ரொம்ப அவசியம். படிக்க முடியாம வேலைக்கு போயே ஆகணுங்கற சூழல்ல இருக்குற பெண் களுக்கு கல்வி கிடைக்காம போயிடக் கூடாதுங் கறதுக்காகத்தான் இந்த சிஸ்டத்தை எங்க சேர்மன் கொண்டு வந்தார்” என்கிறார் ஆலையின் பொது மேலாளர் சோமசுந்தரம்.

பட்டதாரிகளை உருவாக்கும் பஞ்சாலை!
பட்டதாரிகளை உருவாக்கும் பஞ்சாலை!

கே.பி.ஆர் குழுமத்தின் தலைவர் கே.பி.ராமசாமியிடம் பேசினோம்... “1998-ம் ஆண்டுதான் இந்தத் திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கினோம். அப்போ சத்தியமங்கலத்துல இருக்குற எங்க மில்லுக்கு நான் போனபோது, மில்லுல வேலை பாக்குற பொண்ணு திடீர்னு எங்கிட்ட வந்து பேசிச்சு. ‘நான் நல்லா படிப்பேன். ஆனா, வசதியில்லை. என்னை கொண்டுவந்து மில்லுல விட்டுட்டாங்க. நீங்க உதவி செஞ்சீங்கன்னா நான் படிப்பேன்’னு சொல்லுச்சு. உடனே குரூப் மீட்டிங் போட்டு, ‘டிஸ்டன்ஸ் எஜுகேசன்ல படிக்க முடியுமா’னு கேட்டேன். ‘முடியும்’னு சொன்னாங்க. அந்த வருஷமே திட்டத்தைத் தொடங்கினோம். மில்லுலயே கிளாஸ் ரூம் ரெடி பண்ணி, ஆசிரியர்களையும் நியமிச்சோம். முதல் வருஷம் 10-15 பேர்தான் வந்திருப்பாங்க. அதுக்கு அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா படிக்கறவங்க எண்ணிக்கை அதிகமாச்சு. 3 வருஷத்துக்கு அப்புறம் டிகிரி படிக்கவும் ஏற்பாடு பண்ணினோம். எல்லோரும் ரொம்ப நல்லா படிக்கறாங்க.

பட்டதாரிகளை உருவாக்கும் பஞ்சாலை!

கடந்த வருஷம் ப்ளஸ் டூ எக்ஸாம் எழுதின 187 பேர்ல 186 பேர் பாஸ். ஒரு பொண்ணு 1143 மார்க் எடுத்திருந்தது. இந்த வருஷம் எக்ஸாம் எழுதின 181 பேரும் பாஸ். ஃபர்ஸ்ட் மார்க் 1149.  வழக்கமாக இங்கே படிச்சு 1000 மார்க்குக்கு மேல எடுத்தா 10 ஆயிரம் ரூபாய், 1050-க்கு மேல எடுத்தா 25 ஆயிரம், 1100-க்கு மேல எடுத்தா 50 ஆயிரம், 1150-க்கு மேல எடுத்தா 1 லட்ச ரூபாய் பணம் கொடுப்போம். இந்த முறை 1149 மார்க் எடுத்திருந்த ஒரு பொண்ணு, ஒரு மார்க்ல 1 லட்சம் போச்சுனு சொல்லி ஃபீல் பண்ணுச்சு. அந்த பொண்ணுக்கு ஒரு லட்சம் கொடுத்துட்டோம். சத்தியமங்கலம், நீலம்பூர், அரசூர், கருமத்தம்பட்டி, தெக்கலூர்னு எங்க மில்லுல 13 ஆயிரம் பேர் பட்டம் வாங்கியிருக்காங்க. போலீஸ், வி.ஏ.ஓ உள்ளிட்ட பல வேலைகள்ல இருக்காங்க. எங்க மில்லில் வேலை செய்த ஐஸ்வர்யா என்ற பெண், ஐ.ஏ.எஸ். எக்ஸாம் எழுதி விளையாட்டு ஆணையத்தில் உதவி ஃபிஸிக்கல் டைரக்டராக பணிக்குச் சேர்ந்துள்ளார். இப்போ ஃப்ரீ ஐ.ஏ.எஸ் அகடாமியும் நடத்தறோம். பொருளாதார நிலைமையை சரிசெஞ்சுக்கத்தான் பெண்கள் வேலைக்கு வர்றாங்க. அதைவிட, கல்வி ரொம்ப முக்கியம். அதுதான் பெண்களுக்கு கூடுதல் தைரியம் கொடுத்து, தன்னம்பிக்கையோட வாழ வழிவகுக்கும்” - தீர்க்கமாகச் சொல்கிறார் கே.பி.ராமசாமி.

வேலையோடு கல்வியையும் போதிக்கும் ஆலைக்குப் பாராட்டுகள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism