Published:Updated:

``கிருஷ்ணன் என் மூத்த பிள்ளை!’’

``கிருஷ்ணன் என் மூத்த பிள்ளை!’’
பிரீமியம் ஸ்டோரி
``கிருஷ்ணன் என் மூத்த பிள்ளை!’’

பூஜை அறைபிரேமா நாராயணன் - படங்கள்: எம்.உசேன்

``கிருஷ்ணன் என் மூத்த பிள்ளை!’’

பூஜை அறைபிரேமா நாராயணன் - படங்கள்: எம்.உசேன்

Published:Updated:
``கிருஷ்ணன் என் மூத்த பிள்ளை!’’
பிரீமியம் ஸ்டோரி
``கிருஷ்ணன் என் மூத்த பிள்ளை!’’
``கிருஷ்ணன் என் மூத்த பிள்ளை!’’

சென்னை கோபாலபுரத்தில் உள்ள லெட்சுமிபுரம். ‘இது சென்னைதானா?’ என வியக்கும் அளவுக்கு அமைதியான சூழலில் இருக்கிறது பிரபல இதய நோய் நிபுணர் டாக்டர் சிவகடாட்சத்தின் இல்லம். வீடு முழுவதுமே கலைநயம் மிளிர்ந்தாலும், ஒரு குட்டி யில்போல தெய்விக மணத்துடன் திகழ்கிறது பூஜை அறை.

வீடு கட்டும்போதே பூஜை அறைச் சுவரில், யானைகள் பூச்சொரிவது போலவும், அன்னங்கள் நீந்துவது போலவும் புடைப்புச் சிற்பங்கள்போல ஸ்தபதியை வைத்து வடிவமைத்துக் கட்டியிருக்கிறார்கள். யானை மகாவிஷ்ணுவின் அம்சம், அன்னபட்சி செல்வத்தின் அடையாளம் என்பதால் இந்த ஏற்பாடாம். பார்க்கவே மங்களகரமாக இருக்கிறது. பூஜை அறை முழுவதும் சுவாமிகளின் திருவுருவங்கள் நிறைந்திருந்தாலும், இல்லம் முழுக்க வியாபித்திருப்பது கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணாதான்.

வெள்ளியில், வெண்கலத்தில், மரத்தில், மண்ணில், கண்ணாடியில், காகிதக் கூழில், தந்தத்தில், சந்தனத்தில் வெண்ணெய் தின்றபடி ஒரு கண்ணன், குழல் ஊதியபடி இன்னொருவன், ராதையுடன் காட்சி தரும் மற்றொரு கிருஷ்ணன் என நீக்கமற நிறைந்திருக்கிறான்.

``கிருஷ்ணன் என் மூத்த பிள்ளை!’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காமாட்சி விளக்கு ஏற்றி, ஸ்படிக லிங்கத்துக்கு அபிஷேகம் முடித்து, கனி வகைகளை நைவேத்தியம் செய்து, ஆரத்தியோடு பூஜையை நிறைவு செய்கிறார், இல்லத்தின் அரசியும் எழுத்தாளருமான சாந்தகுமாரி சிவகடாட்சம். ‘கிருஷ்ணன்மேல் என்ன அப்படி ஒரு அபரிமித மான காதல் மேடம்?’ என்றதும் கலகலவெனச் சிரிக்கிறார்.

‘‘கிருஷ்ணன் எனக்குக் கடவுள் மட்டுமில்ல... என்னோட மூத்த பிள்ளை. எங்களுக்குக் கல்யாணம்

``கிருஷ்ணன் என் மூத்த பிள்ளை!’’

ஆன புதுசுல, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் பக்கத்துல வாங்கினதுதான் இந்த நீல நிறக் கிருஷ்ணர். அப்போ எனக்கு சீடை, முறுக்கு எல்லாம் பண்ணத் தெரியாது. வெண்ணெய், பால், தயிர்னு கண்ணனுக்குப் பிடிச்சதை வெச்சுக் கும்பிட்டேன். அந்த வருஷம் ‘கன்சீவ்’ ஆனதால, மனசுக்குள்ள இந்த நீலக் கண்ணனை என் மூத்த பையனாவே வரிச்சுக்கிட்டேன்.

எங்க மகன் குகனுக்குக் கல்யாணம் நிச்சயம் செய்தப்போ, மூத்த பிள்ளை இவனை விட்டுட்டு இளையவனுக்கு பண்ணக் கூடாதுனு, இவனுக்காக ஒரு ருக்மணி சிலையைத் தேடிப் பிடிச்சு வாங்கிவந்து, சீர்வரிசை, விருந்தோட கல்யாணம் பண்ணி வெச்சோம். அதுதான், இதோ பக்கத்தில் நிக்கிற ருக்மணி.பொதுவா, நல்ல கணவன் கிடைக்கணும்னு கன்னிப் பெண்கள் மார்கழி  நோன்பிருப்பாங்க. ஆனா, நான் நல்ல மருமகள் கிடைக்கணும்னு மார்கழி நோன்பிருந்து இந்தக் கண்ணனுக்கு பூஜை பண்ணினேன். எங்க மருமகள் ஐஸ்வர்யா வந்தார். எல்லாம் அவன் அருள்!”
- கண்ணனையே கண்கள் நோக்க, ஒருவித லயிப்புடன் பேசுகிறார் சாந்தகுமாரி.

``கிருஷ்ணன் என் மூத்த பிள்ளை!’’

‘‘நடுநாயகமாக நிற்கிற அந்தப் பளிங்குக் கிருஷ்ணனும் பக்கத்தில் பசுவும் அம்சமா இருக்கு... ஆர்டர் பண்ணி வாங்கினதா?”

‘‘அந்தக் கிருஷ்ணர் மதுராவில் இருந்து வந்தார். பசு, சுவிட்ஸர் லாந்தில் இருந்து வந்தது!” என்று நம்மை புருவங்கள் உயர்த்த வைத்துத் தொடர்கிறார்...

‘‘இவருக்கு ஒரு கான்ஃபரன்ஸுக் காக டெல்லி போயிருந்தப்போ, ஆக்ரா போற  வழியில் மதுராவுக்குப் போனோம். வழியில் ஒரு கடையில் இந்தப் பளிங்குச் சிலையைப் பார்த்தேன். அந்தக் கண்களில் ஓடும் உயிரோட்டத்தைப் பார்த்துட்டு  நகர முடியாம அங்கேயே நின்னுட்டேன். உடனே வாங்கிட்டேன். விலை லட்ச ரூபாய்க்கும் மேல. எடை 52 கிலோ. எப்படி அங்கேயிருந்து கொண்டுவர்றது?!

ஆனா, அவன் அருளாலே அவனே லாரியில் பத்திரமா வந்து இறங்கிட்டான். எப்பவோ யதேச்சையா வாங்கி வெச்சிருந்த புல்லாங்குழல் அவன் கைகளுக்குச் சரியா பொருந்தியது மகா ஆச்சர்யம்.

சுவிட்ஸர்லாந்தில் ஒரு காபி ஷாப்பில் இருந்த வித விதமான மாடுகளில் ஒண்ணை வாங்கி, அதையும் ஆயிரக்கணக்கான மைல்கள் தாண்டி, பத்திரமா கொண்டுவந்தோம். இந்தக் கண்ணனுக்காகவே பிறந்த மாதிரி அழகா அமைஞ்சு போச்சு சுவிஸ் பசு!”

பூஜை அறையில் இருந்த கருமை நிற பேப்பர் மெஷ் முருகன், வெள்ளி தன்வந்திரி உருவப்படம், இயேசுபிரான், மசூதி இப்படி எல்லாவற்றுக்குமே குட்டிக் குட்டியாகத் தகவல்கள் வைத்திருக்கிறார் சாந்தகுமாரி.

``கிருஷ்ணன் என் மூத்த பிள்ளை!’’

‘‘டாக்டரோட ஒரு பேஷன்ட் கொடுத்த அன்புப் பரிசு இந்த முருகன். என்ன வேண்டிக்கிட்டாலும் நடத்தி வைப்பார். என் ஃப்ரெண்ட்ஸ் பலர், புதுசா ஏதாவது வாங்கினா இவர் காலடியில வெச்சு எடுத்துட்டுப் போவாங்க.

தன்வந்திரிதான் டாக்டர் சாமி. எங்க டாக்டருக்கு வந்த பரிசுதான் இதுவும். வெள்ளியில் ஸ்படிக லிங்க அபிஷேக செட்டும், ருத்ராட்சமும் என் மகன் நேபாளம் போனப்போ வாங்கி வந்தது. வீட்டில் இருக்கிறப்போ அபிஷேகம் பண்ணுவேன். வெளிநாடுகளுக்குப் போறப்போ கைக்கு அடக்கமா சின்னதா ஒரு ஸ்படிக லிங்கமும் பிள்ளையாரும் மறக்காம கொண்டுபோயிருவேன். கொஞ்சம் பன்னீரில்  அபிஷேகமும், ரெண்டு பாதாம் பருப்பு நைவேத்தியமும் பண்ணிடுவேன்...

ஒரு மருத்துவரோட மனைவியா எனக்கு வாழ்க்கையில் நிலையாமை புரியும். ஒரு  மனுஷன் மரணப்படுக்கையில் இருக்கிறப்போ, அவனுடைய உறவுகள் எப்படி நடந்துக்கிறாங்க என்பதை நேரிலேயே பார்த்திருக்கேன். ‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது’ என்ற கீதையில் எனக்கு மயக்கம் ஜாஸ்தி. அதனால நமக்கு மேல இருக்கும் சக்திதான் நம்மை வழிநடத்துது என்பதில் எங்களுக்கு ஆழ்ந்த நம்பிக்கை உண்டு.

நான் எதைத் தவறவிட்டாலும், தினசரி உடற்பயிற்சியையும் பூஜையையும் விடமாட்டேன். உடலுக்கு எக்சர்சைஸ், ஆத்மாவுக்கு பிரார்த்தனை யும் பூஜைகளும்!” - நிர்மலமாகச் சிரிக்கிறார் சாந்தகுமாரி.

டைனிங் டேபிள் அருகே இருக்கும் மரத்தாலான மாதவக் கிருஷ்ணன், அதை ஆமோதிப்பதுபோல புன்னகைத்தபடி குழலூதி நிற்கிறான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism