Published:Updated:

ஆண்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்! - அவள் சினிமா

ஆண்கள் அவசியம்  பார்க்க வேண்டிய படம்! - அவள் சினிமா
பிரீமியம் ஸ்டோரி
ஆண்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்! - அவள் சினிமா

பொன்.விமலா, எம்.உசேன்

ஆண்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்! - அவள் சினிமா

பொன்.விமலா, எம்.உசேன்

Published:Updated:
ஆண்கள் அவசியம்  பார்க்க வேண்டிய படம்! - அவள் சினிமா
பிரீமியம் ஸ்டோரி
ஆண்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்! - அவள் சினிமா
ஆண்கள் அவசியம்  பார்க்க வேண்டிய படம்! - அவள் சினிமா

ணுக்குப் பெண் சமம் என்று பேசிக்கொண்டே இருக்கிறோம். ஆனால், சொந்த வீடுகளிலேயே பெண்கள் அடக்கி ஒடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதுதான் அதிகம் என்பதை பலரும் உணர மறுக்கிறோம். இதைப்பற்றிய ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்தான் பார்ச்டு (parched) என்கிற ஹிந்தித் திரைப்படம். லீனா யாதவ் இயக்கத்தில், வெளியாகி இருக்கும் இந்தப் படம் காட்சிக்கு காட்சி, சமூகத்தை நோக்கிக் கேள்விகளாக வீசிக்கொண்டே இருக்கிறது.

இளம்வயதிலேயே திருமணம் முடிந்து, கணவனால் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகி, கைம்பெண்ணாகும் ராணி (தனிஷ்தா சாட்டர்ஜி), குழந்தை இல்லை என்பதால் குடிகாரக் கணவனால் தினமும் அடித்துத் துன்புறுத்தப்படும் லஜ்ஜோ (ராதிகா ஆப்தே), பாலியல் தொழிலும் செய்யும் நடன மங்கை பிஜ்லி (சுர்வீன் சாவ்லா), காதலனை கைவிட்டு இன்னொருவனை கட்டாயத்தின்பேரில் மணக்கும் ஜானகி (லேஹர் கான்) - இந்த நான்கு பெண்கள்தான் படத்தின் உயிர். நிஜக்கதையை நேரில் பார்ப்பது போலவே திரைக்கதையை நகர்த்தியிருப்பது சிறப்பு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராஜஸ்தானின் கிராமம் ஒன்றில் வாழும் கைம்பெண் ராணி, தன் 15 வயது மகனுக்கு ஜானகி என்ற இளம்பெண்ணை திருமணம் முடித்து வைக்கிறாள். கணவனைப் போலவே மகனும் மருமகள் ஜானகியைத் துன்புறுத்துகிறான். தன் மகனிடம் சிக்கிக் கொண்டு தவிக்கும் மருமகளை எண்ணி வருத்தப்படும் ராணி, காதலனுடனேயே அவளை அனுப்பும் காட்சி, தாயுள்ளத்தின் பிரதிபலிப்பு.

கணவனிடம் அடிவாங்கிக்கொண்டு, தன் தோழி ராணியின் வீட்டுக்கு வருகிறாள் லஜ்ஜோ. அவளின் மேலாடையைக் கழற்றிவிட்டு காயத்துக்கு மருந்து போடுகிறாள் ராணி. பதிலுக்கு ராணியின் மேலாடையை விளையாட்டாக கழற்றும் லஜ்ஜோ, அவள் இதயம் படபடத்துத் துடிப்பதை உணர்கிறாள். அவளுக்கு செக்ஸ் தேவை என்பதை ஒரு பெண்ணாக இருந்து உணர்கிறாள் லஜ்ஜோ. கணவனை இழந்த பிறகு 15 ஆண்டுகளாக அந்தத் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளாமலே இருப்பதாக அவள் சொல்வதும், மேலாடை இல்லாமல் இரண்டு பெண்கள் ஒருவரை ஒருவர் தழுவிக் கொள்வதுமான இந்த காட்சி, செக்ஸ் குறித்த இயற்கைக்கு மீறிய கட்டுப்பாடுகள் மீது ஆவேசமான கேள்விக்கணைகளைத் தொடுக்கிறது!

ஆண்கள் அவசியம்  பார்க்க வேண்டிய படம்! - அவள் சினிமா

லஜ்ஜோ... மலடி பட்டத்துடன் தினம் தினம் கணவனிடம் உதைபடுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் பிஜ்லி கொடுக்கும் யோசனையும் அதன்பின் வரும் காட்சிகளும் ஜீரணிக்கக் கடினமானவையே. ஆனால், யதார்த்த சூழலை விவரிக்க இதைத் தவிர தனக்கு வேறு வழிகள் இல்லை என்பதைக் காட்சிகள் மூலமாகவே புரிய வைக்கிறார் இயக்குநர். லஜ்ஜோவைப் பொறுத்தவரை போதை இரவுகளில் தன் மேல் காட்டுமிராண்டித்தனமாக கணவன் விழுவதும் தொடர்வதும்தான் செக்ஸ். ஆனால், செக்ஸ் என்பது புனிதமான ஓர் உறவு என்பதை அவளுக்கு உணர்த்துகிறான் பிஜ்லியின் நண்பன். அவளை அவன் தொட்டு அணுகுவது, ஒரு பெண்ணாக மனதிலும் உடலிலும் அவள் உச்சபட்ச நிலையை அடைவது என கொஞ்சம் பிசகினாலும் ஆபாசமாகிவிடக்கூடிய காட்சிகளை, கவனமாகக் கையாண்டிருக்கிறார்.

என்னதான் பாலியல் தொழில் உல்லாசத் தொழில் என்று வர்ணிக்கப்பட்டாலும் அங்கேயும் வலிகளையும் காயங்களையும் அடைகிறவள் பெண் மட்டுமே என்பதை நமக்குக் கடத்தும் பாத்திரம்தான் பிஜ்லி.

இந்த நான்கு பெண்களும் ஓர் இடத்துக்குப் பயணம் செய்யும்போது... ‘கெட்ட வார்த்தைகள்’ என்று சொல்லப்படுபவை எல்லாமே, பெண்களைத் திட்டுவதற்காக மட்டுமே ஆண் வர்க்கத்தால் உருவாக்கப் பட்டிருப்பதை சுட்டிக்காட்டும் இவர்கள், ஆண்களைச் சாடும் புதிய கெட்ட வார்த்தை களை உருவாக்கி, அந்த வனாந்தரத்தில் உரக்கச் சொல்லிச்சொல்லி உற்சாகப்பட்டுக் கொள்ளும் காட்சி, ஆணாதிக்க சமூகத்தின் மீதான சம்மட்டி அடி.

பார்ச்டு என்றால் ‘வறண்ட’ என்று பொருள். இயற்கையின் ஏற்பாடுகளையும் யதார்த்த வாழ்க்கையும் புரியாமல் வறண்டு கிடக்கும் சமூகத்தை சீரமைப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism