Published:Updated:

டீன் 16 - விசாலினி - அறிவால் பெருமை சேர்ப்பேன்!

டீன் 16 - விசாலினி - அறிவால் பெருமை சேர்ப்பேன்!
பிரீமியம் ஸ்டோரி
டீன் 16 - விசாலினி - அறிவால் பெருமை சேர்ப்பேன்!

ஐ.க்யூ. அழகிசிபி

டீன் 16 - விசாலினி - அறிவால் பெருமை சேர்ப்பேன்!

ஐ.க்யூ. அழகிசிபி

Published:Updated:
டீன் 16 - விசாலினி - அறிவால் பெருமை சேர்ப்பேன்!
பிரீமியம் ஸ்டோரி
டீன் 16 - விசாலினி - அறிவால் பெருமை சேர்ப்பேன்!
டீன் 16 - விசாலினி - அறிவால் பெருமை சேர்ப்பேன்!
டீன் 16 - விசாலினி - அறிவால் பெருமை சேர்ப்பேன்!

த்தாவது, பன்னிரண்டாவது  எல்லாம் படிக்காமலேயே கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இன்ஜினீயரிங் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டு இருக்கிறார் விசாலினி. எதையும் சுலபமாக கற்றுக்கொள்ளும் அபூர்வ ஆற்றல் உடைய இவரது ஐ.க்யூ லெவல் 225.

“ஏழு மாசத்துலேயே குறை பிரசவத்துல பிறந்தேனாம். அதனால, குச்சி மாதிரி இருந்தேனாம். இன்குபேட்டர்ல வெச்சு எப்படியோ என்னைக் காப்பாத்திட்டாங்க. சின்ன வயசுல எதைப் பார்த்தாலும் கேள்வி கேட்பேனாம். `வயசுக்கு மீறிய வளர்ச்சி’னு, என் மூன்றரை வயதில், ஐந்து முறை ஐ.க்யூ டெஸ்ட் எடுத்தாங்க. அப்பதான் என் ஐ.க்யூ லெவல் 225 இருப்பதை கண்டுபிடிச்சாங்க (ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஐ.க்யூ - 190, ஸ்டீபன் ஹாக்கிங் ஐ.க்யூ - 160, பில் கேட்ஸ் ஐ.க்யூ. 160). மூன்றரை வயசுக்கு இந்த ஐ.க்யூ ரொம்ப அதிகம்னு சொன்னாங்க. ‘இந்த அறிவை ஆக்கத்துக்கும் பயன்படுத்தலாம். அழிவுக்கும் பயன்படுத்தலாம். எல்லாம் உங்க வளர்ப்பில்தான் இருக்கு’னு அந்த ஸ்பெஷலிஸ்ட் சொல்ல... அம்மா வேலையை விட்டுவிட்டு, என்னை கவனிப்பதிலேயே முழுநேரத்தையும் செலவழிச்சாங்க.

ஒண்ணாவது, ரெண்டாவதை ஒரு வருஷத்துலேயே படிச்சு முடிச்சேன். அப்படியே வேக வேகமா படிச்சுட்டு வர... ஆறாவது படிக்கும்போது ‘மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடும்போது பல மடங்கு வேகமா படிக்கறா... உங்க மக எங்க ஸ்கூலுக்கு வேணாம்’னு டி.சி கொடுத்துட்டாங்க. இதுனா லேயே ஆறாவது படிக்கும்போது நாலு ஸ்கூல் மாறினேன். டீச்சர் கேட்கும் ஒரு கேள்விக்கு நான்கு சரியான பதில்கள் சொல்வேன்.

எப்படியோ ஒன்பதாவதை என் 8 வயசுலயே வேகமாக படிச்சு முடிச்சுட்டேன்!

இன்ஜினீயரிங் முடித்தவங்க எழுதும் சி.சி.என்.ஏ. பாடங்களை நாலே மாதத்தில் படித்து, என் பத்து வயசுல தேர்வு எழுதி 90 சதவிகித மதிப்பெண் வாங்கினேன். இது உலக சாதனைனு சொன்னாங்க’’ என்கிற விசாலினி, அடுத்த ஓராண்டில் எழுதிய 12 தேர்வுகளில், ஐந்தில் உலக சாதனை!

‘‘இந்த நேரத்துலதான் ஐ.ஓ.பி-ல... வங்கிகளை எப்படி டெவலப் பண்ணலாம்னு ஒரு மணி நேரம் பேசினேன். அதைத் தொடர்ந்து பி.ஹெச்.டி மாதிரியான கம்ப்யூட்டர் கோர்ஸை ஹரியானாவில் தங்கிப் படிக் கறதுக்கான வாய்ப்பு ஐ.ஓ.பி மூலமா கிடைச்சது. ரெண்டு வருஷம் அம்மாவும் என் கூடவே இருந்தாங்க. பிறகு, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிக்கக் கூப்பிட் டாங்க. ஒரு வெளிநாட்டு கம்பெனி 153 கோடி ரூபாய்க்கு வேலைக்குக் கூப்பிட்டாங்க. எங்க அப்பா ‘வேண்டாம்’னு சொல்லிட்டார்.

அப்புறம் கூகுள் நிறுவனம் நடத்திய சர்வதேச மாநாட்டில் `கூகுளின் இளவயதுப் பேச்சாளர்’ அங்கீகாரத்தை கொடுத்தாங்க. TEDx சர்வதேச மாநாட்டில் ‘இளம் TEDx பேச்சாளர்’ பட்டம் கொடுத்தாங்க. போன வருஷம் பிரதமர் மோடியுடன் பேசும் வாய்ப்பு கிடைச்சது. ‘இந்த நாட்டுக்கு நான் எப்படி அறிவால் பெருமை சேர்ப்பது’னு கேட்டேன். ‘இந்த இளம் வயதில் நீ  செய்துள்ள சாதனையே இந்திய நாட்டுக்கான சேவைதான்’னு பாராட்டினார்’’ என்று உற்சாகமாகிற விசாலினிக்கு, தன் அறிவை என்றும் நாட்டுக்கும் மக்களுக்கும் பயன்படுத்தவே ஆசையாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism