Published:Updated:

டீன் 18 - நஃபீசா சாதிக் - என்னோட டைம்பாஸ் இதுதான்!

டீன் 18 - நஃபீசா சாதிக் - என்னோட டைம்பாஸ் இதுதான்!
பிரீமியம் ஸ்டோரி
டீன் 18 - நஃபீசா சாதிக் - என்னோட டைம்பாஸ் இதுதான்!

வெற்றித் துடுப்பாளிஇரா.கலைச் செல்வன்

டீன் 18 - நஃபீசா சாதிக் - என்னோட டைம்பாஸ் இதுதான்!

வெற்றித் துடுப்பாளிஇரா.கலைச் செல்வன்

Published:Updated:
டீன் 18 - நஃபீசா சாதிக் - என்னோட டைம்பாஸ் இதுதான்!
பிரீமியம் ஸ்டோரி
டீன் 18 - நஃபீசா சாதிக் - என்னோட டைம்பாஸ் இதுதான்!
டீன் 18 - நஃபீசா சாதிக் - என்னோட டைம்பாஸ் இதுதான்!
டீன் 18 - நஃபீசா சாதிக் - என்னோட டைம்பாஸ் இதுதான்!

சில வருடங்களுக்கு முன்பு, ‘ரோயிங் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா’வின் செலக்‌ஷன் கமிட்டியினர் அசாமில் முகாமிட் டிருந்தார்கள். இந்திய ரோயிங் டீமுக்கு வீரர்களைத் தேர்வு செய்வது அவர்களின் பணி. வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் பலர் அங்கு வந்திருந்தனர். ரோயிங் டீமில் சேர சில அடிப்படைத் தகுதிகள் வேண்டும். தொடர்ந்து 50 மீட்டர் தூரத்துக்கு நிறுத்தாமல் நீச்சலடிக்க வேண்டும்.

இயற்கையாகவே வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் உயரம் குறைவு. அங்கு வந்திருந்தவர்களில் ஒருவர் கூட குறிப்பிட்ட உயரத்தில் இல்லை. பலரால் சரியாக நீச்சலடிக்க முடியவில்லை. `இங்கு தேர்வுக்காக வந்ததே தவறோ...’ என்று அவர்கள் நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில் ஒரு பெண் அங்கு வந்தார்.  அவரது உயரம் 163 சென்டிமீட்டர்தான். இவரும் தேற மாட்டார் என்றே எல்லோரும் நினைத்தனர். அவர் தன் நீச்சல் மற்றும் ரோயிங் திறமைகளைக் காட்டினார். அனைவரும் வாயடைத்து நின்றனர். அசாமுக்கு மட்டுமல்ல... இந்தியாவுக்கே இன்று பெருமைத் தேடி தந்திருக்கும்  அவர்தான் நஃபீசா சாதிக்!

2013-ஆம் ஆண்டு உத்தரகண்டில் நடந்த தேசிய ரோயிங் போட்டியில் தங்கம் வென்றார். அதுமட்டுமல்ல... தேசிய சாதனையும் படைத்தார். அதே ஆண்டில் உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற சர்வதேசப் போட்டியில் வெள்ளி வென்றார். தொடர்ந்து 2014, 2015 ஆண்டுகளில் சீனாவில் நடந்த சர்வதேசப் போட்டிகளில் வெண்கலம் என தொடர் சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்.

“பள்ளி முடிந்ததுமே கெளஹாத்தியில் உள்ள திகலிஃபுகுரி குளத்தில் பயிற்சிக்கு கிளம்பிவிடுவேன். விடுமுறை நாட்களில் என் அவுட்டிங், என்னோட டைம்பாஸ், கனவு... எல்லாமே ரோயிங்தான்...” என்கிற நஃபீசா இப்போது கல்லூரி படிப்புக்காக புனேவுக்கு இடம்பெயர்ந்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டீன் 18 - நஃபீசா சாதிக் - என்னோட டைம்பாஸ் இதுதான்!

வளர்ச்சியடைந்த மாநிலங்களிலேயே ரோயிங் விளையாட்டுக்கு சரியான வசதிகள் இல்லாத சூழலில், வடகிழக்கு மாநிலங்களின் நிலையோ மிகமிக மோசம். ஆனால், இருக்கும் வசதிகளைக்கொண்டே, கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் மிளிர்ந்து தன்னை நிரூபித்து வருகிறார் நஃபீசா.

‘‘என் மகள் வெற்றி பெறும்போதெல்லாம், அந்த வெற்றிகள் இறைவன் அளிக்கும் பரிசு என்றே நினைத்துக்கொள்கிறேன். எதிர்காலத்தில் இந்த விளையாட்டுக்குப் போதுமான வசதிகளை அரசாங்கம் செய்து கொடுத்தால் இன்னும் நிறைய வீரர்கள் உருவாக வாய்ப்பிருக்கிறது” என்று, தன் கோரிக்கையையும் முன்வைக்கிறார் நஃபீசாவின் அப்பா சாதிக் ரஹ்மான்.

“இலக்கை அடையும் ஒவ்வொரு முறையும்  நான் வெற்றியடைந்த உணர்வே எனக்கு வந்ததில்லை. என் தேசத்தின் கொடி உயரத்தில் பறக்கும் என்கிற மகிழ்ச்சிப்பெருமிதம்தான் என் மனதில் என்றும் இருக்கும்” என்று உணர்வு பூர்வ மாகக் கூறி முடிக்கிறார் நஃபீசா சாதிக். நிச்சயம் உங்கள் வெற்றிகள் தொடரும்... வாழ்த்துகள் நஃபீசா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism