Published:Updated:

யார் கெத்து?

யார் கெத்து?
பிரீமியம் ஸ்டோரி
யார் கெத்து?

வி.ஐ.பி ஆராய்ச்சிப.சூரியராஜ்

யார் கெத்து?

வி.ஐ.பி ஆராய்ச்சிப.சூரியராஜ்

Published:Updated:
யார் கெத்து?
பிரீமியம் ஸ்டோரி
யார் கெத்து?
யார் கெத்து?

சங்களைவிட பொண்ணுங்கதான் கெத்துனு சொல்லிக்க எத்தனையோ விஷயம் இருந்தாலும், அதில் முத்தான 19 பாயின்ட்டுகளை மட்டும் இங்கே தொகுத்து வழங்கியிருக்கோம். 19-ம் நம்பரை எப்படியோ இங்கேயும் கொண்டு வந்துட்டோம்ல!

1.
பசங்களுக்கு பலநேரம் பச்சை கலருக்கும் நீல கலருக்குமே வித்தியாசம் புலப்பட மாட்டேங்குது. பொண்ணுங்க எப்படித்தான் பிங்க் கலரிலேயே பத்து விதமான பிங்க் கலர்களை கண்டுபிடிக்கிறீங்களோ?

2. ஹேர்ஸ்டைல் மெயின்டெய்ன் பண்ண குழாயில் தண்ணி எடுத்து தலையில் தெளிச்சுக்கிட்டு தலைவலி வந்து திரியுறாங்க பசங்க. பொண்ணுங்களோ ஷாம்பு, கண்டிஷனர், ஹேர் ஆயில்னு அத்தனையையும் வாங்கி அசால்டா யூஸ் பண்றீங்க... அமேஸிங்!

3. அசைன்மென்ட் முடிக்க இன்னைக்குதான் கடைசி நாள்னு அன்னைக்குதான் பசங்களுக்கு ஞாபகமே வரும். பொண்ணுங்களோ, ஆறு நாள் முன்னாடியே முடிச்சுட்டு, தலைப்புக்கு கீழே கத்திரிப்பூ கலரில் கோடு போட்டு முதல் ஆளா கையெழுத்து வாங்கிடுறீங்க... சூப்பர்!

4. பசங்க துணி செலக்ட் பண்ணும்போது பத்து நிமிஷம் தாண்டி ஒரு செகண்ட் அதிகமாச்சுனாலும் கடைக்காரரே குறுகுறுனு சந்தேகமா பார்ப்பார். நீங்களோ கொஞ்சம்கூட அசராமல் ஒரு மிடி வாங்க கடைக்குள்ளேயே ஒன்பது கிலோமீட்டருக்கு மேலே நடந்துடுறீங்களே... வாட் எ பவர்!

5. ஒரு நூறு லைக் வாங்க ராப்பகலா கண்விழிச்சு பசங்க ஃபேக் ஐ.டி உருவாக்குறதுல இருந்தே தெரியுது... ஃபேஸ்புக்லேயும் பொண்ணுங்கதான் ‘கெத்து’னு! நீங்க ‘குட் மார்னிங்’னு ஸ்டேட்டஸ் போட்டாலே ஐந்நூறு லைக் வருதே பகவானே..!

6. அது எப்படிங்க பசங்கள ‘படக்... படக்’னு பிளாக் பண்ணி விடுறீங்க. பல பசங்களுக்கு இன்னும் பிளாக் பண்றது எப்படினே தெரியாது!

7. கொரியன் நாடகமெல்லாம் பார்க்குறீங்களே, கொரிய மொழி உங்களுக்குச் சத்தியமா புரியுதா? எங்களுக்கு அதில ஹீரோ யாரு? ஹீரோயின் யாருனே கண்டுபிடிக்க முடியலை. அம்புட்டு பேரும் ஒரே மாதிரிதான் தெரியுறாய்ங்க!

8. டக் ஃபேஸ், ஃபிஷ் கேப், மாடல் பௌட்னு முகத்தை அஷ்டகோணத்திலும் மாற்றி, நவரசத் தையும் பொழிஞ்சு, பத்து நிமிஷத்துக்குள்ளேயே பலநூறு செல்ஃபி தட்டுறீங்க. வாழ்த்து சொல்ல வார்த்தை இல்லை எனக்கு!

9. பசங்க நாங்க லைசென்ஸ், இன்ஷூரன்ஸ் எடுத்து வெச்சுகிட்டு சமத்தா சட்டத்துக்கு கீழ்ப்படிந்து தலைக்கு ஹெல்மெட் மாட்டிட்டுப் போனாலும், வண்டியை நிப்பாட்டுறாங்க போலீஸ். ‘ட்ரிபிள்ஸே போனாலும் உங்களை ஏன் நிறுத்த மாட்டேங்குறாங்க’ன்ற கேள்விதான் மனசை பிறாண்டுது.

10. படத்துக்குப் படம் நயன்தாரா ஹேர்ஸ்டைல் மாற்றுவது மாதிரி, மாசமாசம் ஹேர்ஸ்டைல் மாத்திடுறீங்க... பசங்களோ ஆதிகாலத்துல இருந்து இரண்டே ஹேர்ஸ்டைல் வெச்சுதான் ஒப்பேத்திட்டு இருக்கோம். வெச்சா ஃபன்க், அடிச்சா அட்டாக்!

11. நாலு வருஷத்துக்கு முன்னாடி வாங்கிச் சாப்பிட்ட ‘டைரி மில்க்’ சாக்லேட் கவரை தம்மாத்துண்டு ஜியாமெட்ரி பாக்ஸில் பதப்படுத்தி வைக்கிறதுக்கெல்லாம் தனித்திறமை வேணும் கேர்ள்ஸ். நாங்க நேற்று வாங்கி பாக்ஸ்க்குள்ளே வெச்ச பால்பாயின்ட் பேனாவையே தேடிட்டு இருப்போம்.

யார் கெத்து?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

12. லேடீஸ் பஸ், லேடீஸ் ஸீட், லேடீஸ் கம்பார்ட்மென்ட் இருக்குறதுல இருந்தே தெரியுதே பொண்ணுங்கதான் கெத்துனு. பஸ்ல ஜென்ட்ஸ் ஸீட்கூட கிடையாது, ஜெனரல் ஸீட் தான் இருக்கு!

13. ஒரு பையன் இன்னொரு பையனை பார்த்து ‘பரதேசி’னு திட்டினாலே பல்லை கடிச்சுகிட்டு அடிக்க வருவாய்ங்க. அதுவே நீங்க கழுவி கழுவி ஊத்தினாலும் கெக்கபுக்கனு சிரிச்சுகிட்டு போயிடுறாய்ங்களே எப்படிங்க அது? கெரகத்த...

14. பானிபூரி கடையில் கடைக்காரர் அசுர வேகத்தில் பானிபூரி முக்கிக் கொடுத்தாலும் அசராமல் வாங்கி உள்ளே தள்ளுறீங்க. அடுத்த பூரி எடுத்து கொடுக்குற கேப்ல முதல் பூரியை சாப்பிட்டு முடிச்சுடுற அந்த வேகம் சான்ஸே இல்லைங்க. அதை நான் ஒரு முறை முயற்சி பண்ணப்போய் கடைக்காரர் கடுப்பாகி பானியை கண்ணுல ஊத்திட்டார்!

15. நீங்க யாரையாவது லவ் பண்ணால் மட்டும் எப்படி யாருக்குமே தெரியமாட்டேங்குது? ரியலி கிரேட். ஒரு பையன் லவ் பண்ணாலோ, அந்த பொண்ணைத் தவிர மற்ற எல்லோருக்குமே தெரிஞ்சுருக்கும். கலாய்ச்சே கதறவிடுவாய்ங்க. அவ்வ்வ்வ்...

16. சமையல் நிகழ்ச்சிகளை அலாரம் வெச்சு பார்த்து பக்கம் பக்கமா குறிப்பு எழுதுற அந்தப் பொறுமை இருக்கே... ச்சே... காலேஜ் ரெக்கார்டு நோட் எழுதறதுக்கே நாங்க குப்புறப்படுத்து குமுறுவோம்ல...

17. பெரும்பாலும் பொண்ணுங்க செமையா பாடுறீங்க, கல்பனா அக்காவையும் சேர்த்துதான் சொல்றேன். நாங்க பாடும்போதுதான் என்ன மாயமோ என்ன மந்திரமோ தெரியலை... மொட்டை ராஜேந்திரன் வாய்ஸ் வந்துடுது.

18. எவ்வளவு மொக்கையா காமெடி பண்ணாலும் (இந்தக் கட்டுரையையும் சேர்த்துதான் சொல்றேன்...) காமெடி பண்றவங்க மனசு நோகக்கூடாதுனு கொஞ்ச மாவது சிரிக்கிறீங்களே... அந்த மனசுதாங்க கடவுள். சிரிக்கிறவங்களை தெய்வத்துக்கு சமானம்னு சொல்லுவாங்க, நீங்க எப்படி?

19. இவ்வளவு ஏன் ‘அவள் விகடன்’னு இதழ் இருக்கு... ‘அவன் விகடன்’னு ஒரு இதழ் இருக்கா? இப்போ சொல்லுங்க தெய்வமே, யார் கெத்துனு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism