Published:Updated:

பிள்ளை முகம் பார்க்க முடியாத வாடகைத் தாய்கள்! - இந்நிலை மாறுமா இனி?

பிள்ளை முகம் பார்க்க முடியாத வாடகைத் தாய்கள்! -  இந்நிலை மாறுமா இனி?
பிரீமியம் ஸ்டோரி
பிள்ளை முகம் பார்க்க முடியாத வாடகைத் தாய்கள்! - இந்நிலை மாறுமா இனி?

சட்டம்கே.அபிநயா - ஓவியம்: பிரேம் டாவின்ஸி

பிள்ளை முகம் பார்க்க முடியாத வாடகைத் தாய்கள்! - இந்நிலை மாறுமா இனி?

சட்டம்கே.அபிநயா - ஓவியம்: பிரேம் டாவின்ஸி

Published:Updated:
பிள்ளை முகம் பார்க்க முடியாத வாடகைத் தாய்கள்! -  இந்நிலை மாறுமா இனி?
பிரீமியம் ஸ்டோரி
பிள்ளை முகம் பார்க்க முடியாத வாடகைத் தாய்கள்! - இந்நிலை மாறுமா இனி?
பிள்ளை முகம் பார்க்க முடியாத வாடகைத் தாய்கள்! -  இந்நிலை மாறுமா இனி?

ந்தியாவில்தான் வாடகைத் தாய்கள் மிக அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். கிராமப் புறங்கள் மற்றும் பழங்குடியினப் பகுதிகளில் உள்ள பெண்களிடம் வாடகைத் தாய் என்ற போர்வையில் வெளிநாட்டவர் நடத்தி வந்த முறைகேடுகள் ஏராளம். இதுவரை தெளிவான சட்டம் இல்லாத நிலையில், சமீபத்தில்தான் ‘வாடகைத் தாய் சட்ட வரைவு மசோதா 2016’ மூலமாக மத்திய அமைச்சரவை இச்செயல்களுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் வாடகைத் தாய்களின் வாழ்க்கையும் சூழலும் எப்படி இருக்கிறது என ஆராய்ந்தோம்.

வாடகைத் தாய் எனும் அவலம்!

வாடகைத் தாய்களுக்கு எந்த அங்கீகாரமும் இங்கு  அளிக்கப்படுவது இல்லை. 10% வாடகைத்தாய்களுக்கு மட்டும்தான், யாருக் காக பிள்ளை பெற்றுக் கொடுக்கிறோம் என்பது போன்ற விவரங்கள் தெரிய வருகிறது. வாடகைத்தாய்க்கு ஏற்படும் உடல்நலக் கோளாறுகளை யாரும் கண்டுகொள்வதில்லை.

ஒரு குழந்தை பிறக்கும்போதே சத்துக்குறைபாடு காரணமாக பெண்ணின் உடல் பல பிரச்னைகளைச் சந்திக்கிறது. வாடகைத் தாயாக, ஒரு பெண்ணே பல குழந்தைகள் பெற்று எடுக்கும்போது என்னவாகும்? ரத்தசோகை, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பிரச்னைகள் ஏற்படும் அபாயம் மிக அதிகம்.

வாடகைத் தாய் பெண்களை நார்மல் டெலிவரிக்கு அனுமதிப்பது இல்லை. காரணம், உரியவர்களின் குழந்தை எந்தச் சிரமமும் இல்லாமல் வெளிவர வேண்டும் என கண்டிஷன் போடுவார்களாம். அது மட்டுமல்ல... வாடகைத்தாய் வயிற்றில் கரு வளரும்போதே பெற்றோர் பிரிந்துவிட்டாலோ, குழந்தையை யாரிடம் கொடுப்பது என்பதில் சிக்கல் வரும். வாடகைத் தாய்க்கு கருச்சிதைவு ஏற்பட்டாலோ, அவர்களை அதோடு விட்டுவிடுவார்கள்.

வட மாநிலங்களில் படிப்பு அறிவு இல்லாத, வறுமையில் வாடும் பெண்களையே வாடகைத் தாய் பணிக்குக் குறிவைக்கிறார்கள். சில ஆயிரம் ரூபாய் மட்டும் கொடுத்து ஏமாற்றுகிறார்கள். பெற்ற குழந்தையைப் பார்க்கக்கூட அனுமதிப்பதில்லை.  இங்கு எல்லாமே குறைந்த செலவில் நடப்பதால்தான், மற்ற நாடுகள் குறிவைத்து வருகிறார்கள். குறிப்பாக, ஆஸ்திரேலியாவில் இருந்து மருத்துவ சுற்றுலா என்ற பெயரில் இங்கு வந்து குழந்தை வாங்கிச் செல்கிறார்கள்.

பிள்ளை முகம் பார்க்க முடியாத வாடகைத் தாய்கள்! -  இந்நிலை மாறுமா இனி?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கண்ணைத் திறந்தால் குழந்தையைக் காணோம்!

சென்னையைச் சேர்ந்த வாடகைத் தாய் ஜோதி சொல்வது உருக்கத்தின் உச்சம்... ``நாங்கள் செய்வதை தொழில் எனச் சொல்கிறார்கள். இது தொழில் கிடையாது. எத்தனை பேர் குழந்தை இல்லாம, வெளியிடங்களுக்குப் போய் வர முடியாம கஷ்டப்படுறாங்க தெரியுமா? அவங்க நிலையை புரிஞ்சுக்கிட்டவங்க யாரும், வாடகைத் தாயாக இருப்பதை தொழில்னு சொல்லமாட்டாங்க.

நான் கருமுட்டை கொடுக்க ஒரு மருத்துவமனைக்குப் போயிருந்தேன். அப்பதான் வாடகைத் தாய் பற்றி தெரிஞ்சுக்கிட்டேன். என் கணவர் முதலில் சம்மதிக்கவில்லை. அவரை மருத்துவமனைக்கு அழைச்சுட்டுப் போய், மருத்துவரோட பேச வைச்சேன். அப்பறம் புரிஞ்சுகிட்டாரு.

வாடகைத் தாயா நான் மாசமா இருந்தப்ப,  வீட்டுக்கு வரலை. ஆஸ்பத்திரியிலேயே எட்டு மாசம் இருந்தேன். என் பிள்ளை வந்து என்னை பார்க்கும் போது எல்லாம், ‘உனக்கு வயித்துல என்னமா ஆச்சு?  ஏன் வீட்டுக்கு வரமாட்டேங்கிற’னு கேக்கும். ‘வயித்துல கட்டி இருக்கு, கட்டியை ஆபரேஷன் பண்ணி எடுத்தப்புறம் வீட்டுக்கு வந்துருவேன்’னு சொல்லுவேன். ஆபரேஷன் முடிஞ்சு கண்ணை திறந்தப்ப என் பக்கத்துல அந்தக் குழந்தை இல்லை. அதிர்ச்சியா இருந்துச்சு... அது ஆணா, பொண்ணானு கூட தெரியலை. அந்தப் பிள்ளை என் கண் முன்னாடி நடந்துபோனாகூட எனக்கு அது யாருனு எனக்கு தெரியாது...” என்கிற ஜோதியின் குரல் வெம்புகிறது.

‘‘எனக்கு நாலு பிள்ளைங்க. குடும்ப கஷ்டத்துக்காக வாடகைத் தாயாக இருக்க சம்மதிச்சேன். முதலில் அக்கம்பக்கத்தில் இருந்தவங்க எல்லாரும் தப்பா பேசினாங்க. ஆனா, இப்போ அக்கம்பக்கத்திலும் நிறைய பொண்ணுங்க வாடகைத் தாயாத்தான் இருக்காங்க.
புரோக்கர்கள் எங்ககிட்டயும், ஆஸ்பத்திரிலயும், குழந்தை வேணும்னு கேக்குறவங்ககிட்டயும் பணம் வாங்கிக்கு வாங்க.  வசதியானவங்களா இருந்தா எங்களைப் போல வாடகைத் தாயா இருக்குறவங்களுக்கு  டி.வி, வண்டி, ஃப்ரிட்ஜ்னு வாங்கித் தருவாங்க. எங்க கஷ்டத்துக்கு, பணத் தேவைக்கு, நாங்க செய்றோம். அரசாங்கம் ஏதாவது வேலைவாய்ப்பை கொடுத்தா நல்லாருக்கும்’’ என்கிறார் வாடகைத் தாய் சுமதி.

அங்கு தடை... இங்கோ மலிவு!

வாடகைத் தாய் முறையை உலகில் 26 நாடுகளில் தடை செய்திருக்கிறார்கள். ‘ஒரு பெண் அதிகபட்சம் 3 முறை வாடகைத் தாயாக இருக்க முடியும். கர்ப்ப காலத்தில் வரும் எல்லாச் செலவு களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். மாதம் 3 ஆயிரமும், குழந்தை பிறந்த பின் குறைந்தபட்சம் ரெண்டரை லட்சம்  ரூபாயும் வாடகைத் தாய்க்கு கொடுக்க வேண்டும்’ என  பரிந்துரை செய்து இருக் கிறது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்.
 
குஜராத்திலோ, ஒரு பெண் குறைந்தது 6 முறையாவது வாடகைத் தாயாக இருக்கிறாள். கடந்த சில ஆண்டுகளில் குஜராத்தில் மட்டுமே 30 ஆயிரத்துக்கும் அதிக குழந்தைகளை வெளிநாட்டவருக்குப் பெற்றுக் கொடுத்து இருக்கிறார்கள். இதில் பயன் அடைந்தது, இதற்கென இருக்கும் மருத்துவமனைகளும், புரோக்கர்களும்தான். ஆனால், சில ஆயிரங்களை மட்டுமே வாடகைத் தாய்க்கு கொடுக்கிறார்கள்.

வாடகைத் தாய் முறைக்கு 2013-ல் கொண்டு வந்த சட்டத் திருத்தம் உட்பட,  இந்த வணிகத்துக்கு எதிரான முழுமையான, தெளிவான சட்டம் இதுவரை இல்லை. இந்தக் குறைபாட்டை பயன்படுத்தியே 40% வெளிநாட்டவர்கள் இந்தியாவில் வாடகைத் தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொண்டார்கள். கடந்த இரண்டு வருடங்களாக வாடகைத் தாய் வணிகம் சரிந்து இருக்கிறது. ஆனால், தேவை பல மடங்கு அதிகமாகி இருக்கிறது.

புதிய சட்டம் என்ன சொல்கிறது?


வாடகைத் தாய் தொடர்பாக பல சட்ட சிக்கல்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து வெளிநாட்டவர்கள் இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள புதிய விதிமுறைகளை இந்திய உள்துறை அமைச்சகம் கொண்டு வந்திருக்கிறது.

வாடகைத் தாயாக ஒப்பந்தம் செய்து கொள்பவர் 21 வயது நிரம்பியவராகவும், 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். வெளிநாட்டைச் சேர்ந்த ஓரினச் சேர்க்கையாளர்கள் இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள தடை அறிவிக்கப்பட்டுள்ளது.  வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் வெளிநாட்டவர்கள் இனி மருத்துவ விசாவிலேயே இந்தியா வர வேண்டும். சுற்றுலா விசாவில் வரக்கூடாது. வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவதை அனுமதிக்காத ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த தம்பதிகளும் இனி இந்தியாவில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது. வாடகைத் தாய் குழந்தையை பின்னர் தாய் பார்க்க விரும்பினால் அனுமதிக்க வேண்டும். தம்பதி வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டாலும், வாடகைத் தாய் அங்கு சென்று குழந்தையைப் பார்க்கலாம். வாடகைத் தாயுடன் செய்த  ஒப்பந்தம் தொடர்பான நகலை இந்திய தூதரகத்திடம் அளிக்க வேண்டும். இது போன்ற பல புது விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் நிலவும் அரசியல் சூழலும், மருத்துவச் சூழலும் வெளிநாட்டவர்களுக்கு சாதகமாக இருப்பதனால்தான் அவர்கள் இந்தியாவுக்கு வருகிறார்கள். பெங்களூரில்  ‘வாடகைத் தாய் மூலமாக குழந்தை பெற்றுத் தருகிறோம்’ என்று சொல்லி, வேறு இடத்தில் இருந்து குழந்தையை கடத்தி வந்து கொடுக்கும் சம்பவமும் நடக்கிறது.

பிள்ளை முகம் பார்க்க முடியாத வாடகைத் தாய்கள்! -  இந்நிலை மாறுமா இனி?

‘‘ஏற்கெனவே குழந்தை இருப்பவர்கள், இரண்டாவது, மூன்றாவது குழந்தையை வாடகைத் தாய் மூலம் பெற்றுக்கொள்ள கூடாது என்பது வரவேற்கத்தக்கது.  ஆனால், வெளிநாட்டவர்கள் இந்தியாவுக்கு வந்து வணிக முறையில் பெற்றுக்கொள்ள முடியாது என்பதை மறுபரீசிலனை செய்ய வேண்டும். புதிய சட்டத்தில் பழைய வாடகைத் தாய் பற்றி எந்த வார்த்தையும் இல்லை. குழந்தை பெற்றுக்கொடுத்த பின்பு, வாடகைத் தாயை அப்படியே விட்டுவிடுவார்கள். அவர்களுக்கு உடல் ரீதியாக பிரச்னை வந்தால், ஒப்பந்தம் போட்டவர்களே கவனிக்க வேண்டும். இது போன்றவற்றைச் சட்டத்தில் சேர்க்க வேண்டும். கருமுட்டை கொடுப்பவர்களுக்கான தெளிவான விதிமுறைகளும் சொல்லப்படவில்லை’’ என்கிறார் சமூகச் செயற்பாட்டாளர் ஹரிஹரன்.

வாடகைத்தாய் நடைமுறைகள்
 

இந்த சட்டம் பற்றி  இந்தியன் சரோகேசி லா சென்டரின் தலைமை ஆலோசகர் ஹரி ஜி ராமசுப்பிரமணியன் என்ன சொல்கிறார்?
“வாடகைத் தாய் முறை இந்தியாவுக்கு ஒன்றும் புதிது கிடையாது. நம் சமூகத்தில் அதை ஒரு முறைகேடாக யாரும் பார்க்க வில்லை. இதில் பணம் வாங்காமல் தாயாக இருப்பது, பணம் பெற்று கமர்ஷியலாக தாயாக இருப்பது என இரண்டு விதம் இருக்கிறது. உறவுகள் மூலமாக மட்டுமே வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும்... கமர்ஷியலாக செய்ய முடியாது என்கிறது இந்த மசோதா. உறவுகளுக்குள் இந்த முறையில் குழந்தை பெற்று எடுப்பது எளிதல்ல. அதோடு, பணம் வாங்காமல் குழந்தை பெற்றுக்கொடுக்க யார் முன்வருவார்கள்? ஒரு குழந்தையை தத்து எடுக்கும் போது, அதில் கெடுபிடியான விதிமுறைகளைக் கொண்டுவருவதில் நியாயம் இருக்கிறது. இது தத்து எடுப்பது போல கிடையாதே... தன் குழந்தையை எப்படி
பெற்று எடுக்க வேண்டும் என அரசாங்கம் விதிமுறைகளை சொல்வது சரியாக இருக்காது.

அதிகமான வெளிநாட்டவர்கள் இந்தியா வந்து இந்த முறையில் ஏன் பெற்றுக் கொள்கிறார்கள்? அவ்வளவு தேவை இருக்கிறது. குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத சூழலில் தவிக்கும் தம்பதிகளுக்கு இவ்வளவு விதிமுறைகளை போட்டால், இது பிளாக் மார்க்கெட் ஆக மாறவே வழி செய்யும். எத்தனையோ பேர் யூட்ரஸ் இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு கல்யாணம் ஆவதே அரிது. அப்படி இருக்கையில் திருமணமாகி 5 வருடம் கழித்துதான் வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது எல்லாம் அர்த்தமற்றது. குழந்தை தேவை இருப்பவர்களுக்கு, ஒரு பெண் வாடகைத் தாயாக இருப்பது தாயின் தனி உரிமை. தனி மனித உரிமை அரசாங்கம் எப்படி தலையிட முடியும்?’’ எனக் கேட்கிறார்.

விவாதத்துக்கு உரியதுதான்!

“வெளிநாடுகளில் வேலைக்குச் செல்லும் பெண் களில் குழந்தையை சுமக்க முடியாது என்பதால்கூட வாடகைத் தாய் முறையை தேர்வு செய்கிறார்கள்.

பிள்ளை முகம் பார்க்க முடியாத வாடகைத் தாய்கள்! -  இந்நிலை மாறுமா இனி?

ஷாருக்கான், அமீர்கான் போன்றவர்கள் வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்று எடுத்துக்கொண்டார்கள்.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism