Published:Updated:

பிரிவோம்... சிந்திப்போம்!

பிரிவோம்... சிந்திப்போம்!
பிரீமியம் ஸ்டோரி
பிரிவோம்... சிந்திப்போம்!

உலகம்வரவனை செந்தில்

பிரிவோம்... சிந்திப்போம்!

உலகம்வரவனை செந்தில்

Published:Updated:
பிரிவோம்... சிந்திப்போம்!
பிரீமியம் ஸ்டோரி
பிரிவோம்... சிந்திப்போம்!

செப்டம்பர் 21 - கூகுளின் சர்வரில் அதிகம் தேடப்பட்ட வார்த்தை ‘பிராஞ்சலினா’. ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் மற்றும் அவரின் மனைவி ஏஞ்சலினா ஜோலி ஆகிய பெயர்களை இணைத்த வார்த்தைதான் அது. இந்த அழகான ஜோடியின் பிரிவுச்செய்தி வெளியான அன்று இருவரையும் இணைத்த அந்த வார்த்தை பலகோடி முறை உலகம் முழுவதும் பல மொழிகளில் தேடிப்பார்க்கப்பட்டுள்ளது.

“திருமணத்தின் வெற்றி என்பது அந்த உறவைக் கெடுக்கும் கடுமையான சூழல் ஏற்படும்போது அதை புன்னகையுடன் கடப்பதில்தான் இருக்கிறது’’ என போன ஆண்டு பி.பி.சி-யிடம் தன் திருமண வாழ்க்கை பற்றி மேற்படி வார்த்தைகளை தெரிவித்த ஏஞ்சலினாதான், இப்போது பிராட் பிட்டிடமிருந்து விவாகரத்து கோரி வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்.

பிரிவோம்... சிந்திப்போம்!

பிறந்த சில மாதங்களிலேயே தந்தையால் கைவிடப்பட்ட ஏஞ்சலினா, தந்தையின் அன்புக்காக சிறுவயதில் ஏங்கியவர். ஒரு கட்டத்தில் கைவிட்டுப்போன தந்தையை வெறுத்தார். வழக்கு போட்டு தன் பெயரிலிருந்து தந்தையின் பெயரை நீக்கினார். சிறுவயதிலிருந்தே நாடகம், விளம்பரம், சினிமா என வாய்ப்புகள் கிடைத்து லைம் லைட்டில் இருந்தாலும், அவருக்குள் எப்போதும் ஒரு சோகம் இருந்தே வந்திருக்கிறது. இரண்டு அபத்தமான திருமணத் தோல்விகளுக்குப் பிறகு கிடைத்த பிராட் பிட் உடனான வாழ்க்கைக்காலமே அவரின் ‘உலகின் அழகான உதடு’களுக்கு பெர்மனன்ட் புன்னகையைக் கொடுத்திருந்தது.

ஏஞ்சலினாவைவிட 11 வயது மூத்தவரான பிராட் பிட் ஒக்லஹாமாவில் இருந்து விளம்பர ஏஜென்சியில் வேலை செய்ய கலிஃபோர்னியாவுக்கு வந்தவர். நடிப்பு ஆசை வரவே, கடும் போராட்டத்துக்குப் பிறகு நடிகரானார். சினிமாவில் இன்று வரை பிராட் பிட்டின் கிராப் ஏறுமுகத்தில்தான் இருக்கிறது. ஏஞ்சலினாவுக்கு முன் நடிகை ஜெனிஃபர் அனிஸ்டனை திருமணம் செய்திருந்தார். 2000-ல் திருமணம் செய்து 2005-ல் முடிவடைந்தது அந்த உறவு. அதன்பின் உடன் நடித்துக்கொண்டிருந்த ஏஞ்சலினாவுடன் 7 ஆண்டுகள் செம லவ். 2014-ல்தான் திருமணம் செய்தனர். இந்த ஜோடிக்கு ஒரு ட்வின்ஸ் உள்பட ஆறு குழந்தைகள். அதில் மூன்று குழந்தைகள் கம்போடியா, வியட்நாம் மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளில் இருந்து தத்து எடுக்கப்பட்டவை.

இந்தப் பிரிவுக்கு இரண்டே காரணங்கள் தான் என்கின்றன பரபரப்பை விரும்பாத மீடியா சோர்ஸ்கள்.

ரீஸன் ஒன் - ஏஞ்சலினாவுக்கு தன் அப்பாவை பிடிக்கவே பிடிக்காது. சமீப காலமாக பிராட் பிட் மாமனாருடன் அதிக நெருக்கம் காட்டுவது பிடிக்கவில்லையாம். இரண்டு பேரும் பார்ட்டிகளுக்கு செல்வது, ஒன்றாகச் சேர்ந்து வீட்டிலேயே பார்ட்டி நடத்துவது என ஏஞ்சலினா இல்லாத வீட்டில் மாமனாரும் மருமகனும் கொண்டாட்ட வாழ்க்கை நடத்தியுள்ளார்கள். பலமுறை கண்டித்தும் இது தொடர்ந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் வீட்டில் குழந்தைகளுக்கு முன்பே பிராட் போதைப்பொருள் எடுக்க ஆரம்பித்திருக்கிறார். அகதிகளுக் கான நலம், குழந்தைகள், பெண்களுக் கான உரிமைகள் என ஐ.நா சபையின் பல்வேறு குழுக்களில் நல்லெண்ண தூதுவராக இருக்கும் ஏஞ்சலினா உலகம் முழுக்க பயணித்தபடியே உள்ளார். தான் வீட்டில் இல்லாத நேரத்தில் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளாமல் பிராட் பொறுப்பின்றி இருப்பதும் முக்கிய காரணம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிரிவோம்... சிந்திப்போம்!

ரீஸன் டூ - போதும் போதும் என பணம் இருக்கிறது. அதனால் இனி சமூகப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்த ஏஞ்சலினா விரும்புகிறார். தான் உலகம் முழுவதும் சேவைப்பணிகளுக்காக பயணம் செய்வதால், பிராட் குழந்தைகளைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என விரும்பு கிறார். ஆனால், பிராட் பிட் ஒப்புக் கொள்ளும் படங்கள் எல்லாமே அமெரிக்காவுக்கு வெளியே ஷூட்டிங் நடத்த வேண்டியதாகவே உள்ளன. இப்படியான படங்களை வேண்டுமென்றே பிராட் ஒப்புக் கொள்கிறார் என ஏஞ்சலினா நினைக்கிறார்.

இந்த முடிவு குழந்தைகளைப் பாதிக்கும் என ஏஞ்சலினாவுக்கு நன்கு தெரியும் என்றும், அதற்காகவே இந்த முடிவை கடந்த ஓராண்டாக தள்ளிப்போட்டே வந்ததாகவும் அவருக்கு நெருக்கமான இரு தோழிகள் கூறியுள்ளனர். ஆனால், இந்தத் தோழிகளால்தான் இந்த பிரிவே ஏற்பட்டது என பிராட் பிட் தரப்பு தெரிவிக்கிறது. போஸ்னி யாவைச் சேர்ந்த அர்மினிகா மற்றும் கோலே டால்டன் என்கிற அந்த இருவரும் இங்கிலாந்தின் வெளியுறவு ஆலோசகரின் செயலாளர்களாக இருந்தவர்கள். இவர்களின் தொடர்பு ஏற்பட்ட பிறகுதான் லேசான விரிசல் பெரும் பிளவாக மாறியது என்று பிராட் பிட் வழக்கறிஞர் தரப்பு சொல்கிறது.

பிரிவோம்... சிந்திப்போம்!

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுப்பதற்கான சர்வதேச நல்லெண்ண தூதுவராக இருக்கும் ஏஞ்சலினா, இந்தப் பிரிவுக்குப் பிறகு லண்டனில் குடியேறுவார் எனத் தெரிகிறது. இப்போது குழந்தைகளுடன் கலிஃபோர்னியாவின் பெரும் பணக்காரர்கள் வாழும் பகுதியான மாலிபுவில் 12 மில்லியன் டாலர் மதிப்புள்ள வீட்டில் குடியேறியுள்ளார்.

இந்த பிரிவு குறித்து பிராட் பிட்டின் முன்னாள் மனைவியான ஜெனிஃபர் அனிஸ்டனின் கணவர் ஜஸ்டின் தெராக்ஸின் கருத்துதான் மிக முக்கியமானது... “இந்தப் பிரிவின் வேதனையை அந்தக் குழந்தைகள் எப்படி உணரும் எனப் புரிந்து கொள்ள முடிகிறது. உண்மையான வலி அவர்களுக்குத்தான்’’ என்கிற அவரின் கருத்து முகத்தில் அறையும் நிஜம்.

“மனம் விட்டுப் பேச எனக்கு உற்ற நண்பர்களே கிடையாது.அப்படி இருக்கும் ஒரே ஒரு நண்பன் பிராட்தான்” என ஏஞ்சலினா கடந்த ஆண்டு சொல்லி இருந்தார். இப்போது அந்த ஒரே நண்பனையும் பிரிகிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism