Published:Updated:

கேபிள் கலாட்டா!

கேபிள் கலாட்டா!
பிரீமியம் ஸ்டோரி
கேபிள் கலாட்டா!

ரீமோட் ரீட்டா, படம்: சொ.பாலசுப்ரமணியன்

கேபிள் கலாட்டா!

ரீமோட் ரீட்டா, படம்: சொ.பாலசுப்ரமணியன்

Published:Updated:
கேபிள் கலாட்டா!
பிரீமியம் ஸ்டோரி
கேபிள் கலாட்டா!
கேபிள் கலாட்டா!

சீரியல் குயில்

``சேச்சி... ஞான் தமிழ் நன்னாய்ட்டு அறியாம்’’ என்று முதல் பாலிலேயே சிக்ஸர் அடித்துக் கொஞ்சிக் கெஞ்சிப் பேசுகிறார் ராஜ் டி.வி-யின் ‘காக்க காக்க’ சீரியலில் அசத்திக் கொண்டிருக்கும் கேரளத்துக் குயில் தீபா ஜெயன். ``கிட்டத்தட்ட ஆறேழு வருஷம் ஆயிடுச்சு... நான் டி.வி உலகத்தில் காலடி எடுத்து வெச்சு! சன் மியூசிக் சேனலோட மலையாள வெர்ஷன் கிரண் டி.வி-யில் காம்பயரரா வொர்க் பண்ணிட்டு இருந்தேன். அதன் மூலமா மலையாள சீரியல் உலகில் வாய்ப்பு கிடைச்சது. அதுக்கப்புறம் இப்போ ஃபுல் டைம் நடிகை ஆகிட்டேன். தமிழில்... `அதே கண்கள்’, `ஏழாம் உயிர்’, `காக்க காக்க’னு மொத்தமா மூணு சீரியல். சீக்கிரமே இன்னும் நிறைய சீரியலில் அசத்தணும்’’ என்று அவர் வரையும் ஓவியம் போலவே முகபாவம் காட்டி எக்ஸைட் ஆகும் தீபாவுக்கு கேரள அரிசி சாதமும் ஃபிஷ் கறியும்தான் உயிர்மூச்சு. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அது பெரிய கனவு!

`‘எனக்கு நல்லா தெரிஞ்ச மொழி தமிழ். மற்ற மொழிகள் பேச வரலைனா தெரிஞ்ச மொழியில் ஒழுங்கா பேசணும்ல... அதான் தமிழிலேயே பேசறேன்’’ என்று எடுத்தவுடனேயே ஹை-வோல்டேஜ் ஸ்டார்ட் கொடுக்கிறார் சன் டி.வி ‘குலதெய்வம்’ ராகவன்.

கேபிள் கலாட்டா!

‘’பொறந்து, வளர்ந்தது எல்லாமே சென்னை. சின்ன வயசில் இருந்து நடிப்புனா ரொம்பப் புடிக்கும். ஒவ்வொரு மனுஷனோட எதிர்காலத்தையும் அவன் வளரும் சூழ்நிலைதான் தீர்மானிக்குது. நான் வளர்ந்த சூழலில், கூட விளையாடின பசங்க யாரும் டாக்டரைப் பத்தியோ, இன்ஜினீயரைப் பத்தியோ பேசினதில்லை. நடிகர்களின் தாக்கம்தான் நிறைய இருந்தது. அதுவே எனக்கும் ஆசையா மாறிடுச்சு. என்னோட தாத்தா தெருக்கூத்துக் கலைஞர். அதனால வீட்டில் எனக்கு எதிர்ப்பு இல்லை.

இந்த ஃபீல்டுக்கு வர்றதுக்கு முன்னாடி, நியாயமான வருமானம் கொடுக்கற எல்லா விதமான வேலைகளும் பார்த்திருக்கேன். நடுவில் விகடனில் வந்த ஒரு கட்டுரை பார்த்துட்டுதான் கூத்துப்பட்டறையில் சேர்ந்தேன். அங்கதான் நடிப்பையும் முழுமையா கத்துக்கிட்டேன். என்னோட முதல் சீரியல் விஜய் டி.வி-யில் ஒளிபரப்பான ‘காக்கி’. நடிக்கிற எல்லாருக் குமே நடிப்புக்குண்டான பேரையும் புகழையும் சினிமாவால்தான் கொடுக்க முடியும். அப்படி, சினிமாக்குள்ள நுழையணும்னா சீரியல்தான் அதுக்கான முதல் தளம். அதனால சேனல் சேனலா வாய்ப்பு தேட ஆரம்பிச்சேன். அப்போ கிடைச்ச வாய்ப்புதான் `காக்கி’.

அதுக்கப்புறம் வரிசையா விஜய் டி.வி `சரவணன் மீனாட்சி’, `கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம்’, சன் டி.வி-யின் `பத்து மணிக் கதைகள்’னு நிறைய சீரியல்கள் பண்ணிட்டேன். இப்போ ‘குல தெய்வம்’ சீரியல். என்னைப் பொறுத்தவரை சீரியலில் நடிக்கறவங்களுக்கு ரசிகர் பட்டாள மெல்லாம் கிடையாது. அது பெரும்பாலும் ஸ்டார் வேல்யூ நடிகர்களுக்கு வேண்டுமானால் இருக்கலாம். அதனாலேயே, சினிமாவில் நடிப்பதுங்கறது ஒவ்வொரு நடிகருக்கும் பெரிய கனவு. அந்த தேடலில் கிடைச்சதுதான் ‘மிருதன்’ வாய்ப்பு. எதிர்காலத்தில் சீரியல் புரொடியூஸ் பண்ற ஐடியாவும் இருக்கு. இன்னும் நிறைய சினிமா வாய்ப்புகள் கிடைக்கணும்; நிறைய ரசிகர்களின் மனசில் இடம்பிடிக்கணும்... அவ்ளோ தாங்க என்னோட சின்ன ஆசை!’ என கண்சிமிட்டுகிறார் ராகவன்.

வாழ்த்துக்கள் சகோ!

வாசகிகள் விமர்சனம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ.150

தலைவிரி கோலம் வேண்டாமே..!

``ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் `அஞ்சறைப் பெட்டி’ நிகழ்ச்சியில் ராதா கிருஷ்ணமூர்த்தி எளிமையான குறிப்புகளைத் தருவது அருமையாக உள்ளது. ஆனால், நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் பெண்கள் தலையை விரித்துபோட்டபடி வருகிறார்கள். இதனால் சமையலறையின் அடிப்படை விஷயமே அடிபட்டுப் போய்விடுகிறது. தலைமுறை இடைவெளி என்று ஆறுதலடைந்தாலும் சமைய லறை தலைவிரி கோலம் வேண்டாமே என்று தோன்றுகிறது’’ என்று புகார் கடிதம் வாசிக்கிறார் செங்கல்பட்டில் இருந்து இரா.மணிமேகலை.

பாட்டியின் சின்னச் சின்ன ஆசை!


``மக்கள் தொலைக்காட்சியில் `சின்னச் சின்ன ஆசை’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. அதில், சமீபத்தில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில், குழந்தை களுக்குப்பதில் 102 வயது மூதாட்டியை பேட்டி எடுத்து ஒளிபரப்பினார்கள். வயதானவர்களை ஓரங்கட்டும் இக்காலத்தில் அந்த மூதாட்டியை மதித்து அவரது அனுபவங்களைக் கேட்டு ஒளிபரப்பியது அருமை! இறுதியாக, அந்த பாட்டியிடம், `உங்கள் ஆசை என்ன? உங்களுக்குப் பிடித்த பொருள் என்ன?’ என்று கேட்டதற்கு, `வெத்தல பாக்கு மேலதான் எனக்கு ஆசை’னு சொல்லி அந்தப் பாட்டி சிரித்தது யதார்த்தமாக இருந்தது’’ என்று மனம் திறந்து பாராட்டுகிறார் சென்னை கண்டிகையில் இருந்து மாலா பழனிராஜ்.

விட்டுக்கொடுக்கும் மனம்..?


``விஜய் டி.வி-யில் ஒளிபரப்பான `நீயா நானா’வில் திருமணம் பற்றிய ஒரு நிகழ்ச்சியில், `துணையை எதிர்கொள்பவர் களின் எதிர்பார்ப்புகள் இப்படித்தான்..’ என்று ஒரு தரப்பு சொல்ல, `இப்படியெல்லாம் விதிகள் விதிக்க முடியாது’ என்று எதிர் தரப்பினர் பேச சுவாரஸ்யமாக இருந்தது. ஆனாலும், கொஞ்சம்கூட விட்டுக்கொடுக்கும் மனம் இல்லாமல், விதிகளைத் தளர்த்த முடியாமல் பிடிவாதம் செய்த இளைய தலைமுறையைப் பார்த்து கொஞ்சம் பயமாகவும் இருந்தது’’ என்று வருந்துகிறார் சென்னை நொளம்பூரில் இருந்து ர.கிருஷ்ணவேணி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism