Published:Updated:

ஏழே நாட்களில் ஏழு கிலோ குறைக்க முடியுமா?

ஏழே நாட்களில் ஏழு கிலோ குறைக்க முடியுமா?
பிரீமியம் ஸ்டோரி
ஏழே நாட்களில் ஏழு கிலோ குறைக்க முடியுமா?

டயட் டூர்இளங்கோ கிருஷ்ணன்

ஏழே நாட்களில் ஏழு கிலோ குறைக்க முடியுமா?

டயட் டூர்இளங்கோ கிருஷ்ணன்

Published:Updated:
ஏழே நாட்களில் ஏழு கிலோ குறைக்க முடியுமா?
பிரீமியம் ஸ்டோரி
ஏழே நாட்களில் ஏழு கிலோ குறைக்க முடியுமா?

றைவியே வணக்கம்!

‘உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கு அழகு’ என்று அழகியலையும் ஆரோக்கியத்தையும் இணைத்திருந்த அற்புத மரபு நம்முடையது. இயற்கையாக விளைந்த சத்தான காய்கறிகளையும், கம்பு, கேழ்வரகு, தினை என தானியங்களையும் உண்டு, வீட்டு வேலைகளையும் காட்டு வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு மாங்குமாங்கென செய்துகொண்டிருந்த நம் பாட்டிகளுக்கு இல்லாத உடல்பருமன் பிரச்னையும், எலும்பு, மூட்டுத் தேய்மானமும் இன்றைய `ஜென் Z’ பெண்களைப் பாடாய்ப்படுத்தி வருகின்றன.

ஏழே நாட்களில் ஏழு கிலோ குறைக்க முடியுமா?

இதைப் பயன்படுத்திக்கொண்டு, ‘உணவே மருந்து... மருந்தே உணவு’ என வாழ்வியல் வகுத்த நிலத்தில் இன்று எங்கு பார்த்தாலும் புதுப் புது டயட்கள். ‘ஏழே நாட்களில் ஏழு கிலோ குறைக்கலாம்’, ‘ஒரே மாதத்தில் ஒல்லிபெல்லியாகலாம்’ என்ற டைமிங் ரைமிங் டயலாக்குகளுடன் பேலியோ, வீகன், ஜி.எம், ஒன்லி கீரை, ஒன்லி காய்கறி, வாரியர் போன்ற விதவிதமான டயட்டுகள் வரிசைகட்டுகின்றன.

‘எத்தைத் தின்றால் பித்தம் தீரும்’ என்பதைப் போல எடைக்குறைப்பு என்ற மந்திர வார்த்தைக்குக் கட்டுப்பட்ட நம் பெண்களும், `தோழி சொன்னாள், பக்கத்து வீட்டில் சொன்னார்கள், இணையத்தில் பார்த்தேன்’ என்று ஒவ்வொரு டயட்டையும் முயன்று பார்க்கிறார்கள். பிறகு, ‘நமக்கு இது செட் ஆகாதுப்பா’ என்று பாதியிலேயே வெளியேறுகிறார்கள். இது எதையும் முயற்சி செய்யாமலே, ‘இந்த டயட்டுகள் எல்லாமே சுத்த வேஸ்ட்டுப்பா! இது எதுவுமே எடையைக் குறைக்கப் பயன்படாது’ என்று ஊருக்கெல்லாம் உபதேசம் செய்யும் இறைவிகளும் இருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஏழே நாட்களில் ஏழு கிலோ குறைக்க முடியுமா?

சரி, இந்த டயட்டுகள் அனைத்துமே தேவை யற்றவைதானா? நாம் இத்தனை ஆண்டுகளாகச் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் நமது பாரம் பர்ய டயட்டில் என்ன தான் பிரச்னை? இப்போது பேலியோ, ஜி.எம் என ஆளாளுக்குப் பரிந்துரைக்கும் இத்தனை விதமான டயட்டுகளில் எது சிறந்தது? எல்லா டயட்டுகளும் எல்லா பெண்களுக்கும் செட் ஆகுமா? பேத்தி முதல் பாட்டி வரை உள்ள ஒவ்வொரு பருவத்தின ரும் பின்பற்ற வேண்டிய டயட் முறைகள் என் னென்ன? எந்த டயட்டில் என்ன சிறப்பு?

‘இதை எல்லாம் எடுத்துச் சொல்ல யாரா வது இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்’ என்று நினைக்கறீங்கதானே? உங்களுக்காகத்தான் இந்த ‘டயட் டூர்’. இனி, ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு டயட் முறையை எடுத்துக் கொண்டு அதைப் பற்றி முழுமையாக 360 டிகிரி யில் அலசப்போகிறோம். உணவியல் நிபுணர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள், மகளிர் மருத்துவர்கள், டயட்டைக் கடைப் பிடித்து அதில் வெற்றி கண்டவர்கள் எனப் பலதரப்பட்டவர்கள் இந்தப் பக்கங்களை நிரப்பப்போகிறார்கள்.

எனினும், உணவும் உணவு நிமித்தமுமான இந்தத் தொடர் உங்கள் பங்களிப்பு இல்லாமல் முழுமையடையாது, தோழிகளே! இந்தத் தொடரைப் படித்து, பின்பற்றி, இது குறித்த உங்கள் கருத்துகளை, அனுபவங்களை நீங்களும் எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்... பங்காற்றுங்கள். உணவு சார்ந்த ஒரு கலந்துரை யாடலுக்குத் தயா ராவோம். வடிவான, கச்சிதமான உடலைப் பெறுவோம்.

ஏழே நாட்களில் ஏழு கிலோ குறைக்க முடியுமா?

வாருங்கள், மாறு வோம்! மாற்றம் ஒன்றே மாறாதது இல்லையா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism