Published:Updated:

மண்ணெல்லாம் பொன்னே!

மண்ணெல்லாம் பொன்னே!
பிரீமியம் ஸ்டோரி
மண்ணெல்லாம் பொன்னே!

பாரம்பர்யம்பொன்.விமலா, படங்கள்: மா.பி. சித்தார்த்

மண்ணெல்லாம் பொன்னே!

பாரம்பர்யம்பொன்.விமலா, படங்கள்: மா.பி. சித்தார்த்

Published:Updated:
மண்ணெல்லாம் பொன்னே!
பிரீமியம் ஸ்டோரி
மண்ணெல்லாம் பொன்னே!
மண்ணெல்லாம் பொன்னே!

நம் பாரம்பர்யங்களை எல்லாம் மெதுமெதுவாகத் தொலைத்துவிட்டு உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பல சிக்கல்களைத் தொட்டுக்கொண்டிருக் கிறோம். இயற்கைக்கு மாறான பல செயல்களைச் செய்து செயற்கைக் குடிலுக் குள் நம்மை அமர்த்திக்கொண்டிருக்கிறோம். நீர், நிலம், காற்று, உணவு என மனிதன் உயிர் வாழத் தேவையான உயிர்க்கூறுகள் யாவும் ரசாயனக் கலப்பாகி வரும் நிலை யில் இயற்கை ஆர்வலர்கள் பலரும் பாரம் பர்யத்தின் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

`உங்க வீட்ல ஃப்ரிட்ஜ் இருக்கா?  இண்டக்‌ஷன் ஸ்டவ் இருக்கா? ரைஸ் குக்கர் இருக்கா?’ இப்படிக் கேட்பதைப் போலவே, `உங்களுக்கு பிபி இருக்கா? சுகர் இருக்கா? தைராய்டு இருக்கா?’ என்பதும் சர்வ சாதாரணமாகிவிட்டது.

நம்மை மீட்டெடுக்க வேண்டுமென்றால் மீண்டும் பாரம்பர்யத்துக்குத் திரும்ப வேண்டியதும் ஒரு தீர்வாக இருக்கும் நிலையில், இந்த மாற்றம் விரும்பிகளையே தங்கள் தொழிலுக்குப் பக்கபலமாக்கிக் கொண்டுள்ளனர் கோமதி - அரசு பாஸ்கர் தம்பதி.

சென்னை, சேலையூரில் ‘சாய் ஆர்கானிக்’ என்ற பெயரில் செயல்படும் இவர்களது விற்பனை அங்காடியில் வழக்கம் போல இயற்கைப் பிரியர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருந்தது.

மண்ணெல்லாம் பொன்னே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கணவருடன் இணைந்து தொழிலில் பரபரப்பாக இருந்த கோமதியிடம் பேசினோம்.

‘‘ஆரம்பத்துல நாங்க ஆர்கானிக் உணவுப் பொருட்களை விற்பனை செஞ்சுட்டு வந்தோம். என் கணவர் ஃபைன் ஆர்ட்ஸ் முடிச்சுட்டு டெரக்கோட்டா பொருட்களை செஞ்சுட்டு இருந்தார். அதனால ஆர்கானிக் விற்பனையோட டெரக்கோட்டா பொருட்களை நாங்களே உருவாக்கவும், விற்பனை செய்யவும் ஆரம்பிச்சோம். நானும் அவரோட இணைஞ்சு டெரக்கோட்டா கம்மல்கள் செய்யறதோட,

மண்ணெல்லாம் பொன்னே!

அவர் செய்ற பொருட்களுக்கு பெயின்ட் அடிக்குறதுனு சின்ன சின்ன வேலைகள் செஞ்சிட்டு இருந்தேன். ஆர்கானிக் பொருட்கள் வாங்க வந்தவங்க, எங்களோட மண்பொருட்களைப் பார்த்து ஆர்வமாகி வாங்க ஆரம்பிச்சாங்க. இதையே பெரிய அளவுல பண்ணலாமேனு தோணுச்சு. ஆர்கானிக் விற்பனையை தற்காலிகமா நிறுத்திட்டு மண்பொருட்கள் விற்பனையை இப்ப முழு நேரமா தொடங்கி இருக்கோம்’’ என்னும் கோமதி, தங்கள் தொழில் குறித்து மேலும் விரிவாகப் பேச ஆரம்பித்தார்.

``பொதுவா களிமண்ல செய்ற மண்பாண்டங்கள் சீக்கிரமே உடைஞ்சுடும்னு வாடிக்கையாளர்கள் சொல்வாங்க. அதனாலேயே சாதாரணமா இல்லாம 5 வகையான களிமண் கொண்டு நாங்கள் பாத்திரங்களை உருவாக்குறோம். முழுக்க முழுக்க கையால் செய்றது ஒருவகை. இன்னொன்று இயந்திரம் மூலமா செய்யறது. இயந்திரங்கள் மூலமா செய்யுற பொருட்கள் ஒரே அளவுல கிடைக்கும். ஆனா, எல்லாப் பொருட்களையும் அப்படி செய்ய முடியாது.

மண்பாண்டங்கள் மூலம் செய்யுற உணவு உடம்புக்கு எந்தப் பக்க விளைவையும் ஏற்படுத்தாது.  இதுவே மற்ற உலோகப் பாத்திரங்களிலோ, நான்ஸ்டிக் பாத்திரங்களிலோ, உப்பு, புளிப்பு எல்லாம் சேர்க்கும்போது, பாத்திரத்துடன் சேர்ந்து உணவின் தன்மை நச்சுப் பொருளாகுற வாய்ப்பு இருக்கு.

மண்பாண்டங்களைப் பொறுத்தவரை  மூணு நாளைக்கு சோறு வடித்த கஞ்சித் தண்ணியை ஊத்தி வெச்சிருந்தோம்னா அது பக்குவப்பட்டிருக்கும். அதுக்கப்புறம் அதை சமைக்கப் பயன்படுத்தலாம். இது எலெக்ட்ரானிக் காலம்கிறதால மைக்ரோவேவ்ல பயன்படுத்தற மாதிரியான  மண்பாண்டங்களையும்  வாங்கிட்டுப் போறாங்க...’’ என்றவர் அழகான மண் பொருட்களை நமக்கு காட்சிப்படுத்தினார்.

மண்ணெல்லாம் பொன்னே!

‘‘இட்லிப் பாத்திரம் எங்களோட ஸ்பெஷல்னு சொல்லலாம். இதை கையால மட்டும்தான் செய்ய முடியும். சைஸுக்கு தகுந்த மாதிரி 600, 700 ரூபாய்க்கு விற்கிறோம். இதில்லாம மண்ணால் செய்யப்பட்ட ஃப்ரிட்ஜ், கிரீன் டீ மேக்கர், ரைஸ் பாட், பிரியாணி பாத்திரம், கடாய்,  மில்க் பாட், வாட்டர் ஃபில்டர்னு வாடிக்கையாளர் விரும்புற மாதிரியான நவீன பாத்திரங்களையும் கொடுத்திட்டு இருக்கோம். இப்ப நவராத்திரி சீஸன் வேற. அதனால் கொலு பொம்மைகளையும் விற்பனைக்கு வெச்சிருக்கோம்’’ என்று தன் கலைப் பொருட்களை மகிழ்ச்சியுடன் அறிமுகப்படுத்தினார் கோமதி.

அவர் கணவர் அரசு பாஸ்கர், ஒரு சிறிய எதிர்பார்ப்பை மட்டும் நம்மிடம் வெளிப்படுத்தினார்...

‘‘அழிந்து வரும் இந்தக் கலையை எப்படியாச்சும் காப்பாத்திடணும். மக்கள் பாரம்பர்யத்துக்கு மறுபடியும் மாறிட்டா நல்லா இருக்கும்’’ என்று!

இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால் நல்லதுதானே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism