Published:Updated:

உங்ககிட்ட தனுஷ் நம்பர் இருக்கா?

உங்ககிட்ட தனுஷ் நம்பர் இருக்கா?
பிரீமியம் ஸ்டோரி
உங்ககிட்ட தனுஷ் நம்பர் இருக்கா?

சந்திப்பு - திவ்யதர்ஷினிஆர்.வைதேகி, படங்கள்: சு.குமரேசன்

உங்ககிட்ட தனுஷ் நம்பர் இருக்கா?

சந்திப்பு - திவ்யதர்ஷினிஆர்.வைதேகி, படங்கள்: சு.குமரேசன்

Published:Updated:
உங்ககிட்ட தனுஷ் நம்பர் இருக்கா?
பிரீமியம் ஸ்டோரி
உங்ககிட்ட தனுஷ் நம்பர் இருக்கா?

வாயாடிகளையும் வாய்விட்டு சிரிக்கிற பெண்களையும் பொதுவாக பலருக்கும் பிடிக்காது.

விதிவிலக்கு விஜய் டி.வி ஃபேம்  திவ்யதர்ஷினி!

நைன்ட்டீன் முதல் நைன்ட்டி வரை எல்லா வயதிலும் `டிடி’க்கு ஃபேன் கிளப், ஏ.சி கிளப் எல்லாம் உண்டு. `டிடி’ அத்தனை கூல்!

அவள் விகடன் 19-ம் ஆண்டு சிறப்பிதழுக்காக ‘காபி வித் ஸ்டூடன்ட்’ஸில் கெஸ்ட்டாக கலந்துகொள்ளத் தயாரா?

‘யெஸ்... ஐயம் ரெடி... எப்போ... எங்கே... என்னிக்கு?’ என ஆர்வமானார் `டிடி’.

அதே விஜய் டி.வி-யில்... அதே `காபி வித் டிடி’ செட்!

அவள் வாசகிகளான எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவிகள் கேள்விகளுடன் தயாராக, அட்டகாசமாக அரங்கேறியது அரட்டைக் கச்சேரி...

உங்ககிட்ட தனுஷ் நம்பர் இருக்கா?

ஸ்ரீமதி: நடுவுல கொஞ்ச நாள் காணாமப் போயிருந்தீங்க... ‘நான் வந்துட்டேன்னு சொல்லு... திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’னு வந்தீங்க... எப்படி இருந்தது அந்த ஃபீல்?

டிடி:  அது பெரிய ஆசீர்வாதம்தான். கிட்டத்தட்ட ஒரு வருஷம் நான் சேனல் பக்கம் தலைகாட்டலை. மக்கள் மறந்திருப்பாங்கனு நினைச்சேன். ஆனா, நான் மறுபடி வந்தப்ப, நேத்துதான் என்னோட ஷோ பார்த்த மாதிரி அவ்ளோ ஞாபகம் வெச்சுக்கிட்டுப் பேசினாங்க. என்னை ஒரு டி.வி செலிப்ரிட்டியா பார்க்காம, அவங்க வீட்டுப் பொண்ணா பார்த்தாங்க. என் மேல அவங்க வெச்சிருக்கிற அன்புக்கும் எதிர்பார்ப்புக்கும் குறை இல்லாம நடந்துக்கணும்கிற பயம்தான் அதிகமாகியிருக்கு.

ராஜலட்சுமி: `காபி’ வித் டி.டி’யில நீங்க சந்திக்க நினைக்கிற செலிப்ரிட்டி?

டிடி:   சந்திக்கணும்னு நினைச்சு முடியாமப்போனதுன்னா நாகேஷ் சார். ரொம்ப ஆசைப்பட்டேன். நடக்கலை.

வாழ்க்கையில என்னிக்காவது ஒரு நாள் சந்திக்கணும்னு நினைக்கிற வங்கன்னா நம்ம முதலமைச்சர்... அற்புதமான மனுஷி! ஒரு நடிகையா எத்தனை ஹிட் படங்கள் கொடுத் திருக்காங்க... அவங்க பேசறதைக் கேட்கறதே நமக் கெல்லாம் பெரிய இன்ஸ்பிரேஷனா இருக்கும். அவங்ககிட்ட கேட்கறதுக்கு நிறைய விஷயங்கள் வெச்சிருக்கேன்... கண்டிப்பா மீட் பண்ணணும்...

தாரணி: `ஒருநாள் சி.எம்’ ஆக வாய்ப்பு வந்தால்..?

டிடி: சி.எம்மா? எப்படா சிக்ஸ் பி.எம் ஆகும்னு வெயிட் பண்ணிட்டு, கடையை மூடிட்டு ஓடி வந்துருவேன். சும்மா பேசலாமே தவிர, அதெல்லாம் சாதாரண காரியமில்லை. அவங்க சுமக்கிற பொறுப்புகள் எல்லாம் பெரிய விஷயம். நம்ம புரிதலை எல்லாம் தாண்டின பிரச்னைகளை சுமக்கிற பொறுப்புல இருக்காங்க... சான்ஸே இல்லை!

ஸ்ரீமதி: ஒரு நாள் முழுக்க மவுனவிரதம்... `டிடி’யால முடியுமா?

டிடி:   உண்மையைச் சொல்ல ணும்னா நான் ரொம்ப பேசவே மாட்டேன். அவ்ளோ அமைதியான பொண்ணு. கல்யாணமான புதுசுல ஹஸ்பண்ட்கூட வெளியில போனப்ப, ‘இவங்க ஏன் பேசவே மாட்டேங்கிறாங்க’னு நிறைய பேர் கேட்டிருக்காங்க. ‘அவங்க எப்பவுமே அப்படித்தான்’னு அவர் சொன்னா யாரும் நம்பலை. ‘டி.வி-ல மட்டும்தான் பேசுவியா... என்கூடவெல்லாம் பேச மாட்டியா’னு எங்கம்மா சண்டையே போட்டிருக்காங்க. அதென்னவோ மைக் வெச்சா, கேமரா முன்னாடி மட்டும்தான் பேச்சே வருது... நம்புங்க மக்களே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்ககிட்ட தனுஷ் நம்பர் இருக்கா?

ஸ்ரீமதி: நீங்க எத்தனையோ பேருக்கு ரோல் மாடலா இருக்கீங்க... உங்களுக்கு யார் ரோல் மாடல்?

டிடி:  ரொம்ப சின்ன வயசுலயே மீடியாவுக்கு வந்துட்டேன். ரோல் மாடல்னு ஒருத்தரை வெச்சுக் கணும்னுகூட அப்போ எனக்குத் தெரியலை. என் அக்கா ப்ரியதர்ஷினி, பெப்சி உமா, உமா பத்மநாபன், ஜேம்ஸ் வசந்தன்னு நிறைய பேரோட சேர்ந்தே இருந்திருக்கேன். ஒரு ஷோவுல மைக்கை என்கிட்ட கொடுத்து 300 பேர் முன்னாடி பேச வெச்சார் ஜேம்ஸ் வசந்தன். ‘இதெல்லாம் ரொம்பக் கஷ்டம்... ஜாக்கிரதை’னு சொல்லியிருந்தா சொதப்பியிருப்பேனோ என்னவோ... அப்படியெல்லாம்  யாரும் சொல்லலை. இவங்க எல்லாரும் என்னோட ஆழ்மனசுல ரோல் மாடல்களா இருந்திருக்கலாம். எனக்கு முன்னாடி இவங்க எல்லா ரும் பண்ணின விஷயத்தோட தொடர்ச்சியைதான் நான் பண்ணிட்டிருக்கேன்...

ராஜலட்சுமி: உங்களுக்கும் உங்க அக்காவுக்குமான நெருக்கம் பத்தி...

டிடி: அக்கா எனக்கு இன்னொரு அம்மா மாதிரி. நிறைய திட்டுவாங்க. அதைவிட அதிகமா அட்வைஸ் பண்ணுவாங்க. எந்த விஷயமானா லும் நான் அக்காகிட்டதான் போய் நிற்பேன். அவங்களோட எக்ஸ்பீரியன்ஸும் பக்குவமும் எனக்குப் பெரிய சப்போர்ட். அது வார்த்தைகளால விவரிக்க முடியாத ஒரு பந்தம்...

நிவாசினி: காலேஜ்ல லெக்சரரா வேலை பார்த்த அனுபவம்?

டிடி: ரொம்ப அருமையான அனுபவம் அது. இப்ப நான் அந்த வேலையில இல்லை. ஆனா, மறுபடி போற ஐடியா இருக்கு. நான் கிளாஸ் எடுத்தா ஸ்டூடன்ட்ஸ் நல்லாவே கவனிப்பாங்க. ஸ்டூடன்ட்ஸுக்கு நானே தினம் நோட்ஸ் எடுப்பேன். எக்ஸாம் டைம்ல ரொம்ப டென்ஷனாகிடுவேன். அதுக்காக பெரிய ஷோஸைகூட வேணாம்னு சொல்லியிருக்கேன்.

ஸ்ரீமதி: நீங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட் டீச்சராமே?

டிடி: யாரு... நானா? என்னைப் பார்த்தா அப்படியா தெரியுது? கிளாஸ் எடுத்து முடிச்சுட்டு, கடைசி 10 நிமிஷம் சந்தேகங்கள் இருந்தா கேட்கச் சொல்வேன். எந்த டவுட்டும் இல்லைம்பாங்க. திடீர்னு ஒருத்தி எழுந்திருப்பா... ‘உங்ககிட்ட தனுஷ் நம்பர் இருக்கா? ஒரு ஹாய் சொல்லணும்’னு ஆரம்பிப்பா... ‘என்கிட்ட அதெல்லாம் இல்லம்மா... ஷூட்டிங் டைம்ல பேசறதோட சரி... ஸாரி’னு சொல்லி சமாளிக்கணும். ஸ்ட்ரிக்ட்டா இருந்தா இப்படியெல்லாமா என்கிட்ட கேட்பாங்க?!

ராஜலட்சுமி: வேலை, வீடு, சேனல்னு எல்லாத்தையும் எப்படி சமாளிக்கிறீங்க?

டிடி: எது முக்கியம்னு லிஸ்ட் பண்ணிக்கணும், அவ்வளவுதான். மத்தபடி டைம் மேனேஜ்மென்ட்டுங்கிறது உங்கம்மாவும் எங்கம்மாவும் பண்ணாததா என்ன? வீடு, சமையல், பிள்ளைங்கனு எல்லாத்தையும் அழகா சமாளிச்சு, எத்தனை இம்சைகளை தாங்கறாங்க... உங்கம்மாகிட்ட போய் கேளுங்க... டைம் மேனேஜ்மென்ட்னா என்னனு புரியும்!

நிவாசினி:
`டிடி’னாலே கலகலப்பு... ஆனா, ‘நீயா நானா’ மாதிரி ஒரு சீரியஸான ஷோவை உங்களைப் பண்ணச் சொன்னால்?

டிடி:  ஆக்சுவலி நான் ரொம்ப சீரியஸ் டைப். என்னோட வேலை என்டர்டெயின்மென்ட். அது எனக்கு வருது... பண்றேன். நீங்க சொல்ற மாதிரி இன்ஃபோடெயின்ட்மென்ட் ஷோ பண்ணச் சொல்லிக் கேட்டாங்கன்னா, என்னால முடியுமானு பார்ப்பேன். எதைச் செய்தாலும் ஒழுங்கா பண்ணணும் எனக்கு. இந்த ரூமை பெருக்கச் சொன்னீங்கன்னா அதை பக்காவா பண்ணுவேன். அதனால, எந்த வேலையா இருந்தாலும் உருப்படியா பண்ண முடியும்னு தெரிஞ்சா மட்டும்தான் பண்ணுவேன்.

சுபாஷினி: ஸ்டூடன்ட்ஸை சந்திக்கிறதுன்னா உங்களுக்கு ரொம்பப் பிடிக்குமாமே... நிஜமாவா?

டிடி: யெஸ்... உண்மைதான். ஸ்டூடன்ட்ஸ் கூட இருக்கிறப்ப நான் இன்னும் இளமையா ஃபீல் பண்றேன். நான் அவங்களுக்குச் சொல்ற ஏதோ ஒரு விஷயம், அவங்க மனசுல சின்னதா ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினாகூட சந்தோஷம்தான். ‘பத்து வருஷத்துக்கு முன்னாடி `டிடி’ அப்படி சொன்னாங்களே’னு அவங்க நினைச்சுப் பார்க்க வைக்கிறதை சாதனையா நினைக் கிறேன். ஸ்டூடன்ட்ஸ்கூட பேசறபோது நான் நிறைய கத்துக்கறேன்...’’

உங்ககிட்ட தனுஷ் நம்பர் இருக்கா?

நிவாசினி: ஒரு டிரெஸ்ஸை அஞ்சு தடவைக்கு மேல போட மாட்டீங்களாமே..?

டிடி:  ஷோஸ்ல போடறத அடிக்கடி ரிபீட் பண்ண மாட்டேன். மத்தபடி பர்சனல் டிரெஸ்ஸை பொறுத்தவரைக்கும் கிழிஞ்சுத் தொங்கற அளவுக்குப் போடுவேன். வீட்ல வந்து பார்த்தீங்கன்னா, நானும் உங்களை மாதிரி பழைய நைட்டியோடதான் இருப்பேன். சில டிரெஸ் பழசானாலும் நமக்குத் தூக்கிப் போட மனசு வராதில்லையா... அப்படி சில டி-ஷர்ட் வெச்சிருக்கேன். ஒரு ஸ்டேஜ்ல எங்கம்மா கடுப்பாகி, கிழிச்சுத் தூக்கி எறிவாங்கன்னா பார்த்துக்கோங்க!

ராஜலட்சுமி:மீடியாவுக்கு வர நினைக்கிற பொண்ணுங்களுக்கு உங்க அட்வைஸ்?

டிடி: ஒரு அட்வைஸும் இல்லை. என்னைவிட அவங்களுக்கு நிறைய தெரியும். நான் மீடியாவுக்கு வந்து ரொம்ப காலமாச்சு. வெளி உலகத்தோட தொடர்பு இல்லை. ஆனா, புதுசா வர்றவங்க ரொம்ப அப்டேட்டடா இருக்காங்க. எல்லார்கூடவும் தொடர்புல இருக்காங்க. அட்வைஸ் கொடுத்தே ஆகணும்னா ஒண்ணுதான் சொல்லணும்... உங்க வேலைக்கு மரியாதை கொடுங்க... வேலை கொடுக்கிறவங்களுக்கும் மரியாதை கொடுங்க... அவ்வளவுதான்!

சுபாஷினி: ஃபேவரைட் லொகேஷன்?

டிடி:   டிராவல் பண்றது மூலமா நிறைய விஷயங்களைக் கத்துக்க முடியும். அதனாலயே எனக்கு டிராவல் ரொம்பப் பிடிக்கும். ஃபேவரைட் இடம்னா ஹாங்காங். அங்க உள்ள புத்தர் கோயிலுக்கு பல மணி நேரம் டிராவல் பண்ணித்தான் போகணும். மலைமேல உள்ள அந்த புத்தர்
அவ்வளவு அழகு! ஸ்விட்சர்லாந்துல ஒரு மாதா கோயிலுக்குப் போனேன். உலகப் போரின்போது அங்க உள்ள எல்லாம் தரைமட்டமா அழிஞ்சு போயிருச்சாம், இந்த மாதா கோயிலைத் தவிர. அது அவ்வளவு ஸ்பெஷல்! இன்னும் ஆஸ்திரேலியா, எகிப்து, சவுத் ஆஃபிரிக்கானு பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய இருக்கு!

தாரணி: `டிடி’ ஓவரா கலாய்ச்சது யாரை? `டிடி’யை ஓவரா கலாய்ச்சது யாரு?

டிடி:  கலாய்க்கிறதா... நானா... நான் யாரைப்பா அப்படிக் கலாய்ச்சிருக்கேன்? என்னை ஓவரா கலாய்ச்சதுன்னா தீபக். அப்புறம் ராதிகா மேடமும் ஸ்ரீப்ரியா மேடமும் கலந்துக்கிட்ட ஷோவுலயும் பயங்கரமா கலாய்ச்சாங்க.

ராஜலட்சுமி: ராதிகா மேடம்கிட்ட அடி வாங்கியிருக்கீங்களாமே?

டிடி:
அடின்னா நீங்க நினைக்கிற மாதிரி அடி இல்லை. அது ஒரு சீரியலுக்கான ஷாட். மேடம் என்னை அடிக்கிற மாதிரி ஷாட்ல, நிஜமாவே பளார்னு கன்னத்துல ஒண்ணு விட்டாங்க. நான் ரோலிங்ல இந்தப் பக்கத்துலேருந்து அந்தப் பக்கம் போய் விழுந்தேன். அதுக்கப்புறம் ரெண்டு பக்கம் டயலாக் எல்லாம் பேசி முடிச்சுட்டு, மேடம் ஓடி வந்து பார்த்தாங்க. அவங்க கை என் கன்னத்துல பதிஞ்சிருந்தது. ரெண்டு பேருக்குமே சிரிப்பு வந்திருச்சு!

ராஜலட்சுமி: ராதிகா மேடம்கூட வொர்க் பண்ணின எக்ஸ்பீரியன்ஸ் எப்படி இருந்தது?

டிடி:  ராதிகா மேடம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். ‘உன்னை வளர்க்கறேன் பாரு’ன்னு சொல்லாமலே அதை செய்தவங்க. என்னை முதல் முதல்ல ஃபாரின் ட்ரிப் கூட்டிட்டுப் போனவங்க அவங்கதான். தனிப்பட்ட முறையிலயும் என்னை பிரமிக்க வெச்ச லேடி அவங்க. ‘குடும்பம், சீரியல், சினிமானு எல்லாத்தையும் அவங்க எப்படித்தான் ஹேண்டில் பண்றாங்க... அதுலயும் கொஞ்சம்கூட டயர்டே ஆகாம’னு ஆச்சர்யப்பட்டிருக்கேன்!

உங்ககிட்ட தனுஷ் நம்பர் இருக்கா?

ஸ்ரீமதி: யாரோட மியூசிக் பிடிக்கும்?

டிடி:  80ஸ்லயும் 90ஸ்லயும் பிறந்தவங்களுக்கு இசைன்னா என்னனு அறிமுகப்படுத்தி வச்சு, அதை ரசிக்கவும் கத்துக்கொடுத்தவர்னா ஏ.ஆர்.ரஹ்மான்தான். அதுக்கப்புறம்தான் நிறைய பேர், மத்தவங்களோட இசையையும் தேடிப் போக ஆரம்பிச்சாங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் தி பெஸ்ட் மியூசிக் டைரக்டர்னா அவர்தான். இப்பல்லாம் அனிருத் மியூசிக்கும் பிடிக்குது!

சுபாஷினி: கடைசியா உங்க ஸ்டைல்ல ஒரு கேள்வி... ஒரு தேங்க்ஸ்... ஒரு சாரி சொல்லணும்னா யாருக்குச் சொல்வீங்க?

டிடி:  என்னோட எல்லா டீச்சர்ஸுக்கும் தேங்க்ஸ் சொல்லிக்கறேன். நான் இன்னைக்கு இருக்கிற இடத்துக்கு அவங்கதான் காரணம்.

ஸாரியெல்லாம் நான் கடன் வெச்சுக்கிற தில்லை. ஸாரி கேட்கணும்னு தோணினா, எப்படியாவது அவங்களை அடிச்சுப் பிடிச்சாவது கேட்ருவேன்!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism