Published:Updated:

தொலைந்துபோகும் குழந்தைகள்... திரும்ப கிடைக்கும் கேள்விகள்!

தொலைந்துபோகும் குழந்தைகள்... திரும்ப கிடைக்கும் கேள்விகள்!
பிரீமியம் ஸ்டோரி
தொலைந்துபோகும் குழந்தைகள்... திரும்ப கிடைக்கும் கேள்விகள்!

தேவை அதிக கவனம்கே.ஆர்.ராஜமாணிக்கம், ஸ்ரீலோபாமுத்ரா

தொலைந்துபோகும் குழந்தைகள்... திரும்ப கிடைக்கும் கேள்விகள்!

தேவை அதிக கவனம்கே.ஆர்.ராஜமாணிக்கம், ஸ்ரீலோபாமுத்ரா

Published:Updated:
தொலைந்துபோகும் குழந்தைகள்... திரும்ப கிடைக்கும் கேள்விகள்!
பிரீமியம் ஸ்டோரி
தொலைந்துபோகும் குழந்தைகள்... திரும்ப கிடைக்கும் கேள்விகள்!
தொலைந்துபோகும் குழந்தைகள்... திரும்ப கிடைக்கும் கேள்விகள்!

13 வயது நிரம்பிய பூஜிதா என்ற பெங்களூரு மாணவி தொலைந்துபோனதும், அதைத் தொடர்ந்து  பறந்த வாட்ஸ்அப், ஃபேஸ்புக், டிவிட்டர் செய்திகளால் மீண்டும் அவள் கண்டுபிடிக்கப்பட்டதும் சமீபத்திய வைரல் செய்தி.

என்ன நடந்தது பூஜிதாவுக்கு?

வழக்கம்போல பள்ளிக்குச் சென்ற பூஜிதா, மாலை வீடு திரும்பவில்லை. பெற்றோர் பதறிப்போனார்கள். உடனே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டதோடு, வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் அவளது புகைப்படத்துடன் செய்திகள் தேசம் முழுக்கப் பகிரப்பட்டன.

கடத்தலா, தனிப்பட்ட பிரச்னையா, அவளே வீட்டைவிட்டுச் சென்றுவிட்டாளா? என்ன ஆனது பூஜிதாவுக்கு? அனைவரும் பதறிக்கொண்டிருந்த சூழலில், நான்கு நாட்கள் கழித்து ஹூப்ளி ரயில் நிலையத்தில் அவளைக் கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்தது போலீஸ்.

பள்ளிக்கூடம் சென்ற பூஜிதா வீடு திரும்பாமல், அஜ்மீர் எக்ஸ்பிரஸில் ஏறியது ஏன்?

`‘கணக்குப் பாடத்தில் குறைவான மதிப்பெண் பெற்றிருந்தாள். அதனால் மனம் சோர்ந்துபோயிருந்தாள். ‘நன்றாகப் படித்தால், அடுத்த தேர்வில் அதிக மதிப்பெண் பெறமுடியும்’ என்று ஆறுதல் கூறினோம். ஆனால், இப்படிச் செய்வாள் என நினைக்கவில்லை’’ என்றனர் அவளது பெற்றோர்.

பெற்றோர் ஆறுதல் கூறிய பின், ஏன் வீட்டைவிட்டுப் போக வேண்டும்? குழந்தையிடம் அதற்கான பதில் இல்லை.

இப்போது, நமக்கு பதில் தேவையில்லை, தீர்வுதான் தேவை.  

``பள்ளிக்கூடத்தில் நம் பிள்ளைகளை ‘listen, dont talk’ என்கிறார்கள். தாத்தா, பாட்டிகள் அற்ற வீட்டில் டி.விதான் அவர்களுக்குத் துணை. விளையாட்டு அவர்களிடமிருந்து பிடுங்கப்பட்டுவிட்டது. பெண் குழந்தைகள் அனுபவிக்கும் பாலியல் ரீதியான பிரச்னைகள் அதைவிடக் கொடுமை. யாரிடமும் மனம்விட்டுப் பேச முடியாத சூழலில், அவர்கள் தங்கள் பிரச்னையை எப்படித்தான் சமாளிப்பார்கள்?’’ என்று கேட்கிறார் கல்வியாளர் ஆயிஷா நடராசன்.

‘`மதிப்பெண்களைத் துரத்தும் இன்றைய கல்வி முறையில், குழந்தைகளின் மனநிலையைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. அமைச்சர் சொல்வதை செகரட்டரியும், செகரட்டரி சொல்வதை இயக்குநரும், இயக்குநர் சொல்வதை மாவட்டக் கல்வி அதிகாரியும், அதிகாரி சொல்வதை தலைமை ஆசிரியரும், தலைமை ஆசிரியர் சொல்வதை ஆசிரியரும், ஆசிரியர் சொல்வதை மாணவர்களும் கேட்க வேண்டும். இதுதான் இங்கு நடைமுறை. ஆனால், இந்தக் கல்வி உண்மையான கல்வியாக இருக்க வேண்டும் என்றால், இந்த வரிசை மாணவர்களிடமிருந்து மேல்நோக்கியதாக இருக்கவேண்டும்.

தொலைந்துபோகும் குழந்தைகள்... திரும்ப கிடைக்கும் கேள்விகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குழந்தை தான் நினைப்பதைச் சொல்லும் சுதந்திரமும் சூழலும் இங்கு வழங்கப்படவில்லை. அதனால்தான் அது வீட்டை விட்டு ஓடுகிறது, தற்கொலை செய்துகொள்கிறது, வேறு முடிவெடுக் கிறது, வீட்டிலும் வெளியிலும்  தற்போக்குத் தனத்தில் வன்முறைக்குத் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறது.

ஆசிரியர்களும் பெற்றோரும் பேசிக் கொண்டே இருப்பவர்களாகவே இல்லாமல், எப்போது மாணவர்கள் சொல்வதைச் செவிமடுப்பவர்களாக ஆகிறார்களோ, என்றைக்கு நம்முடைய கல்வி குழந்தைகள் மையக் கல்வியாகச் செயல்படத் தொடங்கு கிறதோ, ‘இந்தக் குழந்தைக்கு நான்கு வயது ஆகிறது, இந்த வயதில் இதைக் கற்றுக்கொள்வதில் சிரமம் இருக்கும், அதற்காகக் கோபப்படாமல் அதன் குழந்தைப்பருவத்தைப் பராமரிப்போம்’ என்கிற கல்வி எப்போது செயல்படத் தொடங்குகிறதோ... அப்போதுதான் இதுபோன்ற சம்பவங் களைத் தவிர்க்க முடியும்.

குறிப்பிட்ட சம்பவத்தில், ஒருவேளை அந்தப் பெண் கண்டு பிடிக்கப்படாமல் போயிருந்தால், அதற்கு என்னவெல்லாம் நேர்ந் திருக்க வாய்ப்பிருக்கிறது? அந்த வன்முறைக்கு இந்தக் கல்வி முறைதான் காரணமாகி இருக்கும்’’ என்கிறார் ஆயிஷா நடராஜன் காட்டமாக.

ஆசிரியர் உமாமகேஸ்வரி,  ``பெற்றோர்கள், ஆசிரியர்கள் என இந்த இரு தரப்பும் குழந்தைகளுக்குப் பாடங்கள் தொடர்பான அறிவைத்தான் தர வேண்டுமே தவிர, அழுத்தத்தைத் தரக்கூடாது. அப்படி அவர்கள் மீது அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்புகளும் கண்டிப்புகளும் திணிக்கப்படும்போது, அந்தக் குழந்தைகளின் மனத்திறனுக்கும் அதிகமான சுமையைத் தாங்க இயலாமல், சூழ்நிலையை எப்படிச் சமாளிப்பது என்றும் அறியாமல் இதுபோன்ற முடிவை எடுக்க நேரிடுகிறது. எல்லா மாணவர்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. படிக்கும் குழந்தைகளை முதல் மதிப்பெண் வாங்கவைப்பதைவிட, படிக்காத குழந்தைகளை திறனில் மேம்படுத்துவதே இங்கு முக்கியமானது. பெற்றோரும் ஆசிரியரும் அதை ஆரோக்கியமான சூழலில் சாத்தியப்படுத்த வேண்டும்’’ என்று தீர்வை முன்வைக்கிறார்.

``ஒவ்வொரு குழந்தைக்கும் தன் வீடுதான் இந்த உலகில் பிடித்த இடமாக இருக்க வேண்டும். இங்கோ பல குழந்தைகளுக்கு வீடு என்றாலே பிடிக்காமல் போகக் காரணம், அங்கு அவர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைதான்’’ என்ற இயக்குநர் சமுத்திரக்கனி, ``படிக்கச் சொல்றது தப்பா... அது வன்முறையா என்று கேட்கலாம். படிப்பில் ஆர்வமில்லாத குழந்தைகளையும் படி படி என்று துன்புறுத்துவது தப்புதான். பதிலாக, விளையாட்டு, இசை, எழுத்து, கலை என்று அவர்களுக்கு விருப்பமுள்ள மற்ற துறைகளில் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். ‘என் குழந்தைகளின் நிறை, குறைகளோடு அவர்களை மனதார ஏற்று, அவர்களின் எல்லா முயற்சிகளிலும், வெற்றி களிலும் தோல்விகளிலும் அதற்குத் துணையாக இருப்பேன்’ என்று பெற் றோர் உறுதிமொழி எடுக்க வேண்டும். மதிப்பெண் குறைந்தால் பரவாயில்லை. குழந்தை போனால் கிடைக்குமா?” என்கிறார் ஆற்றாமையுடன்.

தொலைந்துபோகும் குழந்தைகள்... திரும்ப கிடைக்கும் கேள்விகள்!
தொலைந்துபோகும் குழந்தைகள்... திரும்ப கிடைக்கும் கேள்விகள்!

கல்லூரி மாணவி கோபிகா, ‘`ஒரு நாளின் 24 மணி நேரத்தில், விழித்திருக்கும் 14 மணி நேரத்தில், 12 மணி நேரமும் மாணவர்கள் படித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று பள்ளியும் வீடும் எதிர்பார்க்கிறது. ‘நிறைய மார்க் எடுத்தாதான் ஃப்யூச்சர் நல்லா இருக்கும்’ என்கிறார்கள். அதற்காக எவ்வளவுதான் படிக்க முடியும்? மற்ற மாணவர் களுடன் ஒப்பிட்டுப் பேசுவது, குறைந்த மதிப்பெண் எடுக்கும் மாணவர் களை  எதற்குமே லாயக்கற்றவர்கள் என்று முத்திரை குத்துவது, விளையாட்டு என்ற ஒன்றையே அனுமதிக்காதது என இவை எல்லாம் சேர்ந்து தரும் மன அழுத்தத்தால் இன்று பல மாணவர்களும் பாதிக்கப்பட்டிருப்பது உண்மை. படிப்பும் சந்தோஷமும் ஒன்றாகவே முடியாதா?’’ என்று பரிதாபமாகக் கேட்கிறார், ஒட்டுமொத்த மாணவ சமுதாயத்தின் குரலாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism