Published:Updated:

திருப்பதி லட்டு - பிரசாதம் 1998

திருப்பதி லட்டு - பிரசாதம் 1998
பிரீமியம் ஸ்டோரி
திருப்பதி லட்டு - பிரசாதம் 1998

அவள் கிளாஸிக்ஸ்

திருப்பதி லட்டு - பிரசாதம் 1998

அவள் கிளாஸிக்ஸ்

Published:Updated:
திருப்பதி லட்டு - பிரசாதம் 1998
பிரீமியம் ஸ்டோரி
திருப்பதி லட்டு - பிரசாதம் 1998
திருப்பதி லட்டு - பிரசாதம் 1998

திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் லட்டு பிரசாதமானது எப்படி?

300 ஆண்டுகளுக்கு முன்... பெருமாளைத் தரிசிக்க வருபவர்கள் ஊர் திரும்பும்போது மகிழ்ச்சியாகச் செல்ல வேண்டும் என்று தேவஸ்தானம் நினைத்தது. அதனால், சுவாமி தரிசனம் முடித்து வெளியே வருபவர்களுக்கு குட்டிக் குட்டி லட்டுகள் பிரசாதமாக வழங்கப்பட்டன. பிறகு, இது அளவிலும் புகழிலும் பெரிதாக வளர்ந்தது. `லட்டு படி சேவா’ என்கிற சிறப்பு தரிசனங்கள் உருவாக்கும் அளவுக்கு திருப்பதி லட்டின் பெருமை கூடியது. திருமலை சந்நிதானத்தின் உள்ளேயே லட்டு தயாரிக்கும் பிரமாண்ட மடப்பள்ளி உள்ளது. ஒரு நாளைக்கு (1998-ல்) சுமார் ஐம்பதாயிரம் லட்டுகள் தயாரிக்கப்பட்டன. இப்போது தினம் 3 லட்சம்! லட்டு தயாரிப்புக்கென 620 பேர் வேலை செய்கிறார்கள். இதில் பெரும்பான்மையோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களே!

திருப்பதி லட்டு - பிரசாதம் 1998

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு முக்கியமான விஷயம்... திருப்பதியில் லட்டு ஃபேமஸ் ஆகிவிட்டாலும் திருமலையில் இருக்கும் திருமாலுக்கு நைவேத்தியம் செய்யப்படுவது தயிர் சாதமும், வடையும்தான்! பசுந்தயிரில் சாதம் கிளறி தயிர்சாதம் தயாரிக்கிறார்கள். அடுத்தது வடை! இப்போதும் திருமலை திருப்பதி தேவஸ்தான வளாகத்துக்குள் இருக்கும் - விஷயம் தெரிந்தவர்களுக்கு மத்தியில் பக்தியோடு பார்க்கப்படும் பிரசாதம் வடை. திருமலையில் பிரசாதமாக படைக்கப்படும் வடை கிட்டத்தட்ட முறுக்கு போல மொறுமொறுவென்று இருக்கும். மிளகு நெடியுடன் காரசாரமாகவும் இருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism