Published:Updated:

அக்கறையும் அழகான தோட்டமும்!

அக்கறையும் அழகான தோட்டமும்!
பிரீமியம் ஸ்டோரி
அக்கறையும் அழகான தோட்டமும்!

பசுமை- வீட்டுத்தோட்ட குறிப்புகள்!ஜி.பழனிச்சாமி

அக்கறையும் அழகான தோட்டமும்!

பசுமை- வீட்டுத்தோட்ட குறிப்புகள்!ஜி.பழனிச்சாமி

Published:Updated:
அக்கறையும் அழகான தோட்டமும்!
பிரீமியம் ஸ்டோரி
அக்கறையும் அழகான தோட்டமும்!
அக்கறையும் அழகான தோட்டமும்!

செடி வளர்க்க வேண்டும், தோட்டம் போட வேண்டும் என்கிற ஆசை இல்லாதவர்கள் குறைவே. மனமகிழ்ச்சியையும் வருமானத்தையும் தரும் வீடு/மாடித்தோட்டம் போடுவதில் என்ன வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்று சொல்கிறார் ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோயில் பகுதியைச் சேர்ந்த வீட்டுத்தோட்ட நிபுணர் பேராசிரியர் முனைவர் ப.வெங்கடாச்சலம்.

* வீட்டுத்தோட்டம் அல்லது மாடித்தோட்டம் அமைக்க நினைத்தால், உங்களுக்குத் தேவையான செடிகளை மட்டும் வளர்த்தால் போதுமானது. ஆர்வத்தின் காரணமாக அதிக செடிகளை வாங்கிவைத்துவிட்டு பிறகு பராமரிக்க முடியாமல் திணற வேண்டாமே. 

* கண்டிப்பாக சூரிய ஓளி படும்படியான இடத்தில்தான் செடிகளை வளர்க்க வேண்டும். மாடித்தோட்ட செடியின் பைகளை அப்படியே தரையில் வைக்கக் கூடாது. நீண்ட பலகை அமைத்து அதன் மீது (அ) வரிசையாக அடுக்கப்பட்ட செங்கல் போன்ற உயரமான பொருள் மீது வைக்க வேண்டும்.

* மாடித்தோட்டம் அமைப்பவர்கள் தொட்டிகளில் இருந்து கசியும் தண்ணீர், தரையில் தேங்கி நிற்காதபடி வடிகால் வசதி செய்துகொள்ள வேண்டும். இல்லையெனில், காலப்போக்கில் கட்டடம் பழுதாகும் வாய்ப்பு உண்டு.

* புதிதாக காய்கறித் தோட்டம் அமைக்க நினைத்தால், எடுத்த உடனே காய்கறிகளை நடவு செய்யாமல் கீரை வளர்ப்பில் இருந்து தொடங்கலாம். அப்போதுதான் நோய்த்தொற்றில் ஆரம்பித்து பல்வேறு பிரச்னைகளைப் புரிந்துகொள்ளவும் கையாளவும் முடியும்.

* ஆர்வத்தின் காரணமாக தோட்டம் அமைத்துவிட்டு, நேரம் கிடைக்கும்போது பொழுதுபோக்கு விவசாயம் செய்தால் பலன் கிடைக்காது. காலை மற்றும் மாலை வேளைகளில் தினந்தோறும் ஒரு மணி நேரமாவது தோட்டத்துக்குச் செலவழிக்க வேண்டும்.

* கீரை, கொத்தமல்லித்தழை, வெங்காயம் போன்ற மென்மையான பயிர்களுக்கு அதிக வெயில் ஆகாது. இதற்கென இடத்தைத் தேர்ந்தெடுத்து, நிழல் வலை அமைத்து அதன் அடியில் வளர்க்க வேண்டும்.

* உப்புத் தண்ணீரில் காய்கறிகள் சிறப்பாக வளராது. ஆகவே, உங்கள் வீட்டில் புழங்கும் தண்ணீரை பரிசோதனைக்கூடத்தில் ஆய்வு செய்து அதன் தன்மைகளைத் தெரிந்து அதன்படி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அக்கறையும் அழகான தோட்டமும்!

செடிகள் வளர்த்தால் கூடுதல் மகசூல் பெறமுடியும்.

* வீட்டுக்கு அருகில் தோட்டக்கலைத்துறை அலுவலகம் எங்கிருக்கிறது என்பதை அறிவது அவசியம். விதைகள், உயிர் உரங்கள், உபகரணங்கள் பெற இந்தத் தொடர்பு மிகவும் முக்கியம்.

* தொட்டியில்/பைகளில் உள்ள செடிகள் இரண்டு முறை நல்ல முறையில் காய்த்துவிட்டால் உடனே, அத்தொட்டி/பைகளில் உள்ள மண்கலவைகளைக் கொட்டி நிழலில் 2 நாட்கள் உலர்த்த வேண்டும். மண்ணில் உள்ள ஈரம் போன பிறகு தொழு உரம், உயிர் உரம், வேப்பம் புண்ணாக்கு, மண்புழு உரம் போன்றவற்றைக் கலந்து சிறிது தண்ணீர்விட்டு பிசிறி நிழலில் 3 நாட்கள் உலர்த்த வேண்டும். பிறகு நன்கு உதிர்த்து வேறு ஒரு தொட்டி/பைகளில் நிரப்புவதை மறுசெறிவூட்டப்பட்ட மண் என்கிறோம். பிறகு விதை நட்டு வளர்த்தால் நல்ல மகசூல் தரும்.

* ஏற்கெனவே வெற்றிகரமாக வீட்டுத்தோட்டம் அமைத்து நல்ல மகசூல் எடுப்பவர்களின் வீடுகளுக்குச் சென்று பார்த்து அவர்களின் ஆலோசனைகளைப் பெற்று இன்னும் சிறப்பாக வீட்டுத்தோட்டத்தைப் பராமரிக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism