Published:Updated:

இனி புதிதாய்ப் பிறப்போம்!

இனி புதிதாய்ப் பிறப்போம்!
பிரீமியம் ஸ்டோரி
இனி புதிதாய்ப் பிறப்போம்!

டி.கே.வி.தேசிகாச்சார் - 1998அவள் கிளாஸிக்ஸ்

இனி புதிதாய்ப் பிறப்போம்!

டி.கே.வி.தேசிகாச்சார் - 1998அவள் கிளாஸிக்ஸ்

Published:Updated:
இனி புதிதாய்ப் பிறப்போம்!
பிரீமியம் ஸ்டோரி
இனி புதிதாய்ப் பிறப்போம்!
இனி புதிதாய்ப் பிறப்போம்!

திகாரோ விசேஷேண
ஸ்த்ரீணாம் பும்ப்யோ நிகத்யதே!
சந்தானதரு விஸ்தாரே
ஸ்திரீசரீரம் ஹி காரணம்!


ஆண்களைவிடப் பெண்களுக்குத்தான் யோகா அவசியம். ஏனெனில், அவள்தான் உயிரைத் தாங்கி உருவாக்குகிறாள்.'

- நாதமுனியின் ‘யோக ரகசியம்’ நூலில் இருந்து...

‘’யோகாசனம், உடற்பயிற்சி இதெல்லாம் ஆண்கள் சமாசாரம் இல்லியோ... பெண்களால் செய்ய முடியுமா?” - இது பலரின் மனதில் உள்ள கேள்வி.

ஆண், பெண், ஜாதி, மதம் எதையும் பார்க்காமல் நன்மை தருவது யோகா!

‘முக்கியமான யோகாவையெல்லாம் பெண்களுக்குச் சொல்லிக்கொடு’ - இது என் தந்தை கிருஷ்ணமாச்சாரியார் எனக்கு இட்ட கட்டளை.

ஓர் ஆண் நான்கைந்து வயது ஆன பிறகுதான் யோகாசனம் செய்ய முடியும். ஆனால், அவன் பிறப்பதற்கு முன்பாகவே, அவனை வயிற்றில் தாங்கியிருக்கும் பெண் அவனுக்காக யோகா செய்ய முடியும்.

இன்றைக்கும் நம் சமூகத்தில் ஆணைவிட பெண்ணுக்குத்தான் மன அழுத்தம் அதிகம். வீட்டுவேலைகளோடு ஆபீஸ் வேலைகள் வேறு. மாதாந்தர எரிச்சல், மெனோபாஸ் காலத் தொந்தரவுகள் ஒரு பக்கம்.

இவ்வளவு டென்ஷனையும் சமாளிக்க பத்துப் பதினைந்து நிமிடம் செலவிட்டு, தன் பேட்டரியை மீண்டும் சார்ஜ் செய்து கொள்ளவேண்டும். இதற்கு யோகா ரொம்பவே உதவி செய்யும். மனக்கவலை அதிகரிக்கும்போது, தஞ்சம் தேடும் இடம் பூஜையறை. அந்த நேரத்தில் பாதியை யோகாவுக்குக் கொடுத்தால் போதுமே!

இனி புதிதாய்ப் பிறப்போம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘`எனக்கென்ன உடம்புக்கு? நல்லாத்தானே இருக்கேன்... யோகா கீகாவெல்லாம் எதுக்கு?” என்று கேட்கும் பெண்கள் இருக்கிறார்கள். இளம் பெண்களே, ஜாக்கிரதை! முப்பது வயதுவரை உங்கள் இளமை உங்களைக் காப்பாற்றி விடும். பிறகு, இறங்குமுகம்தான். வீட்டில் எல்லோரையும் நீங்கள் கவனிக்க வேண்டும். உங்களை யாரும் கவனிக்க மாட்டார்கள். உங்களுக்கு நீங்களே துணை!

இனி புதிதாய்ப் பிறப்போம்!

முதல்நாள் மோர்க்குழம்பு செய்த பாத்திரத்தில் மறுநாள் பால் அல்வா கிளற முடியுமா? உங்கள் உடம்பு என்ற பாத்திரத்தைச் சுத்தம் செய்யும் வழிமுறையாகத்தான் யோகா இருக்கிறது. அதனால்தான் இதை வடமொழியில் ‘சம்ஸ்காரம்’ (சுத்தம் செய்யும் வழி) என்கிறார்கள்.
யோகா என்பது ஆண்களைவிட, பெண்களுக்கு அதிக பலன் தரும் என்று சொல்லக் காரணம் உண்டு. பெண்களுக்குத்தான் சிரத்தை அதிகம். கவனத்தோடு செய்யும் எந்தக் காரியமும் பலன் கொடுக்கும். கவனம் சிதறியபடி ஆண் ஒரு மணி நேரம் செய்யும் யோகாவுக்குக் கிடைக்கும் பலன், கான்சென்ட்ரேஷனோடு ஒரு பெண் பதினைந்து நிமிடம் செய்தாலே கிடைத்துவிடுகிறது!

எல்லாவற்றுக்கும் மேலாக நாதமுனி சொல்லியிருப்பது போல உயிரைத்தாங்கி உருவாக்குபவர் பெண். ‘இந்தக் கடமையைச் செய்யும் பெண்ணுக்குத் தன் உடலை யோகாவால் உறுதி செய்துகொள்ள பூரண உரிமை உண்டு’ என்கிறார் நாதமுனி. ஆரோக்கியமான நிலத்தில் விழுகிற விதைதான் வீரியமாக வளரும்.

இனி புதிதாய்ப் பிறப்போம்!

கர்ப்பிணிகளுக்கும்கூட சில ஆசனங்கள் உண்டு. அட்லாண்டாவில் மார்கரெட் என்கிற அமெரிக்கப் பெண்மணி. கர்ப்பிணிகளுக்கு மட்டுமேயான யோகா பள்ளி நடத்தி வருகிறார். இவரிடம் பயின்ற மாணவிகள் சரிபாதி பேருக்கு மயக்க மருந்தோ, பெயின் கில்லரோ இல்லாமல் சுகப்பிரசவம் ஆகியிருக்கிறது. இதைப் பற்றி மார்கரெட் ஒரு புத்தகமே எழுதி இருக்கிறார்!

சிறுமிகள் யோகா செய்தால், அவர்கள் பூப்படைவதும், மாதவிலக்கு ஆவதும் தள்ளிப்போகும் என்று சிலர் நினைக்கிறார்கள்...இது தவறான கருத்து. சிறுமிகள் நீச்சலடிக்கலாம், ஓட்டப் பந்தயங்களில் கலந்துகொள்ளலாம். அப்போதெல்லாம் ஏற்படாத ஆபத்து, யோகா செய்வதால் மட்டும் எப்படி ஏற்படும்? அது ஓர் அருமையான உடற்பயிற்சிதானே... அது எப்படி ஆரோக்கியத்தைக் கெடுக்கும்?

ஆகவே பெண்களே... உங்களுக்கானது யோகா! யோகா செய்யுங்கள்... மனமும் உடலும் சொன்னபடி கேட்கும் பாருங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism