Published:Updated:

‘‘என் மகளோடு நான் இருக்கும் ஒவ்வொரு மணித்துளியும்...’’

‘‘என் மகளோடு நான் இருக்கும் ஒவ்வொரு மணித்துளியும்...’’
பிரீமியம் ஸ்டோரி
‘‘என் மகளோடு நான் இருக்கும் ஒவ்வொரு மணித்துளியும்...’’

அர்விந்த்சாமி-1998அவள் கிளாஸிக்ஸ்

‘‘என் மகளோடு நான் இருக்கும் ஒவ்வொரு மணித்துளியும்...’’

அர்விந்த்சாமி-1998அவள் கிளாஸிக்ஸ்

Published:Updated:
‘‘என் மகளோடு நான் இருக்கும் ஒவ்வொரு மணித்துளியும்...’’
பிரீமியம் ஸ்டோரி
‘‘என் மகளோடு நான் இருக்கும் ஒவ்வொரு மணித்துளியும்...’’
‘‘என் மகளோடு நான் இருக்கும் ஒவ்வொரு மணித்துளியும்...’’

ள்ளே நுழைகிற நம்மை ஸ்மைல் பண்ணி மிரள வைக்கிறாள் செக்ஸி. ‘‘சும்மா வாங்க... கடிக்காது. இதோட பொண்ணு ஸ்காட்ச்தான் கொஞ்சம் டேஞ்சர்’’ என்றபடி வரவேற்கிறார் அர்விந்த்சாமி!

‘நாய்களுக்கென்றாலும் நல்ல கிக்கான பெயர்கள்’ என்றபடியே சோபாக்களில் அமர்ந்தோம். ‘‘சொல்லுங்க, என்ன பேசலாம்?” என்று கேட்டபடி தாடையை லேசாக வருடிக் கொள்கிறார்.

‘‘சினிமாவில் பார்க்கிற அதே அழகு நேரிலும் எப்படி?! என்ன செய்கிறீர்கள் இதற்கு?’’

“என்ன பண்றேன்? ஒண்ணும் கிடையாது. பெரும்பாலும் நான் மேக்கப் போடறதே கிடையாது. சின்ன மாறுதல் காட்டணும்கற சந்தர்ப்பம் ஏற்பட்டாலொழிய, என் இயற்கை முகத்தை அப்படியே கேமராவுக்குக் கொடுக்கறேன். எனக்குத் தெரியும்... இந்த இளமை இன்னொரு இருபது வருஷம் தாங்குமா? அப்புறம் எனக்கும் வயசாகும். முடி கொட்டும். உடல் தளரும். தொந்தி விழும். அதை நான் தடுக்க முடியுமா என்ன?” - யதார்த்தமாகப் பேசுகிறார்...  குறும்பாகக் கண்ணடிக்கிறார்!

‘‘சின்ன வயசிலே குறும்பு உண்டா?”


“குறும்புன்னு சொல்ல முடியாது. ஜாலியான லைஃப்னு சொல்லலாம். வெளியே போய் சுத்திட்டு வந்தா வீட்டிலே சாப்பாடு காத்துகிட்டே இருக்கும். ஐஸ்பாய், கபடின்னு அடலஸன்ட் ஏஜ் சந்தோஷமா இருந்தது. ரொம்ப லிமிடெட் ஃப்ரெண்ட்ஸ்தான் வெச்சுக்குவேன்...”

“பாய் ஃப்ரெண்ட்ஸைவிட கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் அதிகம்தானே?”

“இல்லே! ரெண்டும் ஈக்வலாதான் இருந்தாங்க. ஸ்கூல் ஸ்டடிஸ்ல கோ-எட் படிச்சேன். அந்த ஃப்ரெண்ட்ஸ்தான் எனக்கு. இப்பவும்கூட அதேதான் தொடருது. சின்ன வயசு நட்புதான் அழுத்தமானதும் ஆழமானதும்கூட. அவங்கள்லாம் ஃபேமிலி ஃப்ரெண்ட்ஸாகவும் மாறிடுவாங்க. பிறகு ஏற்பட்ட புது ஃப்ரெண்ட்ஸ் ஏனோ, அவ்வளவு தூரம் என்கிட்ட ஒட்டலை...”

“அந்த வயசிலேயே இளம் பெண்கள் தூக்கத்தைக் கெடுக்கத் தொடங்கிட்டீங்களா?”


``இவன் பார்க்க நல்லா ஸ்மார்ட்டா இருக்கான். இவன்கிட்ட ஃப்ரெண்ட்டாகணும்’னு அடலஸன்ட் ஏஜ்ல யாருக்காவது என் மேல ஈர்ப்பு ஏற்பட்டிருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். நட்புக்கும் காதலுக்கும் என்ன வித்தியாசம்னு ரொம்ப நல்லாத் தெரிஞ்சவன் நான். ஃப்ரெண்ட்ஸுக்கு நடுவில காதல் வராதுங்கிறது என்னோட கருத்து. எனக்கு வாழ்க்கையிலே ஒரே ஒரு காதல்தான்...”

`‘அந்தக் காதலைச் சொல்லுங் களேன்...’'

‘‘காயத்ரி வீடும், நாங்களும் ஃபேமிலி ஃப்ரெண்ட்ஸ். 1988-ல் நாங்க கொடைக்கானல் போன போது நிறைய பேச வாய்ப்பு கிடைச்சுது. பேசிப்பேசி டெவலப் ஆனதுதான் எங்க காதல். அங்கே இருந்த குளுமையான, சுத்தமான, அமைதியான இயற்கை சூழல்... இதெல்லாம்கூட எங்க காதல் வளரக் காரணம்னு சொல்வேன். மனசளவில் என் காதல் மெள்ள ‘டெவலப்’ ஆன நேரத்துல ஒரு தனிமையான சந்தர்ப்பம் கிடைச்சுது. முதல்ல, என் விருப்பத்தைச் சொன்னேன். அவள் உடனே திகைக்க வும் இல்லை... சந்தோஷப் படவும் இல்லை. கொஞ்சம் அவகாசம் வேணும்னு கேட்டா.

‘‘என் மகளோடு நான் இருக்கும் ஒவ்வொரு மணித்துளியும்...’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மெட்ராஸ் வந்த பிறகும், அவங்க வீட்டுக்கு நாங்க போறதும் வர்றதும் நடந்தது. அப்போ ‘ரோஜா’ படம் ரிலீஸாகி, நான் கொஞ்சம் பாப்புலரா இருந்த நேரம். ரெண்டு வீட்லயும் பேசி முடிவெடுத்து நிச்சயம் செய்தாங்க... இடையில் ரொமான்ஸுக்கெல்லாம் எந்தச் சந்தர்ப்பமும் இல்லை. ‘பம்பாய்’ படம் நடிச்சுக்கிட்டிருக்கறப்ப எங்க திருமணம் நடந்தது...”

அர்விந்த்சாமி வாய்க்கு ருசியாக வெஜிடேரியன் சாப்பிடுபவர் என்பது ஒரு பக்கமிருக்க... அவருக்கே மணக்க மணக்க புளிக்குழம்புகூட வைக்கத் தெரியுமாமே!

`‘ஆமா! நான் ரொம்ப நல்லா சமைப்பேன். அது காலத்தின் கட்டாயம்னுகூட சொல்லலாம். யு.எஸ்-ல படிக்கும்போது இந்திய சாப்பாடு சாப்பிடணும்னு ஆசைப்பட்டு சமைக்க ஆரம்பிச்சேன். என் ரூம்மெட்ஸெல்லாம் ‘டேய்! உன்னை மாதிரி சமைக்க ஆளே இல்லைடா!’னு பாராட்டிட்டாங்க... இப்பகூட வீட்ல ஃப்ரீயா இருந்தா டின்னர் பிரிப்பேர் பண்ணிக் கொடுப்பேன். நம்ம கையால் பெண்டாட்டி புள்ளைங்களுக்கு சமைச்சுப் போடறது எவ்வளவு நல்ல விஷயம் பாருங்க...”

அரவிந்த்சாமி நான்கு ஆண்டுகள் முன்புவரை நான்வெஜிட்டேரியனாக இருந்து, இப்போது ப்யூர் வெஜ் குழுவில் இணைந் துள்ளார்.

‘‘ஒரு சின்னக் காரணம் உண்டு. மிருகவதை தப்புன்னு உணர்ந்தபோது, நான்வெஜ் சாப்பிடறதை நிறுத்திட்டேன். ஆடு, மாட்டை அடிக்கிறவங்களைக் கண்டிக்கிற அளவுக்கு எனக்கு வாய்ப்பும் நேரமும் இல்லாட்டியும், என் வரையில நான் மிருகங்கள்கிட்டே பரிவு காட்ட விரும்பறேன்” என்கிற அர்விந்த்சாமிக்குப் பிடித்த ‘பெட் அனிமல்’ நாய்கள்தானாம்.

‘‘மணிரத்னத்தின் ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு வகையில் உங்களைப் பயன்படுத்திக்கொள்கிறாரே! அப்படி என்ன அண்டர்ஸ்டாண்டிங் உங்களுக்குள்?’’

‘‘தெரியலை. அவருக்கு என்னோட பெர்ஃபாமன்ஸ் பிடிச்சிருக்கு! அதனால என்னைப் பயன்படுத்திக்கறார்... அவ்வளவு தான். ‘இருவர்’ படத்தில் முதல்ல என்னைதான் கேட்டாங்க... ஆனா, நான் அப்போ ‘புதையல்’, ‘மின்சார கனவு’ படங்கள்ல கமிட் ஆகியிருந்ததால முடியாம விட்டுட்டேன்...”

இந்த இளமை ஹீரோவுக்கு இப்போது நிறைய நேரம் தேவைப் படுகிறது. காரணம், அதிரா என்கிற இவரது செல்லப் பெண்!

‘‘அதிரா பிறந்தபோது அவள் மூக்கு. காதுக்குள் எல்லாம் தண்ணீர் போகாமல் கவனமாகக் குளிக்க ஊற்றிவிட்டவன் நான்தான்!  காயத்ரிக்கு கழுத்து நிற்காத பச்சைக் குழந்தையை தூக்கக்கூட பயமா இருந்தப்ப... அவளுக்கு குழந்தையை தூக்க சொல்லிக் கொடுத் ததுகூட நான்தான்” என்று பெருமையோடு சொல்கிறார்!

‘‘குழந்தைங்க பண்ற ஒவ்வொரு விஷயத்தையும் நாம ரசிக்கணும். அவங்க எதிர்பார்க்கிறது அதைத் தானே! ஒரு குழந்தைக்கும் அப்பாவுக்கும் இடையே உள்ள உறவு மட்டும்தான் எந்தவித பிரதி உபகாரமும் எதிர்பார்க்காம நிகழக்கூடியது. அது ஆத்மார்த்தமானதுன்னுகூட சொல்வேன். குழந்தையோட வளர்ச்சியை ஒவ்வொரு அப்பாவும் பக்கத்துல உட்கார்ந்து மணிக்கணக்காக பார்க்கிறப்போதான் அதோட முழுமையான அர்த்தம் புரியும்’’ என்று மகளோடு தான் இருந்த மணித்துளிகளை எண்ணத் தொடங்கியவரிடம், ‘‘ஃபேமிலி போட்டோ எடுத்துக்கலாமே சார்!” என்றோம்.

‘‘வேண்டாமே! நான் நடிக்கிறேன். அதனால உங்ககிட்டே பேசறேன். என் குழந்தைகளும் மனைவியும் வெளி உலகுக்கு அடையாளம் காட்டப்படறதை நான் விரும்பலை. அதனாலேயே இதுவரை அவங்க சுதந்திரம் கெடாம இருக்கு... புரிஞ்சுக்குங்க, ப்ளீஸ்!” என்று கொள்ளையாகச் சிரித்து வழியனுப்பி வைத்தார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism