Published:Updated:

‘பெண்களுக்கு தீங்கிழைத்தால் தட்டிக் கேள்!'

‘பெண்களுக்கு தீங்கிழைத்தால் தட்டிக் கேள்!'
பிரீமியம் ஸ்டோரி
‘பெண்களுக்கு தீங்கிழைத்தால் தட்டிக் கேள்!'

- தன் மகன்களுக்கு மேரி கோமின் கடிதம்!அனுபவம்எம்.குமரேசன், மு.பிரதீப் கிருஷ்ணா

‘பெண்களுக்கு தீங்கிழைத்தால் தட்டிக் கேள்!'

- தன் மகன்களுக்கு மேரி கோமின் கடிதம்!அனுபவம்எம்.குமரேசன், மு.பிரதீப் கிருஷ்ணா

Published:Updated:
‘பெண்களுக்கு தீங்கிழைத்தால் தட்டிக் கேள்!'
பிரீமியம் ஸ்டோரி
‘பெண்களுக்கு தீங்கிழைத்தால் தட்டிக் கேள்!'
‘பெண்களுக்கு தீங்கிழைத்தால் தட்டிக் கேள்!'

‘லெட்ஸ் டாக் அபவுட் ரேப்’ என்ற தலைப்பில் ஆங்கிலப் பத்திரிகை ஒன்று, பிரபலங்கள் மூலம் விழிப்பு உணர்வு ஏற்படுத்தி வருகிறது. அதில் மேரி கோம், தனக்கு நடந்த பாலியல் வன்கொடுமைகளைச் சொல்லி, தன் மகன்களுக்கு பெண்களை மதிக்க கற்றுத் தர கடிதம் எழுதியிருக்கிறார். அதன் தமிழாக்கம் இதோ...

‘உலகப் புகழ்பெற்ற உங்கள் தாயும் பாலியல் இன்னல்களுக்கு ஆளானவர்தான். ஆம்... என்னுடைய 17 வயதிலும், அதன்பிறகு டெல்லி, ஹிசார் போன்ற இடங்களிலும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளானேன்' என்றவர் ஆண்களின் மனநிலை குறித்து கீழ்க்கண்டவாறு கேள்வியெழுப்பியிருக்கிறார்.

`அன்பு மகன்களே... உங்களைப் போல்தான் எனக்கும் இரு கண்கள். ஒரு மூக்கு உள்ளது. நமது உடலில் உள்ள சில உறுப்புகள்தான் என்னையும் உங்களையும் வேறுபடுத்துகின்றன. உங்களைப் போல்தான் நானும் மூளையால் சிந்திக்கிறேன். மனதால் உணர்வுகளைப் புரிந்துகொள்கிறேன். எனது மார்பகங்கள் அடுத்தவர்கள் தொடுவதற்காக படைக்கப்படவில்லை. இத்தகைய அவமானத்தை மூன்று முறை பொது வெளியில் சந்தித்திருக்கிறேன். கண்கள் நனைய அழுதிருக்கிறேன். என்னுடைய தோழிகளும் இத்தகைய அனுபவத்தால் வெதும்பியிருக்கின்றனர். ஆண்கள் பாதுகாப்பு நிறைந்தவர்கள் என்றால் நாங்கள் ஏன் சுதந்திரமாக நடமாட முடியவில்லை?’

டெல்லியில் காதலிக்க மறுத்த பெண் முப்பது முறைக்கு மேல் குத்திக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் குறிப்பிட்டுள்ள மேரி கோம், `உங்கள் கண் எதிரே பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை நிகழ்ந்தாலோ அல்லது பெண்களுக்கு யாராவது தீங்கிழைத் தாலோ ஒரு வீரனாக கண்ணியமிக்க ஆணுக்குரிய கம்பீரத்தோடு தட்டிக் கேட்க வேண்டும். அடுத்த உயிர்கள் மீது அக்கறையில்லாத சமூகத்தில் வாழ்வதுதான் நமது மிகப் பெரிய பலவீனம். அந்த பலவீனத்தை களைந்தெறிய நீ வளர்ந்து நிற்கும் சமூகம் உதவும்’ என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

‘பெண்களுக்கு தீங்கிழைத்தால் தட்டிக் கேள்!'

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மேரி கோமின் மகன் குபேனிவருக்கு 5 வருடங்களுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை நடந்தபோது சீனாவில் நடந்த ஆசிய சாம்பியனுக்கான போட்டியில் இருந்தார் மேரி கோம். அதைப்பற்றி குறிப்பிட்டுகையில், `மற்ற அப்பாக்களைப் போல காலை போய் மாலை வேலை முடிந்து வீடுதிரும்புகிறவரல்ல உங்கள் அப்பா. நான் இல்லாதபோது தாய்க்கு தாயாக, தந்தையாக என் இடத்தை அன்பாலும் அக்கறையாலும் அவர் நிரப்பியிருந்திருக்கிறார். அவரை ‘ஹவுஸ் ஹஸ்பண்ட்’ என்று சமூகம் அழைக்கலாம். அதனால் அவரது கெளரவம் குறைந்துவிட்டதாக நீ கருதக்கூடாது. உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? அவர் எனது வாழ்க்கையைப் பகிர்ந்து கொண்டவர்... நான் முன்வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் ஆதாரமான சக்தியே அவர்தான்’ என குடும்பத்தில் நிலவ வேண்டிய ஆண் - பெண் சமத்துவத்தை அன்புடன் மகன்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார் மேரி கோம்.

‘ஒரு தாயாக நீங்கள் உள்பட இந்த நாட்டின் கிரேட் சன்களுக்கு பாலியல் வன்கொடுமை குறித்து சொல்லித் தரவில்லையென்றால், நான் கடமை தவறியவள் ஆவேன்’ என அந்தக் கடிதத்தில் கூறியிருக்கும் மேரிகோம், ‘பெண்கள் தொடாதே என்றால் தொடாதீர்கள். அவர்கள் ‘நோ’ சொன்னால் கொன்று விடாதீர்கள். ‘ரேப்’ என்பது ‘செக்ஸ்’ அல்ல. மனித சிந்தனையின் கொடூரம். ஒரு பெண்ணின் விருப்பத்துக்கு எதிராக அவளைத் தொடுவதால் என்ன சுகம் கிடைத்துவிடப் போகிறது?” எனக் கேள்வியும் எழுப்பியிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism