Published:Updated:

ஆர்கானிக் வீட் பீட்ஸா... - அசத்தும் தீபா!

ஆர்கானிக் வீட் பீட்ஸா... - அசத்தும் தீபா!
பிரீமியம் ஸ்டோரி
ஆர்கானிக் வீட் பீட்ஸா... - அசத்தும் தீபா!

புதிய முயற்சிச.ஆனந்தப்பிரியா - படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

ஆர்கானிக் வீட் பீட்ஸா... - அசத்தும் தீபா!

புதிய முயற்சிச.ஆனந்தப்பிரியா - படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

Published:Updated:
ஆர்கானிக் வீட் பீட்ஸா... - அசத்தும் தீபா!
பிரீமியம் ஸ்டோரி
ஆர்கானிக் வீட் பீட்ஸா... - அசத்தும் தீபா!
ஆர்கானிக் வீட் பீட்ஸா... - அசத்தும் தீபா!

ளசுகளின் ஃபுட் லிஸ்ட்டில் பீட்ஸாவுக்கு பிரதான இடம். ட்ரீட்டா, பார்ட்டியா, அவுட்டிங்கா... அவர்களின் ஃபர்ஸ்ட் சாய்ஸ் பீட்ஸாதான். அதன் வெரைட்டிக்கும் டேஸ்ட்டுக்கும் அடிமை ஆகாத இளசுகள் இங்கு குறைவு. ‘அதெல்லாம் சரி. ஆனால், அது ஆரோக்கியமானதா?’ என்ற கேள்விக்கு, நிமிர்ந்து பதில் சொல்லும் தைரியம் அவர்களுக்கு இல்லை என்பதும் உண்மை. இந்தக் கேள்விக்கான விடை சொல்லும் முயற்சியாக, பீட்ஸாவின் பிரதானப் பொருளான, உடலுக்குக் கேடு விளைவிக்கும் மைதாவைத் தவிர்த்து, மாற்றாக கோதுமையில் பீட்ஸா செய்கிறார் திருச்சியைச் சேர்ந்த தீபா.  
 
``இப்போதெல்லாம் சளி, காய்ச்சல் போல அதிகரிக்கின்றன மரபணு சார்ந்த நோய்கள். தவிர, பெயர் தெரியாத பல புது நோய்களும் க்யூவில் நிற்கின்றன. இதற்கெல்லாம் முழுமையான காரணமாக இல்லை என்றாலும், முதன்மையான காரணமாக நம் உணவுப் பழக்கத்தைச் சொல்லலாம். குறிப்பாக, ஜங்க் ஃபுட்ஸ். ஆறு மாதங்களுக்கு முன் நாங்கள் ’ஷேக் `என்' ஸ்டிர் தி மாக்டைல்ஸ் ஃபேக்டரி (Shake ‘N’ Stir The mocktails factory)’ கடையை ஆரம்பித்தபோது, ஆர்கானிக் பொருட்களை கொண்டுதான் உணவு தயாரிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தோம். அதற்கு என் கணவர் தரன் முழு ஒத்துழைப்பு தந்தார். முதலில் ஜூஸ், ஐஸ்க்ரீம் அயிட்டங்கள்தான் ஆரம்பித்தோம். சாஃப்ட் டிரிங்க்ஸ் அறவே கிடையாது. நான்காவது மாதத்தில் பீட்ஸாவை மெனுவில் சேர்க்கலாம் என்று முடிவெடுத்தபோதே, மைதாவைத் தவிர்த்து, அதற்கு மாற்றாக, அதன் சுவையைக் கெடுக்காமல், அதே நேரத்தில் உடல் நலனுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பொருளாக எதைச் சேர்க்கலாம் என்று யோசித்தபோதுதான்... ஆர்கானிக் பீட்ஸா ஐடியா கிடைத்தது.

ஆர்கானிக் வீட் பீட்ஸா... - அசத்தும் தீபா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கோதுமை, தினை அரிசி, ஆளி விதை மூன்றையும் அரைத்த மாவை, நாங்கள் மைதாவுக்குப் பதிலாக பீட்ஸா செய்யப் பயன்படுத்துகிறோம். ஆளி விதையில் ஒமேகா 3 உள்ளது. தினை கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும். இந்த ஆர்கானிக் `வீட் பீட்ஸா'வை குக் செய்ய, வழக்கத்தைவிட அதிகமாக ஐந்தாறு நிமிடங்கள் ஆகும். மைதா பேஸ் போல இது உப்பி வராது. மற்றபடி பீட்ஸாவின் வழக்கமான சேர்மானப் பொருட்களைப் பயன்படுத்துகிறோம். சுவையும் வித்தியாசமாக இருக்க, இப்போது இதற்கு கஸ்டமர்கள் அதிகரித்திருக்கிறார்கள். குறிப்பாக, இளைஞர்கள். மக்களிடம் ஜங் ஃபுட்கள் பற்றி விழிப்பு உணர்வு இருக்கிறது என்பது மகிழ்ச்சியான செய்தி. பீட்ஸாவில் மைதாவைத் தவிர்த்த மாதிரியே அடுத்து சாண்ட்விச், பர்கரிலும் வீட் ப்ரெட் பயன்படுத்த முயற்சிக்கவிருக்கிறோம். நல்ல முயற்சிகள் நிச்சயம் பலன் கொடுக்கும்தானே?” என்கிற தீபா, தன் கணவரைப் பார்த்து நம்பிக்கையுடன் புன்னகைக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism