ழகுபடுத்தும் கலை என்பது பெண்களுக்கான வரம் என்றே சொல்லலாம். இந்த அழகுக் கலையில் குறிப்பிடத்தக்க ‘மேக்கப்’ செய்வது எப்படி என்பது பற்றி இப்பகுதியில் கற்றுதர  இருக்கிறோம். அந்த வகையில், இந்த இதழில் `பேஸிக் மேக்கப் செய்வது எப்படி?' என பார்க்கலாம். இத்தொடரை முழுமையாக படித்து, படிப்படியாக இக்கலையில் தேர்ந்து. தொடரின் முடிவில், உங்கள் உறவினர்கள், நட்பு வட்டத்தினர் என ஆரம்பித்து உங்கள் அண்டை வீட்டாரின் இல்லத்தில் நடைபெறும் சிறுசிறு நிகழ்ச்சி முதல் திருமண நிகழ்ச்சி வரை நீங்களே மேக்கப் ஆர்ட்டிஸ்டாகி வருமானம் ஈட்டலாமே!

பேஸிக் மேக்கப் முதல் பிரைடல் மேக்கப் வரை! - 2

1. ஒரு டிஷ்யூ பேப்பரில் அக்வா க்ளென்ஸரை சிறிதளவு எடுத்துக்கொள்ளவும்.

2. முகத்தில் தடவி துடைத் தெடுக்கவும்.

3. சிறிதளவு மாய்ஸ்ச்சரைஸரை பிரஷ்ஷில் எடுத்துக்கொள்ளவும் (ஃபவுண்டேஷன் பிரஷ் என மார்க்கெட்டில் கிடைக்கும்).

4. முகம், காது மற்றும் கழுத்து என அனைத்துப் பகுதிகளிலும் ஒரே சீராக அப்ளை செய்யவும்.

5. ஃபவுண்டேஷனை எடுத்துக் கொள்ளவும்.

6. சரும நிறத்துக்குப் பொருத்த மான ஃபவுண்டேஷனா என கழுத்தில் தடவி `செக்' செய்யவும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பேஸிக் மேக்கப் முதல் பிரைடல் மேக்கப் வரை! - 2
பேஸிக் மேக்கப் முதல் பிரைடல் மேக்கப் வரை! - 2

7. தேவையான அளவு ஃபவுண்டேஷனை முகம், காது மற்றும் கழுத்து என அனைத்துப் பகுதிகளிலும் ஒரே சீராக அப்ளை செய்யவும்.

8. கண்களுக்குக் கீழே கருவளையம் இருந்தால், அங்கு ஒரு லேயர் அதிகமாக அப்ளை செய்யவும்.

9. சிறிதளவு ஃபவுண்டேஷன் மற்றும் கன்சீலரை பேலட்டில் எடுத்து மிக்ஸ் செய்துகொள்ளவும்.

10. சருமத்தில் உள்ள தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகள் மீது அப்ளை செய்யவும்.

பேஸிக் மேக்கப் முதல் பிரைடல் மேக்கப் வரை! - 2

11. கண்ணுக்குக் கீழ் கருவளையம் இருந்தால், அங்கும் கன்சீலரை அப்ளை செய்யவும்.

12. சரும நிறத்துக்கு ஏற்ற காம்பாக்ட் பவுடரை, பிரஷ்ஷில் (பவுடர் பிரஷ் என மார்க்கெட்டில் கிடைக்கும்) எடுத்து முகம், காது மற்றும் கழுத்தில் சீராக அப்ளை செய்யவும்.

13. பொருத்தமான ஐ ஷேடோவை பிரஷ்ஷில் (ஐ ஷேடோ பிரஷ் என மார்க்கெட்டில் கிடைக்கும்.) எடுத்து கண் இமைகளின் மேற்பகுதியில் அப்ளை செய்யவும்.

14. ஐ லைனர் பென்சில் மூலம், கண் இமைகளின் மேற்பகுதி இமை முடிகளையொட்டி வரைந்து கொள்ளவும்.

15. இமை முடிகளுக்கு மஸ் காரா அப்ளை செய்யவும்.

16. பவுடர் பிரஷ் மூலம் தேவையான நிறத்தில் பிளஷரை எடுத்து, கன்னங்களுக்கு பக்க வாட்டில் அப்ளை செய்யவும்.

17. லிப் லைனர் பென்சிலால் உதட்டின் வடிவத்துக்கு ஏற்ப உதட்டு ஓரங்களில் வரைந்து கொள்ளவும்.

18. தேவையான நிறத்தில் லிப்ஸ் டிக்கை பிரஷ்ஷால் (லிப்ஸ்டிக் பிரஷ் என மார்க் கெட்டில் கிடைக்கும்) எடுத்து, உதடுகளில் வரைந்துள்ள கோடு களுக்கு உட்பகுதியில் மட்டும் அப்ளை செய்யவும்.

19. பேஸிக் மேக்கப்பில் மாடல் ரெடி!

உதவி: நேச்சுரல்ஸ் மாடல்: ஜெயா

இன்னும் அழகாகலாம்...

எக்ஸ்பெர்ட் டிப்ஸ்...

மேக்கப் செய்யும்முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து நேச்சுரல்ஸ் ஹேர் அண்ட் பியூட்டி சலூனின் உரிமையாளர் வீணா வழங்கும் பேஸிக் டிப்ஸ்...

பேஸிக் மேக்கப் முதல் பிரைடல் மேக்கப் வரை! - 2

1. எண்ணெய் பசை சருமத்தினர் வாட்டர் பேஸ் ஃபவுண்டேஷன் யூஸ் பண்ணுங்கள்.

2. வறண்ட சருமத்தினர் ஃபவுண்டேஷன் போடுவதற்கு முன்பு மாய்ஸ்ச்சரைஸர் அப்ளை செய்ய வேண்டும்.

3. லைட் மேக்கப்புக்கு வாட்டர் பேஸ் ஃபவுண்டேஷனும்,ஹெவி மேக்கப்புக்கு ஆயில் பேஸ் ஃபவுண்டேஷனும் யூஸ் பண்ணுங்கள்.

ஃபவுண்டேஷன் வாங்கும்முன் கழுத்து அல்லது மணிக்கட்டில் (உள்ளங்கையின் கீழே) அப்ளை செய்து, உங்கள் சரும நிறத்துக்கு பொருத்தமாக உள்ளதா உறுதி செய்துகொள்ளவும். காம்பாக்ட் பவுடரையும் இதே போல் செக் செய்து வாங்கவும். உங்களால் கண்டுபிடிக்க முடியாதபட்சத்தில், அருகில் உள்ள நேச்சுரல்ஸ் சலூனை அணுகினால், எங்கள் நிபுணர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.

மேக்கப் செய்வது குறித்த உங்கள் கேள்விகளுக்கு விடையளிக்க காத்திருக்கிறேன்.

குறிப்பு:
கேள்விகளை aval@vikatan.com என்ற மெயில் ஐடி அல்லது அவள்விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கு அனுப்பவும்.

மேக்கப் செய்ய தேவையானவை

பேஸிக் மேக்கப் முதல் பிரைடல் மேக்கப் வரை! - 2

1.     அக்வா க்ளென்ஸர்
2.     மாய்ஸ்ச்சரைஸர்
3.     ஃபவுண்டேஷன்
4.     காம்பாக்ட்
5.     கன்சீலர்
6.     ஐ ஷேடோ
7.    ஐ லைனர்
8.     மஸ்காரா
9.     பிளஷர்
10.    லிப் லைனர்
11.    லிப்ஸ்டிக்

மூன்றுவித சருமத்தினருக்கும்...

ஃபேர், மீடியம், டார்க் என மூன்று சருமத்தினருக்கான ஃபவுண்டேஷன் மற்றும் காம்பாக்ட் பவுடர் மார்க்கெட்டில்  கிடைக்கிறது. உங்கள் சருமத்துக்கு தோதானதை கடையில் கேட்டு வாங்கிக்கொள்ளவும்.

பேஸிக் மேக்கப் முதல் பிரைடல் மேக்கப் வரை! - 2

F - ஃபேர் ஸ்கின் காம்ப்ளெக்‌ஷன்
M - மீடியம் ஸ்கின் காம்ப்ளெக்‌ஷன்
D - டார்க் ஸ்கின் காம்ப்ளெக்‌ஷன்

பேஸிக் மேக்கப் முதல் பிரைடல் மேக்கப் வரை! - 2

இந்த இதழில் வெளிவந்திருக்கும் `பேஸிக் மேக்கப்'  பகுதியை வீடியோவாக http://bitly.com/avalmakeup - ல் காணலாம் அல்லது இந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்யுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism