Published:Updated:

கோலி சோடா... இது ஒரு வெற்றிக்கதை!

கோலி சோடா... இது ஒரு வெற்றிக்கதை!
பிரீமியம் ஸ்டோரி
கோலி சோடா... இது ஒரு வெற்றிக்கதை!

உழைப்பின் உறுதிசி.ய.ஆனந்தகுமார், படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

கோலி சோடா... இது ஒரு வெற்றிக்கதை!

உழைப்பின் உறுதிசி.ய.ஆனந்தகுமார், படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

Published:Updated:
கோலி சோடா... இது ஒரு வெற்றிக்கதை!
பிரீமியம் ஸ்டோரி
கோலி சோடா... இது ஒரு வெற்றிக்கதை!

டந்த 25 வருடங்களுக்கு முன்பு, வாழ்க்கை முழுக்கத் துணையாக இருப்பார் என்று நம்பிய கணவர், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தன்னை, இரண்டு வயது மகனுடன் நிராதரவாக விட்டுப் பிரிந்துபோனபோது, வெளியுலகம் தெரியாத பெண் ராஜலட்சுமி. ஆனால், தன் குழந்தைகளுக்காக ஒரு தாய் எந்த வலிமையையும் பெறுவாள்தானே? பெற்றார் இவரும்!

கோலி சோடா... இது ஒரு வெற்றிக்கதை!

40 வருடங்களுக்கு முன் தமிழகத்தில் பலருக்கும் பிடித்த ஒன்றாக விளங்கிய கோலி சோடா, இப்போது இடம் தெரியாமல் போய்விட்டது. ஆனால், இன்றும் அந்தத் தொழிலை வெற்றிகரமாக நடத்திவரும் ராஜலட்சுமியை திருச்சியில் சந்தித்தோம்.

“புதுக்கோட்டை மாவட்டம், கைக்குறிச்சி தான் எங்களுக்குச் சொந்த ஊர். என் வீட்டுக்காரர் விட்டுட்டுப் போனப்போ, மூத்த பையன் ஞானசேகருக்கு ரெண்டு வயசு. பொண்ணு சாந்தி வயித்துல 8 மாசம். நான் பள்ளிக்கூடம் போனதே இல்ல. ஓசூர்ல ஒரு கோலி சோடா கம்பெனியில வேலைக்குச் சேர்ந்தேன். அப்புறம் வட்டிக்குப் பணம் வாங்கி, வீட்டுலயே கொஞ்சமா சோடா தயாரிச்சு வித்துட்டே, கல்லூரிப் பசங்களுக்கு சமைச்சுக் கொடுத்துட்டு இருந்தேன்.

இந்த நிலையில, என் தம்பி இறந்துபோக, அவனோட மூணு குழந்தைகளை வளர்க்க வேண்டிய பொறுப்பும் எங்கிட்ட வந்துச்சு. புதுக்கோட்டைக்கே வந்துட்டேன். அஞ்சு பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்கணும், படிக்க வைக்கணுமேனு வீட்டுவேலைக்காக சிங்கப்பூர், மலேசியானு போய் சம்பாதிச்சேன். பிள்ளைகளை விட்டுட்டு இருந்த அந்தச் சூழலும் வேலையும்... சாவைவிடக் கொடுமையா இருந்துச்சு. ஆனாலும், பிள்ளைகளுக்காகப் பொறுத்துக்கிட்டேன். பையனை பன்னிரண்டாவதுக்கு மேல படிக்கவைக்க முடியல. பொண்ணை எம்.பி.ஏ வரை படிக்கவெச்சேன்” என்கிறவர், 10 வருடங்களுக்குமுன் ஊர் திரும்பியபோது, மீண்டும் சோடா தொழிலை கையில் எடுத்திருக்கிறார்.

‘`மகளை கல்யாணம் முடிச்சுக் கொடுத்துட் டேன். தம்பி பிள்ளைங்க வளர்ந்து அவங்க வழியைத் தேடிக்கிட்டாங்க. நான், என் மகன், மருமகள்னு சேர்ந்து திருச்சியில் சோடா கடை போட்டு உழைக்க ஆரம்பிச்சோம். காலையில 4 மணிக்கு நானும் என் மகனும் வேலையை ஆரம்பிச்சுடுவோம். அவன் காந்தி மார்க்கெட்டுக்குப் போய் எலுமிச்சையும் ஐஸ்கட்டியும் வாங்கிட்டு வருவான். அவன் வர்றதுக்குள்ள சோடா பாட்டில், டம்ளர் எல்லாத்தையும் நான் சுத்தமா கழுவி வெச்சிருவேன். வீட்டுவேலைகளை முடிச்சிட்டு, பாட்டில் சுத்த ஆரம்பிப்போம். 10 மணிக்குள்ள எல்லா வேலைகளையும் முடிச்சு, வண்டியில சரக்கு ஏத்துவோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கோலி சோடா... இது ஒரு வெற்றிக்கதை!

இந்தத் தொழில்ல ரிஸ்க் அதிகம். சில நேரங்கள்ல பாட்டில் பட்டாசு மாதிரி வெடிக்கும். முழுக்க முழுக்க கண்ணாடி சார்ந்த தொழில் என்பதாலயும் ரொம்ப கவனமா இருக்கணும். பாட்டில் சுத்தும்போது ஒரு பாட்டில்ல சின்னக் கீறல் இருந்தாகூட அடுத்த நாலு பாட்டிலும் உடைஞ்சிடும். அதுமட்டுமில்லாம, இன்னைக்கு காலி கோலி சோடா பாட்டில் கிடைக்கிறதே கஷ்டம். தமிழ்நாட்டில் இந்தத் தொழிற்சாலைகளை மூடினதால, ஆந்திரால தேடி அலைய வேண்டியிருக்கு'' என்று, நலிந்துபோன தொழிலாகிவிட்ட இதன் நடைமுறை சிரமங்களைச் சொன்னவர்,

‘`இப்போ திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், கரூர் பைபாஸ் ரோடுனு திருச்சியில முக்கிய இடங்கள்ல ரோட்டோரமா வண்டியை நிறுத்தி எங்க ‘சன்’ சோடா விக்கிறோம். கோலி சோடாவுல  மசாலா சோடா, ஐஸ் சோடா, லெமன் சோடானு விதம்விதமா கொடுக்குறதால மக்கள் விரும்பி வாங்கிக் குடிக்கிறாங்க.

‘எம்.ஜி.ஆர்., சிவாஜி எல்லாம் படத்துல குடிச்ச அந்தக் கோலி சோடா மறுபடியும் வந்திருச்சா!’னு சந்தோஷமாக் கேட்பாங்க'' என்கிறார் நிறைவுடன். கிட்டத்தட்ட மறைந்து போன ஒரு தொழிலை எடுத்து நடத்தி வெற்றி பெற்றிருக்கும் ராஜலட்சுமியின் சோடா தயாரிப்பில் இப்போது 5 பேர் வேலை செய்கிறார்கள்.

‘`செலவெல்லாம் போக ஒரு வண்டிக்கு 1,500 ரூபாய் கிடைக்கும். மாசம் 40 ஆயிரம் வரை நிக்கும். குடும்பச் சூழலால படிக்காம போன என் மகனை, ஒரு முதலாளி ஆக்கணும். அதுக்காக இன்னமும் உழைப்பேன்!”

ஒரு தாயின் லட்சியத்துக்கு முன் தடைகள் தகர்ந்துதான் போகும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism