Published:Updated:

தமிழ்ப் பெண்ணின் விவசாயப் புரட்சி!

தமிழ்ப் பெண்ணின் விவசாயப் புரட்சி!
பிரீமியம் ஸ்டோரி
தமிழ்ப் பெண்ணின் விவசாயப் புரட்சி!

சாதனைஸ்ரீலோபாமுத்ரா

தமிழ்ப் பெண்ணின் விவசாயப் புரட்சி!

சாதனைஸ்ரீலோபாமுத்ரா

Published:Updated:
தமிழ்ப் பெண்ணின் விவசாயப் புரட்சி!
பிரீமியம் ஸ்டோரி
தமிழ்ப் பெண்ணின் விவசாயப் புரட்சி!
தமிழ்ப் பெண்ணின் விவசாயப் புரட்சி!

றட்சி வாட்டியெடுக்க, விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொள்ளும் விதார்பா பகுதியை தன்னகத்தே கொண்டது மகாராஷ்டிரா. அதே மாநிலத்தின் மற்றொரு பகுதியான லாட்டூர், ஒஸ்மனாபாத், வாஷிம் மற்றும் நான்டேட் மாவட்டங்களில் வறட்சிக்கு நடுவேயும் விவசாயத்தில் வருமானம் பார்ப்பது ஆச்சர்யமான செய்தி. இந்தப் புதிய முயற்சிக்குப் பின்புலமாக இருப்பவர், பிரேமா கோபாலன் என்ற தமிழ்ப் பெண்!

சமூகப் பணியில் முதுகலைப் பட்டம், ஒடுக்கப்பட்ட பெண்கள் குறித்த ஆராய்ச்சியில் எம்.ஃபில் பட்டம், சமூக சேவையில விருதுகள் என பல மணிமகுடங்களை தக்கவைத்திருக்கும் அவரைச் சந்தித்தோம்.

‘`அது 1993-ம் ஆண்டு... லாட்டூர் மற்றும் ஒஸ்மனாபாத் மாவட்டங்களில் ஏற்பட்ட கடும் பூகம்பத்தால் பலர் வீடிழந்து அவதிப்பட்டனர். அப்போது ஒவ்வொரு ஊரிலும் மகளிர் குழுக்களை ஏற்படுத்தி, சிதில மடைந்த வீடுகளைப் புனரமைக்கவும், புது வீடுகளைக் கட்டுவதற்கும் உதவினோம். இந்தக் குழுக்களின் வளர்ச்சி தற்போது ஆலமரம் போல விரிவடைந்திருக்கிறது'' எனும் பிரேமா, ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நாடு களின் நடைமுறைகளைப் பின்பற்றி இந்தக் குழுக்களின் செயல்பாடுகளை வடிவமைத்திருக்கிறார்.

‘`சில வருடங்களுக்கு முன், மீண்டும் மகாராஷ்டிராவில் கடும் வறட்சி ஏற்பட்டு விவசாயிகள் பலர் தற்கொலை செய்துகொண்டனர். அப்போது மகளிர் குழுப்பெண்கள் தங்கள் கணவர்களிடம், ‘காய்கறி மற்றும் குடும்பத்துக்குத் தேவையான உணவு தானியங்களை நாங்கள் பயிரிடுகிறோம். விவசாய நிலத்தில் ஒரு சிறுபகுதியை எங்களுக்கென ஒதுக்கிக் கொடுங்கள்’ எனக் கேட்டிருக்கிறார்கள். அவர்களோ, `அதெல்லாம் உங்களால் முடியாத காரியம்' என்று கண்டிப்புடன் மறுத்திருக்கிறார்கள். தொடர்ந்து முயற்சித்ததில் அரைமனதாக விவசாயம் செய்ய சம்மதித்திருக்கிறார்கள்.

தமிழ்ப் பெண்ணின் விவசாயப் புரட்சி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆண்களைப்போல் அல்லாவிட்டாலும் பெண்களுக்கு விவசாயம் குறித்த விழிப்பு உணர்வு 80% இருந்ததை கண்டறிந்தோம். வல்லுநர்களையும், களப் பணியாளர்களையும் அழைத்து வந்து, பெரிய நீர் ஆதாரங்கள் தேவைப்படாத காய்கறி மற்றும் பருப்பு வகைகளைப் பயிரிடப் பெண்களுக்குப் பயிற்சி கொடுத்தோம். சொட்டு நீர்ப்பாசனம், நீர் தெளிப்பான்களைப் பயன்படுத்தி குறைந்த தண்ணீரில் விவசாயம் செய்வது, இயற்கையாக கிடைக்கும் உரங்களைப் பயன்படுத்துவது என சொல்லிக் கொடுத்த பல விஷயங்களை அற்புதமாக வெளிக்காட்டி குறைந்த செலவில் அமோக விளைச்சலை பெற்றார்கள். இப்போது, தங்களின் விளைபொருட்களால் குடும்பத்தின் தேவையையும் பூர்த்திசெய்து, அவற்றை சந்தையில் விற்று சம்பாதிக்கவும் செய்கிறார்கள். தற்கொலைக்கு முற்றுப்புள்ளி வைத்து, இங்கு நல்விதியை நிர்ணயிக்கும் சக்தியாக பெண் விவசாயிகள் வளர்ந்திருக் கிறார்கள். பலர் மாவட்ட, மாநில அளவில் விருதுகளைப் பெற்றுள்ளார்கள். விவசாயக் கல்லூரி மற்றும் எம்.பி.ஏ மாணவர்கள் தற்போது இந்தப் பெண் விவசாயிகளைப் பற்றி ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதிவருகிறார்கள். அரசாங்கமும் இப்போது பெண் விவசாயிகளை அங்கீகரித்து சிறப்புத் திட்டங்களைத் தீட்டி ஊக்குவிக் கிறது” என்றபோது, ஒரு தாயின் உவகை பிரேமாவின் முகத்தில். ஒரு புரட்சியை சத்த மில்லாமல் ஏற்படுத்தியிருக்கும் அவருடைய பின்புலமும் சேவை சார்ந்ததே.

``என் அப்பா ராணுவத்தில் பணியாற்றியவர். அதன் காரணமாகவே பல ஊர்களுக்குப் பயணப்பட

தமிழ்ப் பெண்ணின் விவசாயப் புரட்சி!

நேர்ந்தது. சென்னையில் இருந்து நகர் வரை நான் பயணிக்காத இடங்களே இல்லை எனலாம். மும்பையில் வசித்தபோது `குழந்தைகள்நலக் காப்பகத்துக்கு சென்று வா' என்ற என் தந்தையின் அறிவுறுத்தலால் அங்கு சென்றேன். அந்த நாள்தான் என்னைச் சுற்றி யுள்ளவர்களைத் திரும்பிப் பார்க்க வைத்து, சேவை எண்ணத்தை என்னுள் விதைத்தது'' என்றவர் தன் SPARC (Society for Promotion of Area Resource Centre) என்ற தொண்டு நிறுவனம் மூலமாக பல சேவைகளை செய்து வருகிறார். அவருடைய கணவரும் சமூகசேவை அமைப்பு ஒன்றை உருவாக்கி நடத்திவருகிறார்.

``நான் செய்தது புரட்சியெல்லாம் இல்லை, காலத்தின் தேவை. தொடர்ந்து, நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி மகளிர் விவசாயிகளின் தன்னிறைவுக்குப் பாடுபடுவதே எங்கள் நோக்கம்’’ என்கிறார் பிரேமா கோபாலன்  தன்னடக்கத்துடன்.

மகளிர் சக்தி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism