Published:Updated:

“நான் கிருஷ்ணாவின் பலம்!”

“நான் கிருஷ்ணாவின் பலம்!”
பிரீமியம் ஸ்டோரி
“நான் கிருஷ்ணாவின் பலம்!”

சங்கீதக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவின் மனைவி சங்கீதாசெலிப்ரிட்டி மனைவிஆர்.வைதேகி, படங்கள்: சரண்குமார்

“நான் கிருஷ்ணாவின் பலம்!”

சங்கீதக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவின் மனைவி சங்கீதாசெலிப்ரிட்டி மனைவிஆர்.வைதேகி, படங்கள்: சரண்குமார்

Published:Updated:
“நான் கிருஷ்ணாவின் பலம்!”
பிரீமியம் ஸ்டோரி
“நான் கிருஷ்ணாவின் பலம்!”

ர்னாடக இசைத் துறையில் டி.எம்.கிருஷ்ணா எத்தனை பிரபலமோ, அதே அளவு அவர் மனைவி சங்கீதா சிவக்குமாரும் பிரபலம். ஆனாலும், வெளிச்சத்துக்கு வருவதையோ, செய்கிற விஷயங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதையோ விரும்பாதவர் சங்கீதா. மிகுந்த சிரமத்துக்குப் பிறகு அவரைப் பேச வைத்தோம். 

‘`பிறந்தது சென்னை. வளர்ந்தது, படிச்சதெல்லாம் எர்ணாகுளம். அப்பா சங்கீத சபா வெச்சிருந்தார். பல பிரபல இசைமேதை களை சந்திக்க அழைச்சுட்டு போவார். அதனாலேயே இயல்பாகவே எனக்குள்ள இசை ஈடுபாடு அதிகரிச்சது'' என்பவரது இசை ஆர்வத்துக்காகவே ஒட்டு மொத்த குடும்பமும் சென்னைக்கு வந்து செட்டிலாகியிருக்கிறார்கள்.

“நான் கிருஷ்ணாவின் பலம்!”

``சென்னை ஸ்டெல்லா மேரிஸ் காலேஜ்ல பி.எஸ்ஸி., மேத்ஸ் சேர்ந்தேன். பத்து வருஷங்கள் சாருமதி மேடம்கிட்ட சங்கீதம் கத்துக்கிட்டேன்... 80-கள்ல சபாக்கள்ல பாடறவங்க எல்லாரும் 60 வயசை தொட்டவங்களா இருப்பாங்க. சின்ன வயசுக்காரங்களுக்கும் வாய்ப்பு கிடைக் கணும்னு நாங்க ஆரம்பிச்சதுதான் ஒய்.ஏ.சி.எம் (யூத் அசோசியேஷன் ஃபார் மியூசிக்)அமைப்பு. அதுல சேரணும்னா 30 ப்ளஸ்ல இருக்கணும்கிறதுதான் ரூல். உன்னிகிருஷ்ணன், பாம்பே ஜெயஸ்ரீ, டி.எம்.கிருஷ்ணானு பலரும் அதுல உறுப்பினர்களா இருந்தாங்க. கர்னாடிக் மியூசிக்கை கேட்கறவங்களும் வயசானவங்கன்ற அபிப்ராயத்தை மாத்த ஒய்.ஏ.சி.எம் சார்பா மியூசிக் கார்னிவல் நடத்தினோம். மியூசிக் சம்பந்தமான கேம்ஸ், கதைகள்னு அது பெரிய ஹிட். நிறைய நட்பு கிடைச்சது...’’ என்கிற சங்கீதா, தன் வாழ்க்கையில் பொக்கிஷமாக பாதுகாக்கும் புடவையைப் பற்றி சொன்னார்.
``எம்.எஸ் அம்மாவோட கணவர் தவறிப் போயிருந்த நேரம் அது. அந்தத் துக்கத்துலேருந்து அம்மா வெளியில வராத டைம். நவராத்திரி சீஸன்ல ஒவ்வொரு நாளும் ஒவ்வொருத்தர் அவர் முன்னாடி ஒரு மணி நேரம் மனசார பாடறதுனு முடிவு பண்ணினோம். அம்மா பக்கத்துல இருந்து பாடினவங்கள்ல நானும் ஒருத்தி. அதுக்கு அன்பளிப்பா அவங்க கொடுத்த புடவையைக்கூட இன்னும் பத்திரமா வெச்சிருக்கேன்’' என்கிறவர் டி.எம்.கிருஷ்ணாவுடனான பயணம் பற்றி கேட்டதும் சுவாரஸ்யமாகிறார்.

‘`நானும் கிருஷ்ணாவும் ரொம்ப வருஷ ஃப்ரெண்ட்ஸ். ஒய்.ஏ.சி.எம்-லயும் சேர்ந்து வொர்க் பண்ணியிருக்கோம். கல்யாணம் பண்ணிக்கலாம்னு தோணினதும், நான்தான் கிருஷ்ணாகிட்ட புரபோஸ் பண்ணினேன். கிருஷ்ணா என்னைவிட 6 வயசு சின்னவர். ரெண்டு வீட்டு சம்மதத்தோட 97-ம் வருஷம் கல்யாணம் நடந்தது. உடனே நான் பாட்டு பாடமாட்டேன்னு எல்லோரும் நினைச்சாங்க. ஆனா, கல்யாணத்துக்குப் பிறகும் என்னோட துறையில சுதந்திரமா பயணிக்க கிருஷ்ணா உதவினார்'' என்று கணவரை புகழ்கிறார் சங்கீதா. இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள்.
``மூத்தவ ஆர்யா ப்ளஸ் ஒன், சின்னவ அனந்தா எட்டாவது படிக்கிறாங்க. எனக்கும் குழந்தைகளுக்கும் கிருஷ்ணா நல்ல ஃப்ரெண்ட். நான் கச்சேரிக்காக பல முறை அமெரிக்கா போனப்ப குழந்தைகளை தனியாளா கவனிச்சுக்கிட்டார். சக மனிதனை மதிக்கணுங்கறதை வீட்டுலேயும் கடை பிடிக்கிறவர் கிருஷ்ணா'' என்கிறவரின் கண்களில் பெருமிதம்!

``கர்னாடிக் மியூசிக்கை சாமானிய குழந்தைங் களுக்கு கொண்டு போறதுக்காக சென்னையில உள்ள மாநகராட்சி பள்ளிகளோட சேர்ந்து, 6-வது, 7-வது படிக்கிற பிள்ளைங்களைத் தேர்ந் தெடுத்தோம். அவங்களுக்கு வாரத்துல 2 நாள் பாட்டு கிளாஸ். அதுக்காகவே தனி சிலபஸ். இதுபோல சங்கீதத்துல மறுமலர்ச்சியை ஏற்படுத்தணும்னு கிருஷ்ணா குரல் கொடுக்கிற ஒவ்வொரு முறையும் சண்டைகளும் சர்ச்சை களும் தொடர்ந்துட்டுதான் இருக்கு. அது ஒரே நாள்ல ஏற்படக்கூடிய மாற்றம் இல்லை. தொடர்ந்து போராடணும். விடாத முயற்சிகள் தேவை... இந்த விஷயத்துல நான் கிருஷ்ணாவோட பலம்’’ என்று புன்னகைக்கிறார் சங்கீதா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism