Published:Updated:

``இது நிறைவான வாழ்க்கை!"

``இது நிறைவான வாழ்க்கை!"
பிரீமியம் ஸ்டோரி
``இது நிறைவான வாழ்க்கை!"

சினிமா கேமராமேன் திருவின் மனைவி சரோஜினிசெலிப்ரிட்டி மனைவிஆர்.வைதேகி

``இது நிறைவான வாழ்க்கை!"

சினிமா கேமராமேன் திருவின் மனைவி சரோஜினிசெலிப்ரிட்டி மனைவிஆர்.வைதேகி

Published:Updated:
``இது நிறைவான வாழ்க்கை!"
பிரீமியம் ஸ்டோரி
``இது நிறைவான வாழ்க்கை!"

ரோஜினி ஒரு பிஸியான ஆர்க்கிடெக்ட், இரண்டு குழந்தைகளுக்குத் தாய். ‘ஹே ராம்’, ‘ஆளவந்தான்’, ‘க்ருஷ் 3’, ‘24’ என கேமராவில் பேசிக்கொண்டிருக்கும் ஒளிப்பதிவாளர் திருவின் மனைவி. வீட்டிலே பேச்சுத் திறமையில் வெற்றிக் கொடிகட்டும் சரோஜினி பேசினார் நம்மிடம்.

‘`அப்பாவுக்கு என்னை இன்ஜினீயரிங் படிக்க வைக்கணும்னு ஆசை. அவர் ஆசைப்படி அதுல சேர்ந்துட்டு பிறகு பிடிக்காம எனக்குப் பிடிச்ச ஆர்க்கிடெக்சர்ல சேர்ந்தேன். இது ஆண்கள் நிறைஞ்ச ஒரு துறை. வேலை பார்க்கிறவங்க, கன்சல்டன்ட்ஸ்னு எல்லாருமே ஆண்கள். அவங்ககிட்ட வேலை வாங்கி, கட்டியாளும் தைரியம் வேணும். தெரியாம ஒரு தப்பு பண்ணிட்டாகூட ஆண்கள் தரப்புலேருந்து கிண்டலும் கேலியும் பெரிசா இருக்கும். அதையெல்லாம் சமாளிச்சு வெற்றியைத் தக்க வைக்கணும்'' என்கிறவர் இன்டீரியர் மற்றும் புதுப்பித்தலில் நிபுணத்துவம் பெற்றவர்.

``இது நிறைவான வாழ்க்கை!"

‘`காலேஜ் மூணாவது வருஷம் படிக்கிறபோது திருவை சந்திச்சேன். உறவுக்காரரான அவரை அப்பாவுக்குப் பிடிக்க, உடனே திருமணம் நடந்தது. கல்யாணம் முடிஞ்ச நாலாவது நாள், நான் காலேஜும், அவர் ஷூட்டிங்கும் கிளம்பினோம். குழந்தை பிறந்த பிறகுதான் காலேஜ் முடிச்சேன். பலநாள் குழந்தையை ஃப்ரெண்ட் வீட்டுல விட்டுட்டு புராஜெக்ட் முடிச்ச கதையெல்லாம் உண்டு'' என்று ஃப்ளாஷ்பேக்கில் மூழ்குகிறார் சரோஜினி.

``அடுத்தது ஒரு பையன் பொறந்து ரெண்டு குழந்தைகளைக் கவனிச்சுட்டு வேலைக்கும் போயிட்டு இருந்தேன். நான் வேலைபார்த்த கம்பெனியோட ஓனர் அமெரிக்கா போக வேண்டிய சூழ்நிலை. கம்பெனியை நான் எடுத்து நடத்தினேன். இன்டீரியர் டிசைன் மாதிரியே ரெனவேஷனும் சவாலான வேலை. புதுப்பித்தல் பணிக்காக சொந்த வீட்டை விட்டுட்டு வாடகை வீட்டுக்குப் போறவங்களோட டென்ஷன்ல ஆரம்பிச்சு, மேல் வீடு, கீழ் வீட்டுல உள்ளவங்க கொண்டு வர்ற புதுப்புது பஞ்சாயத்து வரைக்கும் அத்தனையையும் சமாளிக்கணும். முக்கியமா கிளையன்ட்டோட எண்ணத்தை அப்படியே வார்த்தெடுக்கணும். அதுக்காக டூ த கோர் மெனக்கெடுவேன்" என்கிறவரிடம், திருவைப் பற்றிக் கேட்டால், கேமரா ஃப்ளாஷ் போல கண்கள் பிரகாசிக்கின்றன.

``மேன் ஆஃப் ஃபியூ வேர்ட்ஸ். கிரியேட்டி விட்டி பெர்சன். நானும் அவரும் இதுவரைக்கும் ஹனிமூன், ஷாப்பிங், பார்ட்டினு எங்கேயும் போனது கிடையாது. இப்படி பல இல்லை கள் எங்க வாழ்க்கையில பயணிச்சாலும், எதுவும் எங்க அந்நியோன்யத்தை பாதிச்சதில்லை. பசங்களும் அவரைப் புரிஞ்சுக்கிட்டாங்க. ஆரம்பத்துல புரிஞ்சுக்கிட கஷ்டமா இருந்தது. அதுக்கப்புறம் அவருக்கான ஸ்பேஸை நானும் பசங்களும் கொடுத்திட்டோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``இது நிறைவான வாழ்க்கை!"

‘`என் மூத்த பொண்ணு ஸ்மிருதி ப்ளஸ் டூ-வும், மகன் பிரகித்யன் எட்டாவதும் படிக்கிறாங்க. திரு வீட்டுல இருந்தா பிள்ளைகளும் அவரும் சேர்ந்துகிட்டு வீட்டை அதிரடிக்க வைப்பாங்க. குழந்தை களோட நிறைய ஃபங்ஷன்களுக்கு அவர் இருந்ததில்லை. ஆனா, மிக முக்கியமா வந்தே தீரணும்கிற நிகழ்ச்சிக்குக் கண்டிப்பா வந்திடுவார். சில வருஷங்களுக்கு முன்னாடி எனக்கு உடம்பு சரியில்லாமப் போனப்ப, பெஸ்ட் டாக்டர்ஸையும் பெஸ்ட் ட்ரீட்மென்ட்ஸையும் தேடித் தேடிக் கொடுத்து, பக்கத்துல இருந்து பார்த்துக்கிட்டார். வார்த்தைகளால, பொருட்களால சொல்லத் தெரியாத அன்பு அவருடையது. வாழ்ந்து தெரிஞ்சு கிட்டேன்!'' என்று நிறைவாகச் சொல்கிறார் சரோஜினி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism