Published:Updated:

என் கவலைகளைத் தீர்க்கும் பார்வை!

என் கவலைகளைத் தீர்க்கும் பார்வை!
பிரீமியம் ஸ்டோரி
என் கவலைகளைத் தீர்க்கும் பார்வை!

நீதிபதி சந்துருவின் மனைவி பாரதிசெலிப்ரிட்டி மனைவிஆர்.வைதேகி, படம்: சொ.பாலசுப்ரமணியன்

என் கவலைகளைத் தீர்க்கும் பார்வை!

நீதிபதி சந்துருவின் மனைவி பாரதிசெலிப்ரிட்டி மனைவிஆர்.வைதேகி, படம்: சொ.பாலசுப்ரமணியன்

Published:Updated:
என் கவலைகளைத் தீர்க்கும் பார்வை!
பிரீமியம் ஸ்டோரி
என் கவலைகளைத் தீர்க்கும் பார்வை!

‘நீதிபதி சந்துரு... வீட்டிலேயும் சரி, வெளியிலேயும் சரி, எல்லோரையும் சரிசமமாக பாவிக்கிறவர். அவருடைய மனைவி பாரதி கல்லூரிப் பேராசிரியர், கதாசிரியர், சமூக ஆர்வலர் எனப் பல முகங்களைக் கொண்டவர். இனி பாரதியிடம்...

என் கவலைகளைத் தீர்க்கும் பார்வை!

‘`சூடாமணினு ஒரு பெரிய எழுத்தாளர் இருந்தாங்க. அவங்க கடைசிக் காலத்தைப் பார்த்துக்கிடுற பொறுப்பு கிடைச்சது. அவங்க எழுதிவெச்சுட்டுப்போன சொத்துல `சூடாமணி அறக்கட்டளை' ஆரம்பிச்சு அவங்க புத்தகம் வெளியிடுறது, நாடகம் போடுற மாதிரியான வேலைகளை கணவரோட இணைஞ்சு பண்ணிட்டு வர்றேன். நான் நேசிக்கிற என் கல்லூரிப் பேராசிரியர் வேலையையும் தொடர்ந்துட்டு வர்றேன்'' என்கிறவரின் காதல் கணங்களைக் கேட்டால் சிரிக்கிறார்.

‘`அப்ப நான் ஒரு வாரப்பத்திரிகையில வேலை பார்த்திட்டிருந்தேன். ஒரு பேட்டிக்காக சந்துருவை சந்திச்சேன். அவர் வக்கீலா இருந்தார். என் பேட்டிக்கு போட்டோ தரமாட்டேன்னு சொல்லிட்டார். அதுல எனக்கு செம கோவம். அதுக்கப்புறம் வசந்திதேவி நடத்திய ‘பெண்’ ஸ்டடி சென்டருக்கு சந்துரு வருவார். அவரோட அக்கறையைப் பார்த்து அவர் மேல உள்ள கோபம் அன்பா மாறுச்சு. என் ஃப்ரெண்ட் பத்மினிதான் `சந்துரு உனக்குப் பொருத்தமா இருப்பார்'னு சொன்னாங்க. எனக்கு சரினு தோண, என் விருப்பத்தைச் சொன்னேன். ஒண்ணுமே சொல்லாம வேலை விஷயமா டெல்லி போயிட்டார். அதுக்கப்புறமா சம்மதம் சொன்னார்'' என்கிறவருக்கு திருமணம் மிகமிக எளிமையாக நடந்திருக்கிறது.

``நான் அவரை மாதிரி கச்சிதமா இருக்கணும்னு நினைக்கிற ஆள் இல்லை. மத்தபடி சக மனுஷங்களை சமமா நடத்துற குணம்தான் ரெண்டு பேரையும் இணைச்சது. இந்த விஷயத்துக்கு இப்படித்தான் ரியாக்ட் பண்ணுவார்னு கணிக்கவே முடியாது. குழந்தைங்க மேல பாசத்தைக் கொட்டுற அப்பா, ஆணாதிக்கத்தைக் காட்டாத கணவர், சுயத்தை விரும்புறவர், நம்பிக்கைகளை மதிக்கிறவர்னு அவரைப்பத்தி சொல்லிட்டே போகலாம். அவருக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனா எனக்காக பூஜை அறை வெச்சுக் கொடுத்தார். அதே மாதிரி பிறந்த நாள், திருமண நாளுக்கு கிஃப்ட் கொடுக்கிறதுல அவருக்கு ஈர்ப்பு கிடையாது. அதை நானும் ஏத்துக்கிட்டேன். சமீபத்துல வந்த எங்களோட 25-வது வருஷ திருமண நாள்கூட சாதாரண நாளாவே கழிஞ்சதுல எனக்கு சந்தோஷம்'' என்கிறார் கூலாக.

``பசங்ககிட்ட கறாரா நடந்துக்காம அன்பா, அக்கறையா நடந்துக்குவோம். எல்லா குடும்பங்கள்லயும் நடக்கிற மாதிரியான வழக்கமான சண்டைகள் எங்களுக்கும் வரும். நான் செய்யற விஷயங்கள்மேல அவருக்கும், அவர் செய்யற விஷயங்கள்மேல எனக்கும் விமர்சனங்கள் உண்டு. பெருசா ஏதோ தப்பு பண்ணிட்டோமேனு நாம் ஃபீல் பண்ணிட்டு இருந்தா என்னை ஒரு பார்வை பார்ப்பார். அப்படினா `அதுல இருந்து வெளிய வா'னு அர்த்தம். அந்த நிமிஷமே கவலை காணாமப் போயிடும். இப்படியொரு அற்புதமான மனிதர் வாழ்க்கைத்துணையா கிடைச்சிருக்கார். வாழ்க்கையில இன்னும் நிறைய விஷயங்கள் பண்ணியிருக்கலாமோங்கிற எண்ணம் உண்டு. சீக்கிரம் பண்ணணும்...’’ - நிறைவாகவும் நிச்சயமாகவும் சொல்கிறார் பாரதி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism