Published:Updated:

ராதாவின் மொழி சினிமா!

ராதாவின் மொழி சினிமா!
பிரீமியம் ஸ்டோரி
ராதாவின் மொழி சினிமா!

இயக்குநர் ராதாமோகனின் மனைவி ஷீபாசெலிப்ரிட்டி மனைவிஆர்.வைதேகி, படங்கள்: ஆர்.குமரேசன்

ராதாவின் மொழி சினிமா!

இயக்குநர் ராதாமோகனின் மனைவி ஷீபாசெலிப்ரிட்டி மனைவிஆர்.வைதேகி, படங்கள்: ஆர்.குமரேசன்

Published:Updated:
ராதாவின் மொழி சினிமா!
பிரீமியம் ஸ்டோரி
ராதாவின் மொழி சினிமா!

‘மொழி’, ‘அபியும் நானும்’, ‘பயணம்’, ‘உப்புக் கருவாடு’, ‘கவுரவம்’ என இயக்குநர் ராதாமோகனின் படைப்புகள் ஒவ்வொன்றும் குடும்பத்துடன் பார்க்க முடிந்த திரைப்படங்கள்.

ராதாவின் மொழி சினிமா!

அப்படியொரு அங்கீகாரத்தையும் வெற்றியையும் ராதாமோகனுக்குப் பெற்றுத் தந்ததில் அவருடைய மனைவி ஷீபாவுக்கும் முக்கியப்பங்கு உண்டு. குடும்பத்தைத் திறம்பட இயக்குகிற டைரக்டராக ஷீபா இருப்பதால் தான், சினிமாவின் வெற்றியாளர் பட்டியலில் ராதாமோகன் தொடர்கிறார். இனி ஓவர் வீட்டு இயக்குநர் ஷீபா.

‘’பி.எஸ்ஸி முடிச்சுட்டு எம்.எஸ்ஸி பண்ணும்போதுதான் ராதாவை மீட் பண்ணினேன். அப்ப அவர் அசிஸ்டன்ட் டைரக்டரா இருந்தார். கல்யாணத்துக்கு பிறகுதான் பொருளாதார தேவையோட பலம் தெரிஞ்சது. வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். பல கம்பெனிகளுக்கு அப்புறம் பிரபலமான பேங்க்ல 18 வருஷம் கைநிறைய சம்பளத்துல வேலை பார்த்தேன். என்னோட பையன் அஷ்வத் 3 வயசா இருக்கிறப்ப அஸ்பெர்கர் சிண்ட்ரோம்கிற மைல்டான ஆட்டிஸம் பிரச்னை இருக்கிறதைக் கண்டுபிடிச்சோம். அவனுக்கு பேச்சு மட்டுமில்லை, இயல்பா ஒருத்தருக்கு வரக்கூடிய எந்த விஷயமும் சொல்லிக் கொடுத்தா மட்டும்தான் வரும். ஆனா, மத்தவங்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய விஷயங்கள் இவனுக்கு இயல்பா வந்துடும். எழுதப் படிக்கிறதையெல்லாம் தானா கத்துக்கிட்டான். இப்பகூட ஒரு சிச்சுவேஷனை சொல்லி இப்படித்தான் நடந்துக்கணும்னு சொல்லிட்டா கரெக்டா நடந்துப்பான். அஷ்வத்துக்கு இப்படி ஒரு பிரச்னைனு தெரிஞ்சதும் நான் ஆறுமாசம் தொடர்ந்து அழுதுட்டே இருந்தேன். அப்புறம் என்னை நானே தேத்திகிட்டேன். ஆனா, ராதா எதையுமே வெளிய காண்பிச்சுக்கலை. எல்லாம் சரியாகும்னு நம்பினார். இப்ப அஷ்வத் நல்லாயிருக்கான்'' என்றவர், தற்போது ஷார்ட் ஃபிலிமில் ஸ்பெஷல் குழந்தையின் தாயாக நடிக்கவிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராதாவின் மொழி சினிமா!
ராதாவின் மொழி சினிமா!

``ராதாவுக்கு சினிமாதான் மொழி, உணர்வு, பசி எல்லாம். அதனால கூடுமானவரை வீட்டு பிரச்னைகளை அவர்கிட்ட கொண்டுபோக மாட்டேன். எங்க வீட்ல ஒரு பழக்கம் உண்டு. ராத்திரி 8.45-க்கு டின்னர் முடிச்சதும் டெரஸ் டைம்னு ஒண்ணு இருக்கு. போன், டி.வி எதுவும் இல்லாம சும்மா பேசிட்டிருப்போம். அப்ப கிடைக்கிற சந்தோஷத்துக்கு அளவே இல்லை. எப்போவாவது ராதாவோட ஷூட்டிங் பார்க்க ஸ்பாட்டுக்கு போவோம். அங்க அட்டெண்டன்ஸ் போட்டுட்டு ஊர் சுத்த கிளம்பிடுவோம். ஆனா, அவர் வர்றப்ப வீட்டுல இருப்போம். ராதாவுக்கு வீடு குழந்தைகளோட சந்தோஷங்களால நிறைஞ்சிருக்கணும். அதேமாதிரி என் பொண்ணு யாழினினா ராதாவுக்கு அவ்ளோ இஷ்டம்! ரெண்டுபேரும் சேர்ந்துட்டா என்னை சுத்தமா கண்டுக்க மாட்டாங்க.  பசங்க நான் இல்லாம அவங்க தேவைகளைப் பார்த்துக்க பழகிட்டாங்க. இப்ப கிடைச்சிருக்கிற சின்ன இடைவெளியை வெச்சு ஸ்கிரிப்ட் எழுதவும் நடிக்கவும் முயற்சி பண்ணலாம்னு இருக்கேன். முதல் முயற்சியா ஸ்பெஷல் சைல்டுக்கு அம்மாவா ஒரு ஷார்ட் ஃபிலிம்ல நடிக்கப் போறேன். `தொடர்ந்து வாய்ப்பு வந்தா நடி'னு ராதா சொல்லியிருக்கார். பார்ப்போம். என் பையனையும் சினிமாவுல நடிக்க வைக்கணும்கிறதுதான் என் கனவு. பொண்ணுக்கு இப்பவே ஃபேஷன் டிசைனராகணும்னு ஆசை இருக்கு. அவங்க கனவை நிறைவேத்துறதே என்னோட லட்சியம்'' என்று அக்மார்க் அம்மாவாக நெகிழ்ந்து பேசுகிறார் ஷீபா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism