Published:Updated:

ஃபயர் ஃபைட்டர்ஸ்

ஃபயர் ஃபைட்டர்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஃபயர் ஃபைட்டர்ஸ்

வாழ்வை காப்பவர்கள்பா.விஜயலட்சுமி, படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், ச.வெங்கடேசன்

ஃபயர் ஃபைட்டர்ஸ்

வாழ்வை காப்பவர்கள்பா.விஜயலட்சுமி, படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், ச.வெங்கடேசன்

Published:Updated:
ஃபயர் ஃபைட்டர்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஃபயர் ஃபைட்டர்ஸ்

தீபாவளி என்றதுமே தீப ஒளியும், வானை வண்ணங்களால் அலங்கரிக்கும் பட்டாசும், சுவையைத் தூண்டும் பட்சணங்களுமாக அந்த திருநாள் மனதில் சந்தோஷத்தை கொடுக்கும். இவை அத்தனையையும் மீறி அன்றைய நாளை கூடுதல் கவனம் மற்றும் அர்ப்பணிப்புடன் மக்களைக் கவனித்துக்கொள்வதில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர்களில் முக்கியமானவர்கள் தீயணைப்புத் துறையினர். அத்துறையில் இருக்கும் பெண்களுடைய மறக்கமுடியாத தீபாவளி அனுபவங்களைக் கேட்டோம்.

ஃபயர் ஃபைட்டர்ஸ்

பிரியா ரவிச்சந்திரன்

இந்தியாவின் முதல் தீயணைப்புத் துறை பெண் அதிகாரி பிரியா ரவிச்சந்திரன். சென்னை எழிலகம் தீநாக்குகளால் சூழப்பட்டபோது, அதற்கான மீட்புப் பணியின்போது சிக்கி சாவின் விளிம்பு வரை சென்று திரும்பிவந்த சாதனைப் பெண். அவருடைய தீபாவளி எப்போதும் அலுவலகத்தில்தானாம்.

``சின்ன வயசுல இருந்து சிவில் சர்வீஸ் போஸ்ட் மேல எனக்கு தீராத காதல். முதல் முறையா அப்படியே சிவில் சர்வீஸ் தேர்வு மூலமா தீயணைப்புத் துறைக்கு வந்தேன். முதல் தடவை பயிற்சி எல்லாம் கடுமையா இருந்தது மறக்க முடியாது'' என்கிறவரின் மனதில் வடுவாகியிருக்கும் சம்பவம் பற்றி சொன்னார்...

``ஒருமுறை தீபாவளி அன்னைக்கு ஒரு குடிசைப்பகுதியில தீவிபத்துனு தகவல் வந்தது. எவ்வளவோ போராடியும் வயசான ஒரு அம்மாவை காப்பாத்த முடியல. அந்த மரணம் ரொம்ப வலியா இருந்தது. தீவிபத்துல எங்களைப் பத்தி கவலைப்படாம முடிஞ்சவரை போராடுவோம். பொதுவா தீபாவளி சமயத்துல ரொம்ப அலர்ட்டா இருப்போம். எந்த நேரத்துல வேணும்னாலும் அழைப்பு வரலாம். காலையில குளிச்சு புது டிரெஸ் போட்டுட்டு உடனே ரவுண்ட்ஸ் போயிடுவேன். பல வருஷம் குழந்தைங்க என்னை தேடினாங்க. இப்பலாம் `என்னம்மா, இன்னைக்கு எங்க ரவுண்ட்ஸ்?'னு தீபாவளி அன்னைக்கு காலைல கேட்குறதோட சரி. பொதுவா பட்டாசு வெடிக்கிறதா இருந்தா ஒரு வாளி நிறைய தண்ணீரை வெச்சுக்கிட்டு வெடிக்கணும். உங்க பக்கத்துல நிறைய பட்டாசுகளை வெச்சுக்காதீங்க. ஒருநாள் கொண்டாட் டம் வாழ்க்கையோட நினைவா இருக் கணும், வடுவா இல்லை" என்கிறவரின் டிப்ஸில் ஆயிரமாயிரம் அம்மாக்களின் அக்கறையும், அட்வைஸும் கலந்திருக் கிறது.

பரிமளா தேவி


வேலூர், குடியாத்தத்தில் தீயணைப்புத் துறை அலுவலக அதிகாரி. ``தீபாவளின்னாலே அலர்ட்டா இருக்கணும். ஒருமுறை கள்ளப்பாடியில பட்டாசு தயாரிக்கிற குடோன்ல வெடிவிபத்துனு தகவல் கிடைச்சது. அவசரஅவசரமா கிளம்பிப் போனா, அதுக்குள்ள 4 பேரை காப்பாத்த முடியல. அப்ப நான் நாலுமாச கர்ப்பமா இருந்தேன். `அங்கலாம் போகாதம்மா, உன் உடம்புக்கு ஆகாது'னு எல்லாரும் சொன்னாங்க. ஆனா `ட்யூட்டி ஆபீஸரா இருந்துட்டு போகாம இருக்க கூடாது. மனதைரியத்தோட வேலையில இறங்கு'னு என் கணவர் கொடுத்த தைரியத்துல ஸ்பாட்ல இறங்கி்னேன். பலபேரை காப்பாத்தினோம். என் கணவர் தந்த உற்சாகத்தோட இதோ இந்த தீபாவளிக்கு ரெடியாகிட்டேன். அமைதியான எந்த பாதிப்பும் இல்லாத தீபாவளி அமைய வாழ்த்துக்கள்'' என்று சொல்லி விடை கொடுக்கிறார் பரிமளா.

இல்லத்தரசிகள் என்றாலே பல கடமை கள் என்பதை தாண்டி, சமூகத்தையும் பொறுப்புடன் பாதுகாக்கும் இவர்களுக்கு சல்யூட் வைக்கலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism