Published:Updated:

குயின் ஆஃப் காட்வீ...

குயின் ஆஃப் காட்வீ...
பிரீமியம் ஸ்டோரி
குயின் ஆஃப் காட்வீ...

சதுரங்க நாயகிக்கு ஒரு ராயல் சல்யூட்! திரைப்படம்பொன்.விமலா, கே. அபிநயா

குயின் ஆஃப் காட்வீ...

சதுரங்க நாயகிக்கு ஒரு ராயல் சல்யூட்! திரைப்படம்பொன்.விமலா, கே. அபிநயா

Published:Updated:
குயின் ஆஃப் காட்வீ...
பிரீமியம் ஸ்டோரி
குயின் ஆஃப் காட்வீ...

காட்வீ... கிழக்கு ஆப்பிரிக்கா வில் இருக்கும் உகாண்டா நாட்டின் தலைநகர் கம்பாலாவின் புறநகர்ப் பகுதி. இந்தச் சேரிப்பகுதியில் இருந்து புறப்பட்டு, செஸ் விளையாட்டு உலகையே தன் பக்கம் ஈர்த்த இளம்வீராங்கனையான பியோனா முட்டேசியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கதையை, திரைக்குக் கொண்டுவந்திருக்கிறது ‘குயின் ஆஃப் காட்வீ (Queen of Katwe) எனும் ஆங்கிலத் திரைப்படம். அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் மீரா நாயர் இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்திருக்கிறது இந்தப் படம்.

குயின் ஆஃப் காட்வீ...

காட்வீ  சேரிப் பகுதியில் தாய் மற்றும் சகோதர, சகோதரிகளுடன் வாழும் பியோனா, இளம் வயதிலேயே தந்தையை இழந்தவள். தகப்பனுமாகி குடும்பத்தைத் தாங்கிப்பிடிக்கும் தாயால், வேளாவேளைக்குச் சாப்பாடே சரிவர கொடுக்கமுடியாத வறுமைச்சூழல். இதனால், கல்வி என்பதை குழந்தைகளால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. தாயின் சுமையை தானும் சேர்ந்து சுமப்பதற்காக சந்தையில் மக்காச்சோளம் விற்கும் பியோனா, எதார்த்தமாக ராபர்ட் கட்டெண்டேவை சந்திக்கிறாள்.

இளம்வயதில் தாயை இழந்த ராபர்ட், தான் சந்தித்த துயரம் மற்றவர்களுக்கும் நேரக்கூடாது என்ற எண்ணத்தில், ஏழைக் குழந்தைகளுக்கு செஸ் விளையாட்டுப் பயிற்சி கொடுக்கிறார். ஒரு நாள் அந்த விளையாட்டுக் கூடத்துக்கு வரும் பியோனா, சிறுவர்கள் செஸ் விளையாடுவதைப் பார்த்து தானும் கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறாள். ஆனால் அவளுடைய தோற்றம், அவள் மீது வீசும் துர்நாற்றம் இதெல்லாம் மற்ற குழந்தைகள் அவளைவிட்டு விலகும்படி செய்கிறது. இதைக் கவனிக்கும் ராபர்ட், அவளையும் செஸ் விளையாட அனுமதிக்கிறார்.

ஒருகட்டத்தில் அநாயசமாக விளையாட ஆரம்பிக்கும் பியோனா, தன்னுடன் விளையாடும் சிறுவனை ஜெயித்துவிட, ‘ஏதாவது புத்தகத்தில் படித்து செஸ் கற்றுக்கொண்டாயோ?’ என்று ஆச்சர்யம் பொங்கக்  கேட்கிறார் ராபர்ட். அவளோ, ‘எனக்கு எழுதப் படிக்கவே தெரியாது’ என மேலும் ஆச்சர்யம் கூட்டுகிறாள். அவளுடைய விளையாட்டு லாகவத்தில் லயிக்கும் ராபர்ட், செஸ் விளையாட்டில் அவளைப் புலியாக மாற்றும் வகையில் பயிற்சிகளைத் தர ஆரம்பிக்கிறார்.

இதற்கிடையே தங்கியிருக்கும் ஒட்டுக்குடிசை வீட்டுக்கு வாடகை கொடுக்க இயலாததால், வீட்டைவிட்டு துரத்தப்படுகிறது பியோனோவின் குடும்பம். குழந்தைகளுடன் நிராதர வாக நிற்கும் சூழலைச் சாதக மாக்கிக்கொள்ள நினைக்கும் ஒரு வியாபாரி, பணத்தாசை காட்டி பியோனாவின் அம்மாவை தன் வலையில் விழ வைக்கப் பார்க்கிறான். திடமாக அவனைக் கடந்து செல்கிறாள். கணவன் இல்லை, பிள்ளை களுக்கு அப்பா இல்லை, வீடு இல்லை... வறுமை மட்டுமே ஒரே சொத்து. இத்தகைய சூழலிலும் அப்பெண்ணின் உறுதி... உறுதிதான் என்பதை அடிக்கோடிட்டுப் பதிவு செய் திருக்கிறார் இயக்குநர்.

இத்தனை சிரமங்களுடன் தங்களை வளர்க்கும் தாய்க்கு ஒரு வீட்டையும், தன்னை வழிநடத்தும் பயிற்சியாளருக்குப் புகழையும் பெற்றுத்தர வேண்டும் என்பதில் தீவிரம் காட்டுகிறாள் பியோனா. ராபர்ட்டின் வழிகாட்டுதலுடன் உலக நாடுகளில் நடக்கும் சதுரங்கப் போட்டிகளில் கலந்து கொள்கிறாள். சில வெற்றிகள் மூலமாக அவளுடைய தன்னம்பிக்கை, அதீத தன்னம் பிக்கையாக மாறுகிறது. தன் வீட்டை, வீட்டிலிருக்கும் உணவை எல்லாம் ஏளனமாகப் பார்க்கிறாள். பணக்காரத்தனம் ஒட்டிக்கொண்டுவிட்டதே என்று பதறுகிறாள் தாய். இந்நிலை யில், அவளுடைய அதீத தன்னம்பிக்கை, அவளுக்குத் தோல்வியைத் தேடித் தர, அதுவே பெரிய படிப்பினையாக மாற... தொடர்ந்து தன்னை சரி செய்து கொண்டு முன்னேறுகிறாள்.

நல்ல சம்பளத்தில் தனக்குக் கிடைக்கும் வேலையைப் புறக்கணித்து, சேரிப் பிள்ளை களின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருக்க ராபர்ட் முடிவெடுப்பதும், இது தொடர்பான நடவடிக்கைகள் அனைத்தையும் தன் மனைவி யிடம் ஒளிவுமறைவு இல்லாமல் பகிர்ந்துகொள்வதும், அவை அனைத்தையும் அவள் புரி தலோடு ஏற்றுக்கொள்வதும் கணவன் - மனைவி இருவருக்கும் இடையே இருக்க வேண்டிய பகிர்தல்களை நமக்கு அழகாகப் புரிய வைக்கிறது.

போட்டி ஒன்றில் சக போட்டி யாளருடன் பியோனா கைகுலுக்க, அவர் தன் கைகளைத் துணியில் துடைத்துக்கொள்ளும் காட்சி... ஒடுக்கப்பட்ட மக்களில் இருந்து வந்த ஒருத்தி, சம தகுதியுடன் நேருக்கு நேர் போட்டியாளராக அமரும்போதுகூட, அவளைச் சூழ்ந்திருக்கும் தீண்டாமையை அறைந்து சொல்கிறது படம். இறுதியில் பியோனா ‘செஸ் ஒலிம்பியாட்’ போட்டியில் வெற்றியைப் பறித்து ஊர் திரும்பும்போது அவளை ஒதுக்கியவர்கள்கூட தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள்.

அம்மாவுக்குக் கொடுக்க நினைத்த வீட்டையும், தன் பயிற்சியாளருக்குத் தர வேண்டிய புகழையும் ஒரே நேரத்தில், பெற்றுக்கொடுக்கிறாள் பியோனா. உகாண்டா நாட்டு வரலாற்றில், முதல் செஸ் விளையாட்டு வீராங்கனையாகி கைஉயர்த்தும் ஒடுக்கப்பட்ட அந்தக் கறுப்பினப் பெண், தன் திறமைக்கான அங்கீகாரத்தை வென்றெடுக்கிறாள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ணவனின் துணை இல்லாமல் மக்காச்சோளம் விற்றுப் பிள்ளைகளை வளர்க்கும் பியோனாவின் தாய் கதாபாத்திரம், உலகெங்கிலும் தனித்து வாழும் தாய்கள் படும் துயரங்களுக்கும் பொறுப்பு களுக்குமான நிஜ சாட்சி. இது, சமீபத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பனுடைய அம்மா வையும் நினைவு படுத்தத் தவறவில்லை.

குயின் ஆஃப் காட்வீ...

‘குயின் ஆஃப் காட்வீ’ படம் முடியும்போது நிஜங்கள், நிழல்களுடன் திரையில் தோன்றுவது சர்ப்ரைஸ். ஆம்... பியோனாவாக நடித்த மடினாவுடன் பியோனா, பயிற்சியாளராக நடித்த டேவிட் ஒயெலோவாவுடன் ராபர்ட்  கட்டெண்டே என்று நிஜ மனிதர்களையும் திரைக்குக் கொண்டுவந்து மரியாதை செய்திருக்கிறார் இயக்குநர். இந்தத் திரைப்படம் கடந்த செப்டம்பரில் கனடாவில் நடந்த டொரன்டோ உலக திரைப்பட விழாவில் விருதுபெற்றது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism