வேகத்தின் காதலி என்றே அழைக்கலாம் ஸ்னேகா ஷர்மாவை. இந்தியாவின் `fastest woman racer' என்கிற பெருமையைச் சுமந்துகொண்டிருக்கிற ஸ்னேகா, இண்டிகோ ஏர்லைன்ஸில் பைலட்டும்கூட!

``அப்பா நேவியில கேப்டன். நினைவு தெரிஞ்ச நாள்லேருந்து என்னோட சம்மர் வெகேஷன் எல்லாம் கடல் தாண்டின கப்பல் பயணங்கள்லதான் போயிருக்கு. சின்ன வயசுலேருந்தே எனக்கு வேகம்னா அவ்ளோ பிடிக்கும். அப்பா கூட கப்பல்ல கழிச்ச பொழுதுகள், மெஷின்கள் மேலயும் ஒரு காதலை ஏற்படுத்திருச்சு. ஹை ஸ்பீடு சைக்கிளிங் ரொம்பப் பிடிக்கும்...'' - வேகத்தின் மேல் காதல் பிறந்த கதையுடன் ஆரம்பிக்கிறார் ஸ்னேகா.

``அப்ப எனக்கு 16 வயசிருக்கும். அம்மா என்னை முதல் முதல்ல மும்பையில ஒரு லோக்கல் ட்ராக்ல கோ-கார்ட்டிங் கூட்டிட்டுப் போனாங்க. அங்க நான் சந்திச்ச ரெண்டு ரேஸர்களும் நேஷனல் லெவல் சாம்பியன்னு தெரிஞ்சதும் என்னோட ஆர்வம் அதிகமாச்சு. ஆனா, யார்கிட்ட ட்ரெயினிங் எடுத்துக்கிறதுனு தெரியலை. எனக்குத் தெரிஞ்ச மெக்கானிக் கிட்டல்லாம் அவங்களுக்குத் தெரிஞ்ச விஷயங்களை சொல்லித் தரச் சொல்லிக் கேட்பேன். அவங்க சொன்ன சின்னச் சின்ன டிப்ஸை வெச்சு, கூடவே என்னோட பிராக்டீஸையும் நம்பி, ரேஸ்ல கலந்துக்க ஆரம்பிச்சேன்.

`ரேயோ ரேஸிங்'தான் எனக்கு முதல் பிரேக் கொடுத்தது. அந்த ரேஸை என் வாழ்க்கையில மறக்கவே முடியாது'' என்கிறவருக்கு முதல் ரேஸே பயங்கர அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது.

``ரேஸ் தொடங்கப் போகுது... திடீர்னு என் வண்டி ஸ்டார்ட் ஆகலை. `சரி அவ்வளவுதான்... நாம இந்த ரேஸ்ல இல்லை'ங்கிற மனநிலைக்கு வந்துட்டேன். திடீர்னு ஒருத்தர் வந்து என் வண்டியை சரிபண்ணிக் கொடுத்தார். கிட்டத்தட்ட ரேஸே முடியற நேரத்துலதான் நான் கலந்துக்கிட்டேன். ஆனாலும், போடியம்ல ரெண்டாவதா முடிச்சேன்.

ரேஸிங்தான் என் ஆர்வம்னு தெரிஞ்சதும் என் அம்மா, அப்பாவால அதை ஈஸியா ஏத்துக்க முடியலை. ரிஸ்க் அதிகம்னு ஒரு பக்கமும், படிப்பு கெட்டுப் போயிடும்னு இன்னொரு பக்கமும் பயந்தாங்க. ரேஸிங் பண்ணத் தொடங்கின புதுசுல வீட்ல நிறைய சண்டைகள் வந்திருக்கு. அம்மா, அப்பாகிட்ட பொய் சொல்லிட்டு, வீட்டுக்குத் தெரியாம சுவர் ஏறிக் குதிச்சு ரேஸ்ல கலந்துக்கிட்ட தெல்லாம் உண்டு. ஒரு கட்டத்துல டிராக்ல என் பர்ஃபார்மென்ஸையும் ரேஸ்ல எனக்குள்ள வெறியை யும் பார்த்து அவங்களே என்கரேஜ் பண்ண ஆரம்பிச்சாங்க. பேரன்ட்ஸோட பர்மிஷனை தாண்டியும் இந்தத் துறையில ஜெயிக்க நிறைய சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது.

ரேஸ் ட்ராக் எனக்கு இன்னொரு ஸ்கூல் மாதிரி ஆனது. அங்கேயும் புக்ஸை எடுத்துட்டுப் போய் டைம் கிடைக்கிறபோதெல்லாம் படிச்சிருக் கேன். அடுத்த பெரிய சவால்னா ஸ்பான்சர் ஷிப். ரேசிங் ரொம்ப காஸ்ட்லியான ஸ்போர்ட்.

ஸ்பான்சர்ஸ் கிடைக்காம... கார் கிளீன் பண்றது, அக்கவுன்ட்ஸ் பார்க்கிறது மாதிரி குட்டிக் குட்டியா பார்ட் டைம் வேலைகள் பார்த்து சமாளிச்சிருக்கேன்... அதோட நான் எக்கச்சக்க குண்டா இருந்தேன். அதைக் குறைக்கிற முயற்சி இன்னொரு பக்கம்... '' என்கிற ஸ்னேகா இன்று ஜே.கே.டயர்ஸ் ஸ்பான்சர் செய்த ஒரே இந்தியன் டிரைவர் என்கிற பெருமைக்கு உரியவர்.

``ரேஸ் ட்ராக் எனக்கு நிறைய வாழ்க்கைப் பாடங் களைக் கத்துக் கொடுத்திருக்கு'' என்று தரையில் சீறிப் பாய்கிற ஸ்னேகா, இன்னொரு பக்கம் ஆகாசத்தில் பறந்து ஆச்சர்யப் படுத்துகிறார். அதற்கும் தனது ரேசிங் காதலே காரணம் என்கிறார்.

''ரேசிங் ஆர்வத்தை சப்போர்ட் பண்ண எனக்கொரு வேலை தேவைப்பட்டது. 17 வயசுல கலிஃபோர்னியா போய் முறைப்படி பைலட் பயிற்சி எடுத்துக்கிட்டேன். ரெண்டுமே ஒண்ணுக்கொண்ணு சம்பந்தமே இல்லாத துறைகள். பேலன்ஸ் பண்றது ரொம்பப் பெரிய சவால். ஆனாலும் என்னோட ரேஸிங் காதல்தான் ரெண்டையும் சமாளிக்க வைக்குது...'' என்கிற சவால் விரும்பியான ஸ்னேகாவுக்கு இரண்டு துறைகளிலுமே ஆண்களின் அலட்சியப் பார்வையைத் தவிர்க்க முடிவதில்லை.

``முதல் முதல்ல நான் ரேஸ் ட்ராக் உள்ள போனபோது, `உனக்கெல்லாம் இங்க என்ன வேலை'னு பசங்க அவமானப்படுத்தினாங்க, அதை எல்லாம் அலட்சியப்படுத்திட்டு நான் அடுத்தடுத்து வெற்றிகளைக் கைப்பற்றின போது அவங்களோட கிண்டலும் கேலியும் இன்னும் அதிகமாச்சு, ஒரு பொம்பிளைகிட்ட தோத்துப் போறதாங்கிற பொருமல் அதிகமா இருந்தது. ரேஸ் ட்ராக்ல என் வண்டியை வேணும்னே வந்து இடிச்சிருக்காங்க, வண்டியோட என்னை கவிழ்த்துவிட்டு என்னை முன்னேற விடாமத் தடுத்திருக்காங்க; எலலாரையும் என் திறமையால அடக்கினேன். என்னை எல்லாருக்கும் பிடிக்கணும்கிறது என் எண்ணமில்லை... ஆனா, மதிக்கணுமே. இதைவிடக் கொடுமை என்ன தெரியுமா? `பொண்ணாச்சே... எப்படி ஃபிளைட் ஓட்டுவா'ங்கிற பயம் பயணிகளுக்கே இருந்தது. அதையும் என் திறமையால ஜெயிச்சுதான் மேல வந்திருக்கேன்'' என்பவர் அதை உதாரணத்துடன் விளக்குகிறார்.

``ஜம்மு காஷ்மீர் வெள்ளத்துல மாட்டிக்கிட்ட மக்களை இண்டிகோ ஏர்லைன்ஸோட சேர்ந்து மீட்டதை என் கரியர்ல பெருமையா நினைக்கிறேன். உயிர் பிழைச்சா போதும்ங்கிற தவிப்புல இருந்த மக்களுக்கு காப்பாத்தினது ஆணா, பெண்ணாங்கிறது அப்போ முக்கியமா படலை... அவங்களோட நன்றியும் அன்பும் நெகிழ வெச் சிருச்சு...'' - மகிழ்கிறார் மகராசி!

``இந்த வருஷ ஆரம்பத்துல நான் ஜெயிச்ச ஃபார்முலா கார் ரேஸ் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். கோயம்புத்தூர்ல நடந்தது அந்த ரேஸ். எக்கச்சக்கமான வெயில். மூச்சுகூட விட முடியலை. ராத்திரி முழுக்க ஃபிளைட் ஓட்டிட்டு வந்ததுல தூக்கமே இல்லை. பிராக்டீஸ் பண்ண ஒரு நிமிஷம்கூட டைம் இல்லை. ஆனாலும், ஜெயிக் கணும்கிற வெறி... எனக்கு முன்னாடி பயமுறுத்தின எல்லா தடைகளையும் தாண்டி முன்னேறி ஜெயிச்சேன்...'' - வெற்றியை ருசித்தவருக்கு ஒவ்வொரு வெற்றியும் நிறையவே கற்றுக் கொடுத்திருக்கிறது.

``உங்ககிட்ட இல்லாத ஒண்ணை அடைய ஆசைப்படறீங்களா... அப்போ அதை அடைய வும் அதுவரை நீங்க செய்யாத முயற்சிகளைச் செய்யவும், அனுபவிக்காத கஷ்டங்களை சகிச்சுக் கவும் தயாரா இருந்தாகணும்'னு எங்கேயோ படிச்சது மனசுல ஆழமா பதிஞ்சு போச்சு. அதையே எனக்கான வாழ்க்கைப் பாடமாகவும் எடுத்துக்கிட்டேன். கஷ்டமே படாம கிடைக்கிற வெற்றி சுவாரஸ்யமாகவும் இருக்கிறதில்லை. உழைப்புக்கும் வெற்றிகளுக்கும் ஆண்-பெண் பேதமும் தெரியாது'' - வாழ்க்கைத் தத்துவம் சொல்கிற ஸ்னேகாவுக்கு சர்வதேச அளவிலான ஃபார்முலா ரேஸில் வெற்றியை எட்டுவதே அல்டிமேட் லட்சியம்!