சிதம்பரத்தின் சிறப்புகளையும் நடராஜரின் பெருமைகளையும் ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழ்ப்பெண் எழுத, அதற்கு அழகிய புகைப்படங்கள் அளித்திருக்கிறார் இன்னொரு பெண். இப்படி பெண்களாலே படைக்கப்பட்டிருக்கிறது ஒரு பக்தி ஆவணம்!

‘‘கோயில் என்றாலே சிதம்பரம் என்றுதானே சொல்வார்கள்? சிதம்பரம் நடராஜரே எனக்கு மிகவும் விருப்பமான கடவுள். சிதம்பரம் கோயில், நடராஜர் சிற்பம் ஆகியவற்றில் நுட்பமான செய்திகள் மறைந்திருக்கின்றன. நடராஜரின் உதடுகளில் தவழும் புன்சிரிப்பையும், அவரது காலில் மிதிபட்டுக் கிடக்கும் அரக்கனையும் நான் வியப்போடு பார்க்கிறேன். நல்லோரிடமும் தீயோரிடமும் நடந்து கொள்வது எப்படி என்பதை நடராஜரின் உருவத்தைப் பார்த்தே புரிந்துகொண்டேன்’’ என்று பரவசமாகிறார் இந்நூலின் ஆசிரியர் டாக்டர் சந்திரிகா சுப்பிரமணியம்.

பத்திரிகையாளராக சென்னையில் வாழ்க்கையைத் தொடங்கிய இவர், இப்போது ஆஸ்திரேலியாவின் சிட்னியில் வசித்து வருகிறார். 60 வயதை எட்டும் முன்னரே 45 நாடுகளுக்குச் சென்று வந்துள்ள பயணியும் கூட!

சந்திரிகாவின் ‘தில்லை எனும் திருத்தலம்’ நூல், ‘லார்ட் ஆஃப் டான்ஸ்’ என்ற பெயரில் ஆங்கிலப் பதிப்பும் கண்டுள்ளது. இந்நூலுக்கு கண்ணுக்கு இனிய புகைப்படங்கள் எடுத்து அளித்தவர், சிதம்பரத்தைச் சேர்ந்த புகைப்படக்கலைஞர் மலர்விழி ரமேஷ். இவர் க்ளிக் செய்த படங்கள்தான் இங்கு சிதம்பர ஆல்பமாக விரிகிறது!