``நம்மில் பலர் குழந்தைகளை வெயில் படாமலேயே வளர்க்க விரும்புகிறோம். நாமும் அலுவலகம், வீடு என முப்பொழுதும் செயற்கையான ஏ.சி அறைகளுக்கு உள்ளேயே கழிக்க விரும்புகிறோம். இதனால் இயற்கை எனும் மாபெரும் மருத்துவர் அளிக்கிற நற்பலன்கள் பலவற்றை இழந்து விடுகிறோம். குழந்தைகளும் வெயிலின் இயல்புக்குப் பழகாமலே பால்யத்தைக் கடந்துவிடுகிறார்கள். இந்த நிலையிலிருந்து மீண்டு, சூரிய ஒளியின் அற்புத பலன்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்'' என்கிற சரும சிகிச்சை நிபுணர் ஷர்மதா, அதற்கு எளிய வழிமுறைகளும் கூறுகிறார்.

*சூரிய ஒளியில் உள்ள `அல்ட்ரா வயலெட் பி' கதிர்கள் உடலுக்கு மிகவும் நல்லவை. இதனால் நம் உடலுக்கு `விட்டமின் டி' கிடைக்கிறது. இது காலை ஏழு மணி முதல் பத்து மணி வரை இருக்கும். பிறகு, மாலை நான்கு மணி முதல் ஆறு மணி வரை இருக்கும்.

*கைக்குழந்தை களை பிறந்த ஆறாவது மாதத்தில் இருந்து, தினமும் காலை ஏழு மணி வெயிலில் 10 நிமிடங்கள் வெற்று உடம்பில் சூரியக் குளியல் எடுக்க வைக்கலாம்.

*காலை ஏழு மணி முதல் எட்டு மணி வரை 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் தினமும் 10 நிமிடங்கள் வெற்றுடலில் சூரியக் குளியல் எடுப்பதால், அவர்களுக்கு `விட்டமின் டி' கிடைக்கிறது.

*குளிர் காலங்களில் குழந்தை கள் உடலில் `விட்டமின் டி' குறைபாடு ஏற்படுகிறது. ஆகவே, மழை மற்றும் குளிர் காலங்களில் வெயில் வரும்போது குழந்தைகளை விளையாட அனுமதியுங்கள். வெயிலில் விளையாடும்போது உடல் தானாகவே போதுமான அளவு வெப்பத்தை கிரகித்துக்கொள்கிறது.

*பூமத்தியரேகையை ஒட்டி அமைந்துள்ள ஆப்பிரிக்க நாடுகளில் அதீத வெப்பத்தால் சன் ஸ்ட்ரோக், மெலனோமா, சருமப் புற்றுநோய் போன்றவை ஏற்படக்கூடும். இந்தியாவில் அந்த அளவு பாதிப்புகள் இல்லை. அதனால், கோடை காலங்களில் மாலை வெயிலில் விளையாடுவதால், குழந்தைகளின் உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

*வளரும் பருவத்தில் அதீத வெப்பத்தைத் தாங்கும் சக்தி இயல்பாகவே சிறுவர்களின் உடலுக்கு உண்டு. 18 வயதுக்குப் பிறகு இது படிப்படியாகக் குறையத் தொடங்கும். இதனால்தான் 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களால் வெயிலில் பல மணி நேரம் கிரிக்கெட் விளையாட முடிகிறது.

*எவ்வளவு வேலை இருந்தாலும் காலை 7-8 மணிக்குள் குடும்பத்தில் பெரியவர்கள், குழந்தைகள் அனைவரும் அனைவரும் வீட்டு மொட்டை மாடியில் 15 நிமிடங்கள் வெயிலில் உலவ வேண்டும்.

*காலை பத்து மணி முதல் மாலை நான்கு மணி வரை `அல்ட்ரா வயலெட் ஏ' கதிர்கள் சூரிய வெப்பத்தில் இருந்து வெளிப்படும். இது குழந்தைகள்/ சிறுவர்கள் சருமத்தில் ஒவ்வாமை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இந்நேரங்களில் வெயிலில் விளையாட அனுமதிக்கக் கூடாது.

*சென்சிட்டிவ் சருமம் உடைய குழந்தைகளுக்கு சன் அலர்ஜி ஏற்படலாம். இவர்கள் சன் பாத் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

*நீண்ட நேரான மதிய வெயிலில் அலைந்தால் குழந்தைகளுக்கு சன் ஸ்ட்ரோக் ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த நேரத்தில் குழந்தைகள் அவசியம் வெயிலைத் தவிர்க்க வேண்டும்.

*வார இறுதி விடுமுறை நாட்களில் பூங்கா, கடற்கரை, மைதானம் உள்ளிட்ட இடங்களுக்கு மாலை வேளை களில் குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள். குழந்தைகளை காலை அல்லது மாலை வெயிலில் விளையாட அனுமதியுங்கள்.

*படர்தாமரை, சொரியாசிஸ் போன்ற ஃபங்கஸ் நோய்களுக்கு ஆளானவர்கள் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் `சன் பாத்' எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.