Published:Updated:

சாதனைப் பெண் ஆகணுமா? சவாலைச் சந்தியுங்கள்!

சாதனைப் பெண் ஆகணுமா? சவாலைச் சந்தியுங்கள்!
சாதனைப் பெண் ஆகணுமா? சவாலைச் சந்தியுங்கள்!

30 நாள் அவள் சேலஞ்ச்

சாதனைப் பெண் ஆகணுமா? சவாலைச் சந்தியுங்கள்!

ன்னை நேசிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறும் காதலனை நம்பும் கதாநாயகி, அவன் ஏமாற்றிவிட்டு விலகும்போது முதலில் கெஞ்சுவாள். கதறுவாள். அவற்றுக்குப் பலனில்லை என்றதும், ‘என் வயிற்றில் வளரும் குழந்தை உன்னுடையதுதான்னு உன் வாயாலேயே சொல்ல வைக்கிறேனா இல்லையானு பாரு... இது சத்தியம்!’ என்று உரத்த குரலில் சவால் விடுவாள்.

`இந்த நாள்... உன் டைரில குறிச்சு வெச்சுக்கோ... இன்னிலேர்ந்து எண்ணி ஒரு வருஷத்துக்குள்ள உன்னைவிட அதிகமான பணமும் புகழும் சம்பாதிச்சு உன்னை செல்லாக்காசாக்கிக் காட்டறேன்’ என நண்பனிடம் சவால் விடும் கதாநாயகன்...
கமர்ஷியல் ஹிட் தேவைப்படும் இந்திய சினிமாவில் இன்றும் தொடரும் காட்சிகள் இவை!

கவனித்திருக்கிறீர்களா? அதுவரை காமா சோமா என நகரும் படத்தை ஏனோதானோவென பார்த்தபடியிருக்கும் நாம் இடையில் முளைக்கும் அந்த சவால் காட்சிகளின்போது நம்மையும் அறியாமல் நிமிர்ந்து அமர்வோம். திரையில் நம் பார்வை கூர்மையாகும். எப்படி அந்தச் சவாலில் ஜெயிக்கப்போகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வமாவோம். அது ஏதோ நாமே எதிராளிக்கு விடுத்த சவால் போலவும் திரை நாயகன்/நாயகியின் வெற்றி நம் வெற்றி போலவுமே டென்ஷனையும் மகிழ்ச்சியையும் நமக்கு நாமே ஏற்றிக்கொள்வோம்.

இப்படி யாரோ யாருக்கோ விடுக்கும் சவாலும் சமாளிப்புமே நம் மனதிலும் உடலிலும் சரசரவென புது ரத்தம் பாய்ச்சுகிறதே... இதுவே நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் சவாலாக இருந்தால் எப்படி இருக்கும்? அதைவிட, அந்த சவாலை சமாளித்து வெற்றிகொள்ளும்போது கிடைக்கும் பெருமையும் பூரிப்பும் எப்படி இருக்கும்? ஜஸ்ட் இமாஜின்!

நினைத்தாலே சிலிர்க்கிறது இல்லையா? அது... அது... அதுதான்... என்னால் முடியும்... என்னாலும் முடியும் என்ற அந்த தன்னம்பிக்கை வெற்றிக்களிப்பை நம் அவள் வாசகியர் ஒவ்வொருவர் முகத்திலும் கண்டு மகிழ வேண்டும் என்பதே நம் விருப்பம்.

கடந்த இரு இதழ்களில் இடம்பெற்ற அவள் சேலஞ்ச் அறிவிப்பை படித்த வாசகியர் போட்டி போட்டுக்கொண்டு பலவித சவால்விட காத்திருக்கிறீர்கள் என்பதை உங்களிட மிருந்து வந்து குவியும் கடிதங்களும் மெயில்களும் கூறுகின்றன. மகிழ்ச்சி!
இதில் சிலர், ’எனக்கும் ஏதேனும் சாதிக்க ஆசைதான். ஆனால், என்னால் எதுவும் செய்ய முடியாத சூழல்’ என இயலாமையை அனுப்பியிருக்கிறீர்கள். அவர்களுக்கும் ’அவள்’ சொல்வது இரண்டே வார்த்தைகள்தான்.

’உங்களால் முடியும்!’

உதாரணமாக... ’எவரெஸ்ட் ஏற ஆசைதான். ஆனால், அருகில் இருக்கும் மலைக்கோயில் படிகளில்கூட ஏறிய தில்லை’ என்பவர்கள், அந்தப் படிகளையே உங்களுக்கான களமாக தேர்ந்தெடுங்கள். 30 நாட்கள் தினமும் குறைந்தபட்சம் 108 படிகள் ஏறி இறங்க முயற்சியுங்கள். படிப்படியாக முன்னேறினாலும் பரவாயில்லை. முயற்சி, அதுதான் முக்கியம். அந்த சிறுவெற்றியும் பெரிய சாதனைதான்!  

ரொம்ப சிம்பிள் விஷயம்... முப்பது நாட்களும் முப்பது விதமான சமையல் என்பதே ஒரு காலத்தில் இயலாத செயலாகத்தான் இருந்தது. அதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்ட அவள் விகடன், அதையே தலைப்பாக வைத்து இணைப்புப் புத்தகம் கொடுக்க ஆரம்பித்தது. இதோ இன்றுவரை பல நூறு ‘30 வகை’ புத்தகங்களை பயனுள்ள வகையில் வெளியிட்டு வருகிறோமே...
 
எதுவும் அப்படித்தான்... முயற்சிக்காத வரை அது பூதம்... முயன்றபின் அதுவே தேவதை!

ஆகவே வாசகியரே... கவுன்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்... என்ன செய்யப்போகிறீர்கள் என்பதை எங்களுக்குச் சொல்லுங்கள்... உங்கள் சாதனையை உலகுக்கே எடுத்துச்சொல்ல நாங்கள் காத்திருக்கிறோம்!

அவள் சேலஞ்சில் பங்கெடுக்க இந்த கேட்டகரிகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் யோசித்திருக்கும் சாதனை இப்பட்டியலில் அடங்காவிட்டாலும் கவலை வேண்டாம். அவற்றையும் சிறப்பு சேலஞ்சாக கருதி பரிசீலிப்போம்.

இவை மட்டுமல்ல... வியக்க வைக்கும், அசாதாரணமான, அபாரமான எந்தவொரு சாகச சவாலையும் தகுந்த பயிற்சி மற்றும் பாதுகாப்புடன் நீங்கள் சந்திக்கலாம்!

சாதனைப் பெண் ஆகணுமா? சவாலைச் சந்தியுங்கள்!

ங்கள் சவால்களை அனுப்ப வேண்டிய முகவரி: அவள் சேலஞ்ச், அவள் விகடன், 757 அண்ணா சாலை, சென்னை - 600 002. email: aval@vikatan.com

அடுத்த கட்டுரைக்கு