லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

வாசகிகள் கைமணம்: பேரீச்சம்பழ அடையும், பாதாம் அல்வாவும்!

வாசகிகள் கைமணம்: பேரீச்சம்பழ அடையும், பாதாம் அல்வாவும்!
பிரீமியம் ஸ்டோரி
News
வாசகிகள் கைமணம்: பேரீச்சம்பழ அடையும், பாதாம் அல்வாவும்!

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 200

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து வழங்கியிருப்பவர் `சுவையரசி' சாந்தி விஜயகிருஷ்ணன்

பாதாம் - தேங்காய் அல்வா

வாசகிகள் கைமணம்: பேரீச்சம்பழ அடையும், பாதாம் அல்வாவும்!

தேவையானவை: பால் - 8 கப், ஊற வைத்த பாதாம் - 10, தேங்காய்த் துருவல் - ஒரு கப், குங்குமப்பூ - ஒரு சிட்டிகை, நெய் - 5 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, சர்க்கரை - 2 கப்.

செய்முறை: பாலை பாதியாகும் அளவுக்கு சுண்டக் காய்ச்சவும். அத்துடன் மையாக அரைத்த பாதாம், தேங்காய்த் துருவலை சேர்த்துக் கிளறவும். கெட்டியானதும் சர்க்கரை சேர்த்துக் கிளறி நெய் சேர்க்கவும். நன்கு கெட்டியானதும் ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்துக் கிளறி இறக்கவும்.

- லெக்ஷ்மி ஜெகநாதன், கன்னியாகுமரி

பேரீச்சம்பழ இனிப்பு அடை

வாசகிகள் கைமணம்: பேரீச்சம்பழ அடையும், பாதாம் அல்வாவும்!

உடலுக்கு இரும்புச்சத்து கொடுக்கவல்லது பேரீச்சம்பழம்.எலும்புகளை பலப்படுத்துவதுடன் ரத்தத்தில் நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கும். பேரீச்சம்பழம் சேர்த்து செய்யப்பட்ட வித்தியாசமான, சத்தான ரெசிப்பி இது...

தேவையானவை: விதையில்லா பேரீச்சம்பழத் துண்டுகள் - 200 கிராம், பச்சரிசி மாவு, ரவை, பாசிப்பருப்பு - தலா 50 கிராம், தேங்காய்த் துருவல் - ஒரு கப், முந்திரி - 25 கிராம், வெல்லம் - 250 கிராம், நெய் - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பாசிப்பருப்பை வெறும் வாணலியில் மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து நன்றாக ஊறவைத்து எடுத்து வைக்கவும். சிறிதளவு சூடான நெய்யில் முந்திரி, பேரீச்சம்பழத் துண்டுகள், தேங்காய்த் துருவலை தனித்தனியாக வறுத்து, வதக்கிக்கொள்ளவும். ரவையை லேசாக வறுத்து, சிறிதளவு நீர் ஊற்றி ஊறவைக்கவும். பிறகு, பொடித்த வெல்லத்தைக் கரைத்துக் கொதிக்கவைத்து இளம் பாகாக்கி வடிகட்டி அதில் அரிசி மாவு, வறுத்து ஊறவைத்த பாசிப்பருப்பு, ரவை, பேரீச்சம் பழத்துண்டுகள், தேங்காய்த் துருவல், நெய்யில் வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து அடை மாவு பக்குவத்தில் பக்குவமாக கலந்து வைத்துக் கொள்ளவும்.

தோசைக்கல்லை சூடாக்கி நெய் விட்டு பதமாக கலந்து வைத்துள்ள அடைக்கலவையை  ஊற்றி, அடைகளாக சுட்டெடுத்து சூடாக பரிமாறவும்.

- எம்.பானுமதி, திருச்சி - 8

பனீர் - தேங்காய் சட்னி

வாசகிகள் கைமணம்: பேரீச்சம்பழ அடையும், பாதாம் அல்வாவும்!

தேவையானவை: தேங்காய் - கால் பாகம் (துருவியது), பச்சை மிளகாய் - 2, இஞ்சி - சிறு துண்டு, உப்பு - தேவைக்கேற்ப, சர்க்கரை - ஒரு பெரிய சிட்டிகை, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், புதினா - சிறிது, காட்டேஜ் பனீர் - 2 டீஸ்பூன்.
செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள எல்லா வற்றையும் சேர்த்து (எலுமிச்சைச் சாறு தவிர) மிக்ஸியில் போட்டு அரைக்கவும். பிறகு எலுமிச்சைச் சாற்றை கலந்து பரிமாறவும். இட்லி, தோசைக்கு இது நல்ல காம்பினேஷன்.

- ஆர்.வனஜா, போளூர்