லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

இந்த உலகத்துலயே ரொம்ப அழகான உடை சேலைதான்!

இந்த உலகத்துலயே ரொம்ப அழகான உடை சேலைதான்!
பிரீமியம் ஸ்டோரி
News
இந்த உலகத்துலயே ரொம்ப அழகான உடை சேலைதான்!

ஆண்கள் தினம் - சேலை மனிதர்அதிதி

இந்த உலகத்துலயே ரொம்ப அழகான உடை சேலைதான்!

டெல்லியை சேர்ந்த ஹிமான்ஷுவர்மா என்பவரின் அடையாளமே `Saree Man of India' என்கிற பட்டம்தான். திருநங்கைகள் பெண் உடையில் வலம் வருவதில் ஆச்சர்யமில்லை. தினம் தினம் சேலை கட்டிக்கொள்கிற ஹிமான்ஷு வருவதுதான் ஆச்சர்யம். கூடவே, ‘ஆம்பிளை’ என்றே தன்னை அறிவிக்கிறார் அழுத்தமாக.

‘`இந்த உலகத்துலயே ரொம்ப அழகான உடைன்னா, அது சேலைதான். சேலை கட்டற விதத்துலயும் சரி, சேலைகளோட டிசைன்கள்லயும் சரி, எத்தனை வெரைட்டி... அதை வேற எதுலயும் பார்க்க முடியாது. உங்க தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதாவோட அம்மா, ஜெயலலிதாவை கைக்குழந்தையா இருந்தபோதே ஷூட்டிங் கூட்டிட்டுப் போவாங்களாம். பிரேக் டைம்ல குழந்தையை தன்னோட சேலைக்குள்ள வெச்சுக் கட்டி அணைச்சுப்பாங்களாம். அம்மாவோட சேலையும் அந்த வாசனையும் எல்லாக் குழந்தைங்களுக்குமே ஸ்பெஷல் இல்லையா? அம்மாவோட சேலைகள் ஒவ்வொண்ணுலயும் அன்பின் வாசனை தூக்கலா இருக்கும்...’’ - சேலை கட்டும் பெண்ணின் வாசம் பற்றிப் பேசுகிற ஹிமான்ஷு, டெல்லியைச் சேர்ந்த கலை ஆர்வலர். 

``நான் நடத்தற ஆர்ட் ஆர்கனைசேஷன் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்ச்சி... சும்மா ட்ரை பண்ணிப் பார்க்கலாமேனு சேலை கட்டிக்கிட்டேன். எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. முதல் முறை சேலை கட்டினப்ப பலவிதமான விமர்சனங்களை எதிர்கொண்டேன். ஆனா, அடுத்தவங்க என்ன நினைக்கிறாங்கன்றதை நான் என்னைக்குமே ஒரு பொருட்டா எடுத்துக்கிட்டதில்லை. எனக்குப் பிடிச்சிருக்கு... செய்யறேன்... அவ்வளவுதான்! 2005-ல ஆரம்பிச்ச சேலை கட்டற பழக்கம், இப்போ வரைக்கும் தொடர்ந்திட்டிருக்கு’’ என்கிற ஹிமான்ஷு, சேலைகளைப் பற்றி பி.ஹெச்.டி-யே செய்தவர் ரேஞ்சுக்கு தகவல்களை அள்ளி வீசுகிறார்!

இந்த உலகத்துலயே ரொம்ப அழகான உடை சேலைதான்!

சேலைப் பாரம்பர்யத்தைப் பிரபலப்படுத்துவதில் தீவிரமாக இருக்கும் ஹிமான்ஷுவின் இன்னொரு முயற்சி சேலைத் திருவிழா. ஒவ்வொரு வருடமும் ஒரு மாநிலத்தில் இதை நடத்துகிற ஹிமான்ஷு, இந்த வருடம் சென்னையில் நடத்தி கவனம் ஈர்த்தார்.

``சேலைங்கிறது பெண்களுக்கு மட்டுமானது இல்லைங்கிறதைப் பிரகடனப்படுத்தறதுதான் இந்தத் திருவிழாவோட முக்கிய நோக்கம். சேலையை வெறும் உடையா பார்க்காம, அதை ஓவியம், நடனம், இலக்கியம்னு கலைகளோட தொடர்புப்படுத்தற ஒரு நிகழ்ச்சியாகவும் இதைச் செய்யறோம். பல மாநிலங்களைச் சேர்ந்த சேலை வடிவமைப்பாளர்களும் நெசவாளர்களும் இதுல கலந்துப்பாங்க. விதம்விதமா சேலை உடுத்தறது எப்படிங்கிற வகுப்புகளும் நடக்கும்...’’ - சேலைத் திருவிழா பற்றிப் பேசுபவரிடம், கைத்தறி சேலை முதல் டிசைனர் சேலை வரை ஏகப்பட்ட கலெக் ஷன் உண்டு. ஒவ்வொரு சேலைக்கும் மேட்ச்சிங்கான ஷர்ட், பெல்ட் என அது தனி கலெக்‌ஷன்!

ஹிமான்ஷு எப்போதாவதுதான் வேட்டிக்கும் பைஜாமாவுக்கும் மாறுவாராம். இவரது வார்ட்ரோபில் ஜீன்ஸுக்கு தடா!

``சேலை உடுத்தறதுக்குனு நாளும் காரணமும் தேவையா என்ன? சேலை உடுத்தறதே ஒரு ஸ்பெஷல் கொண்டாட்டம்தானே...’’ என்கிறார் இந்தப் புடவைக்காரன்!