பேஸிக் மேக்கப் முதல் பிரைடல் மேக்கப் வரை! - 3

‘கல்லூரிப் பெண்களுக்கான தினசரி மேக்கப்'

ன்ன வாசகிகளே... சென்ற இதழில் பேஸிக் மேக்கப் செய்வது எப்படி என விளக்கமாக பார்த்தும் படித்தும் இருப்பீர்கள். `சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்' எனும் பழமொழிக்கு ஏற்ப ஒரு விஷயத்தைக் கற்பதோட நிறுத்திவிடாமல் பழகிப் பார்க்கும்போதுதான் நிறைவடையும்.

அதனால், நீங்களே உங்களுக்கு அல்லது உங்கள் வீட்டுப் பெண்கள், பக்கத்து வீட்டுப் பெண்கள் என தினசரி ஒருவருக்கு பேஸிக் மேக்கப்பை செய்து செய்து பாருங்கள். பழகப் பழகத்தான் ஒரு விஷயம் பிடிபடும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சரி, இந்த இதழில் கல்லூரிக்குச் செல்லும் பட்டாம்பூச்சிகளுக்கான மேக்கப் பற்றி பார்ப்போம்.

பேஸிக் மேக்கப் முதல் பிரைடல் மேக்கப் வரை! - 3
பேஸிக் மேக்கப் முதல் பிரைடல் மேக்கப் வரை! - 3

எக்ஸ்ட்ரா டிப்ஸ்...

பேஸிக் மேக்கப் முதல் பிரைடல் மேக்கப் வரை! - 3

1. ஐ லைனரை சாதாரணமாக கண்  இமைகளின் மேற்பகுதி இமை முடிகளையொட்டி வரைவதுபோன்று இன்னும் நான்கு ஐந்து அடுக்குகள் கூடுதல்  திக்காக வரைந்துகொள்ளவும்.

2. மேல் இமையின் வெளிப்பகுதி முடிவில் அம்பு போல் கூர்மையாக இழுத்துவிடவும். இதன் பெயர் 'விங்டு ஐ லைனர்'.

3. மேல் இமையின் மேற்பகுதியில் திக்காகவும், மேல் இமையின் வெளிப்பகுதி முடிவில் கூர்மையாகவும் இழுத்துவிடவும். பிறகு ,கீழ் இமையின் கீழ்ப்பகுதி முடிகளையொட்டி மெல்லிய கோடு வரைந்து கீழ் இமையின் முடிவில் அம்புபோல கூர்மையாக இழுத்துவிடவும்.

4. விழியின் வெளிப்பகுதி ஓரங்களில் இரட்டைவால் போல அழகாகவும் வித்தியாச மாகவும் இருக்கும் இதன் பெயர் `டபுள் விங்டு ஐ லைனர்'

மூன்று வகை சருமத்தினருக்கான ஃபவுண்டேஷன் மற்றும் காம்பாக்ட் பவுடர்.

பேஸிக் மேக்கப் முதல் பிரைடல் மேக்கப் வரை! - 3

F -  ஃபேர் ஸ்கின் காம்ப்ளெக்‌ஷன்

M -  மீடியம் ஸ்கின் காம்ப்ளெக்‌ஷன்

D -  டார்க் ஸ்கின் காம்ப்ளெக்‌ஷன்

எக்ஸ்பர்ட் டிப்ஸ்...

பேஸிக் மேக்கப் முதல் பிரைடல் மேக்கப் வரை! - 3கேள்வி : என்னோட உதடுகள் மிகவும் வறண்டும் அதிக வரிகளுடன் உள்ளன. அதை மறைக்கும் விதம் லிப்ஸ்டிக்போடுவது எப்படி?

பதில் : சீதோஷ்ண மாற்றத்தால் உங்கள் உதடுகள் வறண்டுபோகலாம். இதற்கு அரை ஸ்பூன் சர்க்கரையில் அதைக் குழைப்பதற்கு தேவையான தேன் அல்லது நெய்விட்டு கலந்து, பேபி டூத் பிரஷ்ஷினால் தொட்டு, உதடு முழுவதும் மெதுவாக தேய்க்கவும். இது உதடுகளை மென்மையாக்கும். பிறகு , தினசரி உதடுகளுக்கு லிப் பாம் உபயோகிக்கவும். இது உதடுகளை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருக்கும்.

கேள்வி :  எனது உதடுகள் கருமையாக உள்ளதால், லைட் கலர் லிப்ஸ்டிக்கை போட்டால், நிறம் தெரிவதில்லை. இதற்கு என்ன தீர்வு?

பதில் : கருமையான உதடுகளின் மீது சிறிதளவு ஃபவுண்டேஷன் அப்ளை செய்துவிட்டு அதன்மேல் லிப்ஸ்டிக் உபயோகித்தால், நீங்கள் உபயோகிக்கும் லிப்ஸ்டிக்கின் நிறம் அப்படியே இருக்கும்.

கேள்வி :  உதடுகளில் லிப்ஸ்டிக் அதிக நேரம் நீடித்து  இருக்க டிப்ஸ் ப்ளீஸ்...

பதில் : உதடுகளுக்கு லிப்ஸ்டிக் போட்டுவிட்டு அதன்மீது மெல்லிய டிஷ்யூ பேப்பரை வைத்து, அதன் மேல் சிறிது காம்பாக்ட் பவுடரை பிரஷ்ஷினால் அப்ளை செய்யவும். பிறகு டிஷ்யூ பேப்பரை எடுத்துவிட்டு, மறுபடியும் உதடுகளுக்கு லிப்ஸ்டிக் போடவும். அல்லது உதடுகளில் லிப் பாம் தடவிவிட்டு, அதன் மேல் லாங் லாஸ்டிங் லிப்ஸ்டிக் (காஸ்மெடிக் கடைகளில் கிடைக்கிறது.) அப்ளை செய்யவும். இதனால் நீண்ட நேரம் லிப்ஸ்டிக் கலையாமல் இருக்கும்.

குறிப்பு: கேள்விகளை aval@vikatan.com என்ற மெயில் ஐடி அல்லது அவள்விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கு அனுப்பவும்.

உதவி: நேச்சுரல்ஸ்

மாடல்: பிரதீபா

பேஸிக் மேக்கப் முதல் பிரைடல் மேக்கப் வரை! - 3

ந்த இதழில் வெளிவந்திருக்கும் `பேஸிக் மேக்கப்'  பகுதியை வீடியோவாக http://bitly.com/avalmakeup2 - ல் காணலாம் அல்லது இந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்யுங்கள்.