லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

உடலை உறுதி செய்யும் சிறுதானியம்!

உடலை உறுதி செய்யும் சிறுதானியம்!
பிரீமியம் ஸ்டோரி
News
உடலை உறுதி செய்யும் சிறுதானியம்!

உணவே மருந்துச.மோகனப்பிரியா

உடலை உறுதி செய்யும் சிறுதானியம்!
உடலை உறுதி செய்யும் சிறுதானியம்!

பெரும்பாலும் ஒருவரது ஆயுளின் முதல் பாதியானது உடல் நலத்தை அலட்சியம் செய்து பணம் சம்பாதிப் பதிலேயே கழிகிறது. மீதி பாதியிலோ, கெட்டுப்போன உடல்நலத்தைச் சீராக்குவதற்காக சம்பாதித்த பணத்தை செலவு செய்ய வேண்டியிருக்கிறது. அந்த நிலைமை வராமல் இருக்க வேண்டுமா? வழி இருக்கிறது! உடலை உறுதியாக்கும் சிறுதானிய உணவுகள் உங்களுக்கு உதவும்!

சிறுதானிய உணவுப் பழக்கம் குறித்தும், சிறுதானியங்களில் இருந்து கிடைக்கும் ஊட்டச்சத்துகள் மற்றும் அவற்றின் பலன்கள் பற்றியும் பட்டியலிடுகிறார், உணவியல் நிபுணர் மற்றும் சித்த மருத்துவ ஆலோசகர் உலகநாதன்.

குதிரைவாலி

உடலை உறுதி செய்யும் சிறுதானியம்!

குதிரைவாலியில் நார்ச் சத்து நிறைவாக உள்ளதால், மலச்சிக்கலை சரியாக்கும். நார்ச்சத்துடன் புரதச்சத்தும் நிறைந்தது. வளரும் குழந்தை கள், விளையாட்டு வீரர்களுக்கு ஏற்றது. கால்சியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட தாது உப்புகள் இருப்பதால், எலும்புகளைப் பலப்படுத்தும். குதிரைவாலி முருங்கை தோசையை காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம். நீரிழிவு, ரத்த சோகை, வாய்ப்புண், குடல் புண், இருமல், சளியில் இருந்து நிவாரணம் அளிக்கும் மிகச் சிறந்த உணவு இது.

பனிவரகு

உடலை உறுதி செய்யும் சிறுதானியம்!

து புரதம், கொழுப்புச்சத்து, நார்ச்சத்து ஆகியவை நிறைந்தது. நரம்பு மண்டலத்தை பலப்படுத்தி, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக்கக்கூடியது.

பனிவரகை முளைகட்டிய பயறுகளுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், சருமத்தை மினுமினுக்க செய்யும். நரை, மூப்பை தள்ளிப்போடும். எலும்புகளை அடர்த்தியாக்கும். இதயத்தைப் பாதுகாக்கும். நீரிழிவை கட்டுப்படுத்தும். கல்லீரல் கற்களைக் கரைக்கும்... கற்கள் உருவாகாமல் தடுக்கும். மரபணு குறைபாடுகளைப் போக்கும். மாதவிடாய் பிரச்னைகளைப் போக்கும். குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு நல்லது. கர்ப்பிணிகளுக்கு ஏற்றது. பனிவரகு உணவு வகைகளை வயதானவர்கள் எடுத்துக்கொள்வதால் ஞாபகமறதி நீங்கும்.

பனிவரகு அரிசியில் முறுக்கு, சீடை, அதிரசம் போன்ற பலகாரங்கள் செய்யலாம். உப்புமாவாகவும் செய்து சாப்பிடலாம்.

சோளம்

உடலை உறுதி செய்யும் சிறுதானியம்!

சோளம் என்றால் பலர் மக்காச் சோளம் என்றே நினைத்துக் கொள்கின்றனர். சோளம் வேறு, மக்காச்சோளம் வேறு. நமது பாரம் பர்ய சோளம் என்பது வெள்ளையாக, சிறிதாக இருக்கும்.

சோள மாவு, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை அல்லது முடக்கத்தான் கீரை சேர்த்துச் செய்யப்படும் சோள மிளகு தோசையில் புரதம், இரும்பு, கால்சியம் சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன.

சோளம் உடலை உறுதியாக்கும். பருமனைக் குறைக்கும். சோள  உணவுகளைச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண்கள் ஆறும். வாய் துர்நாற்றம் நீங்கும்.

சோளப் புட்டு, சோள தோசையை காலை உணவாக உட்கொள்ளலாம்.

உடலை உறுதி செய்யும் சிறுதானியம்!

கேழ்வரகு

வி
ட்டமின்கள், தாது உப்புகள் நிறைந்தது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடல் வெப்பத்தைத் தணிக்கும் ஆற்றல் கொண்டது. வெயில்காலத்தில் கேழ்வரகு கூழ் குடிக்கலாம். கேழ்வரகு, வெந்தயம் சேர்த்து இட்லி செய்யலாம். நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் கேழ்வரகை திட வடிவில் சமைத்துச் சாப்பிடுவது நல்லது. கால்சியம் சத்து நிறைந்து உள்ளது. பசியை குறைக்கும் ஆற்றல் கொண்டது; குடல் புண்களை ஆற்றும். பருமனாக இருப்பவர்களுக்கும் கேழ்வரகு நல்லது.

கேழ்வரகை கஞ்சி, கூழ், தோசை, இடியாப்பம், சேமியா எனப் பலவிதமாகச் சாப்பிடலாம்.

சாமை

உடலை உறுதி செய்யும் சிறுதானியம்!

சாமையில் இரும்புச்சத்தும் கொழுப்புச்சத்தும் நிறைந்துள்ளன. வயிற்றுப்புண்களை ஆற்றும்; மலச்சிக்கல் பிரச்னைகளைப் போக்கும். பருமனானவர்கள் சாமை அரிசி உணவுகளைக் குறைந்த அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

வயதானவர்கள் ஊட்டச்சத்து மிக்க சாமை அரிசி உணவுகளைக் காலை உணவாக எடுக்கலாம். சாமை அரிசியில் காய்கறிகள் சேர்த்து பிரியாணி செய்யலாம்.

வரகு

உடலை உறுதி செய்யும் சிறுதானியம்!

ரகரிசி, நார்ச்சத்து நிறைந்தது. மலச்சிக்கலைப் போக்கும். எடை  குறைக்கும். வரகரிசியை கஞ்சி, பொங்கலாகச் செய்து காலை உணவாகச் சாப்பிடலாம். கல்லீரலின் வளர்சிதை மாற்றத்தையும் சீராக்கும். பல்வேறு நோய்கள் வருவதைக் கட்டுப்படுத்தும். இதை, நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் எடுத்துக்கொள்வது நல்லது. வரகு வெந்தய தோசை மற்றும் வரகு அரிசியை லட்டு செய்து உண்பதால் மூட்டுவலி சரியாகும். மாதவிடாய்க் கோளாறுகளை சரிசெய்யும். வரகரிசியால் செய்யப்படும் உணவுகளை சாப்பிட்டு வந்தால் மந்தப் பிரச்னை வராது.

கம்பு

உடலை உறுதி செய்யும் சிறுதானியம்!

சிறுதானியங்கள், முழுதானியங்கள் என தானிய வகைகளில் மிக அதிக அளவு இரும்புச்சத்து கொண்டது கம்பு. இது ரத்தசோகையைப் போக்கும். பசி தூண்டும். மலச்சிக்கலை நீக்கும். கம்பு சோறு சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புண், குடல் புண், வாய்புண் ஆகியவை குணமாகும். கம்பங்களியுடன் மோர் சேர்த்து சாப்பிட, கொழுப்பைக் குறைக்கும். இருமல், இரைப்பு நோய் உள்ளவர்கள், கம்பங்கஞ்சியைக் குறைவாக அருந்த வேண்டும். முளைகட்டிய கம்பாக எடுத்துக்கொள்ளலாம்.

தினை

உடலை உறுதி செய்யும் சிறுதானியம்!

தினையில் உள்ள மாவுச்சத்து, குழந்தைகள் மற்றும் அதிக உடல் உழைப்பு கொண்டவர்களுக்கு தேவையான ஆற்றலை அளிக்கிறது. தினையில் புரதச்சத்து அதிகம் உள்ளதால், உடற்பயிற்சி செய்பவர்களுக்கு ஏற்ற உணவு.

தினையை ஊறவைத்து, வேகவைத்து, அதனுடன் தேன் ஊற்றிச் சாப்பிட்டால், நிறைய ஊட்டச்சத்துகள் கிடைக்கும். தினை மாவுடன் கருப்பட்டி, வெல்லம் சேர்த்து பணியாரம் செய்யலாம். தினைப்பாயசம், தினை பருத்திப்பால், தினை இடியாப்பம் போன்ற இனிப்பு வகையாகவும் சாப்பிடலாம்.