லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

நிலைத்து நிற்க ஆர்வமும் உழைப்பும்தான் வேணும்!

நிலைத்து நிற்க ஆர்வமும் உழைப்பும்தான் வேணும்!
பிரீமியம் ஸ்டோரி
News
நிலைத்து நிற்க ஆர்வமும் உழைப்பும்தான் வேணும்!

சந்திப்புஆர்.வைதேகி, படங்கள்: பா.காளிமுத்து

நிலைத்து நிற்க ஆர்வமும் உழைப்பும்தான் வேணும்!

தொடர்ந்து பத்து வருடங்களாக தமிழகத்துக்குப் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த திருஷ்காமினி. பெண்கள் அரிதாக ஈடுபடுகிற கிரிக்கெட்டில், கவனம் ஈர்க்கிற சாதனையாளர். விளையாட்டாக ஆரம்பித்த ஆர்வம்தான் இன்று திருஷ்காமினிக்கு வாழ்க்கையாகவும் மாறியிருக்கிறது.

டெஸ்ட் மேட்ச்சுகளில் ஓப்பனராக அதிக ஸ்கோர் எடுத்தவர், உலகக் கோப்பையில் சதம் அடித்த முதல் இந்தியப் பெண், `பிசிசிஐ விருது'களை 3 முறை பெற்ற ஒரே பெண் என  ஏகப்பட்ட பெருமைகளுக்குச் சொந்தக்காரரான திருஷ்காமினியை சந்தித்துப் பேசினார்கள் அவள் வாசகிகளான சென்னை எம்.ஜி.ஆர்.ஜானகி கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரி மாணவிகள்.

அஷ்வினி

 நீங்க எப்படி கிரிக்கெட்டுக்குள்ள வந்தீங்க?


‘`எங்கப்பா திக்கேஷ்வா ஷங்கர், ஹாக்கி பிளேயர். அவர் நிறைய மேட்ச் பார்ப்பார். அவர்கூட சேர்ந்து எனக்கும் கிரிக்கெட் பார்க்கிற ஆர்வம் வந்தது. காலையில எழுந்து முதல் வேலையா ஸ்கோர் என்னனு கேட்பேன். அந்த ஆர்வம் தெருவுல இறங்கி பசங்களோட கிரிக்கெட் விளையாடற அளவுக்கு வளர்ந்தது. என்னோட ஆர்வத்தைப் பார்த்துட்டு அப்பா ரொம்பவே என்கரேஜ் பண்ணினார்.

10 வயசுல டோர்னமென்ட்டுல விளையாட ஆரம்பிச்சேன். 2006-ல ஜெய்ப்பூர்ல நடந்த ஏஷியா கப்-தான் எனக்கு முதல் புரொஃபஷனல் மேட்ச். (பிசிசிஐ ஜூனியர் கிரிக்கெட்டர் ஆஃப் த இயர் அவார்டு-2007-08், பிசிசிஐ பெஸ்ட் சீனியர் விமன்ஸ் கிரிக்கெட்டர் அவார்டு-2009-10...  இந்த இரு விருதுகளும் பெற்ற ஒரே லேடி கிரிக்கெட்டர் காமினிதான்!)

வனிதா


 ஹாபியா விளையாடின வரைக்கும் ஓ.கே... புரொஃபஷனலா விளையாடப் போறேன்னு சொன்னப்ப உங்க வீட்ல எப்படி ரியாக்ட் பண்ணினாங்க?

‘`அந்த விஷயத்துல நான் ரொம்ப அதிர்ஷ்ட சாலினுதான் சொல்லணும். அம்மா, அப்பா ரெண்டு பேருக்கும் பெரிய மனசு. சொந்தக்காரங்க, ஃப்ரெண்ட்ஸ்னு எல்லாரும் `பொம்பளைப் பிள்ளைக்கு எதுக்கு இதெல்லாம்?'னு கேட்டாங்க. ஆனா, அம்மாவும் அப்பாவும் என்னை நம்பினாங்க. கிரிக்கெட்டுக் காக படிப்பை விட்டுடக் கூடாதுங்கிற கண்டிஷனை மட்டும் சொன்னாங்க. ஸ்கூல், காலேஜ்லயும் எனக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணினாங்க. ஸ்பெஷல் கிளாஸ் எல்லாம் எடுத்து, படிப்பு, ஸ்போர்ட்ஸ்னு ரெண்டையும் பேலன்ஸ் பண்ண ஹெல்ப் பண்ணினாங்க.’’

நிலைத்து நிற்க ஆர்வமும் உழைப்பும்தான் வேணும்!

ஷாலினி

 உலகம் முழுக்க கிரிக்கெட் பிரியர்கள் இருக்காங்க. ஆனா, பசங்க கிரிக்கெட் பிரபலமான அளவுக்கு பெண்கள் கிரிக்கெட் பேசப்படாதது ஏன்..?


‘`ரசிகர்கள் எண்ணிக்கை லேருந்து எல்லாமே பசங் களுக்கு அதிகம்தான். என்னைக் கேட்டா, பிசிசிஐ-யோட இணைஞ்ச பிறகு பெண்கள் கிரிக்கெட்டும் வெளியில தெரிய ஆரம்பிச்சிருக்குனுதான் சொல்லுவேன். முன்னல் லாம் பொண்ணுங்க விளை யாடணும்னா நல்ல கிரவுண்ட் கிடைக்காது... நல்ல கோச் அமைய மாட்டாங்க... இப்ப எல்லாமே மாறியிருக்கு.

லேடி கிரிக்கெட்டர்ஸுக்கு பிசிசிஐ கான்ட்ராக்ட் முறையை அறிமுகப்படுத்தியிருக்கு. அதுல ஏ, பி... இப்படி ரெண்டு கிரேடு வெச்சிருக்காங்க. ஏ கிரேடுல பர்ஃபார்மன்ஸ் அடிப்படையில பிளேயர்ஸை செலக்ட் பண்ணுவாங்க. நான் ஏ கிரேடுல டாப் 4 பிளேயர்ஸ்ல  இருக்கேன்.’’

நந்தினி

 ‘இறுதிச் சுற்று’ படம் பார்த்தீங்களா...? அதுல வர்ற மாதிரி நிஜத்துலயும் ஸ்போர்ட்ஸ்ல இருக்கிற பொண்ணுங்களுக்குப் பிரச்னைகள் இருக்கா?


‘`ஸ்போர்ட்ஸ்ல மட்டும்தான் இந்தப் பிரச்னை இருக்குனு சொல்ல முடியாது. எல்லா துறைகள்லயும் இருக்கு. நான் ரொம்ப சின்னவளா இருந்தப்ப, அகாடமியில விளையாடினபோது கோச் மூலமா பிரச்னைகளை சந்திச்சிருக்கேன். அதை வீட்ல சொன்னா, என்னை விளையாட வேணாம்னு சொல்லிடுவாங்களோங்கிற பயத்துல நான் அதைச் சொல்லலை. இப்ப யோசிச்சுப் பார்த்தா நான் வீட்ல சொல்லியிருந்தா, அந்தப் பிரச்னை ரொம்ப ஈஸியா சரியாகியிருக்கும்னு தோணுது. அதனால யாராவது இந்த மாதிரிப் பிரச்னைகளை எதிர்கொண்டாங்கன்னா, உடனே அதை வெளியில சொல்லித் தீர்வு தேடறதுதான் சரிங்கிறது என்னோட அட்வைஸ்.’’

தனலட்சுமி

 என்னதான் சொன்னாலும், பொண்ணுங் களுக்கு ஸ்போர்ட்ஸ் உள்பட எல்லா ஈடுபாடுகளும் கல்யாணம் வரைக்கும்தானே சாத்தியமாகுது..?


‘`அப்படி சொல்ல முடியாது. உடல்ரீதியா பெண்கள் சில மாற்றங்களை சந்திச்சுதான் ஆகணும். கல்யாணம், குழந்தைனு எல்லாத்துக்கும் தயாரா இருக்கணும். அது எதுவும் பெண்ணோட ஆர்வத்துக்கோ, திறமைக்கோ தடை இல்லை. நம்ம கண்ணுக்கு முன்னாடியே மேரி கோம், சானியா மிர்ஸா மாதிரி பலர் வாழும் உதாரணங்களா இருக்கிறாங்களே... ஆர்வமும் உழைப்பும்தான் இங்க நிலைச்சு நிக்கறதுக்கான தகுதிகள்!’’

தீபா

 அடுத்து என்ன திட்டங்கள்?

‘`தமிழ்நாட்டுல அதிகம் அறியப்படாத பகுதிகள்ல கிரிக்கெட்ல நிறைய திறமை சாலிகள் இருக்காங்க. எனக்குக் கிடைச்ச மாதிரி வாய்ப்புகள் அவங்களுக்கும் கிடைக்கணும். அதுக்கு அவங்களைத் தயார்படுத்தற மாதிரி ஒரு ஏதாவது ஒரு முயற்சியை ஆரம்பிக்கணும். அப்புறம் என்னால கிரிக்கெட்டை தவிர வேற எதைப் பத்தியும் யோசிக்க முடியாது. அதனால கடைசி வரைக்கும் விளையாடி, இந்தியாவுக்கு பெருமை சேர்த்துக் கொடுக்கணும்!’’