லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

ஷேரிங் நல்லது! - குக்கிங் வித் மில்லட்ஸ்

ஷேரிங் நல்லது!  - குக்கிங் வித் மில்லட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேரிங் நல்லது! - குக்கிங் வித் மில்லட்ஸ்

க.பாலாஜி

முதல் ஃ வரை அத்தனைக்கும் இடம் அளிக்கிற ஃபேஸ்புக், சிறுதானியங்களுக்கும் சிறப்பு சேர்க்கிறது. சிறுதானியங்களைப் பயன்படுத்தி செய்ய முடிகிற உணவு வகைகள் பற்றிப் பகிர்ந்துகொள்ளும் வகையில் முகப்புத்தகத்தில் ‘Cooking with Millets’ பக்கம் இயங்கிவருகிறது.

“சிறுதானிய விவசாயிகளை ஊக்குவிப்பதோடு, அவர்கள் உற்பத்தி செய்யும் சிறுதானியங்களை நியாயமான விலைக்கு விற்பனை செய்வதற்காகவும் முயற்சி எடுத்தோம். அப்போதுதான் இந்தப் பக்கத்தைத்  தொடங்கினோம்'' என்கிற ஆதித்யாவே இம்முயற்சிக்கு விதை போட்டவர். இப்போது பெங்களூரில் `Kauliget Foods' என்ற கடையை நடத்திவருகிறார்.

ஷேரிங் நல்லது!  - குக்கிங் வித் மில்லட்ஸ்

`குக்கிங் வித் மில்லட்' பக்கத்தின் அட்மின்களில் ஒருவரான சுதாவிடம் பேசினோம். ``இப்போ எல்லோருமே நாகரிக உணவுகளைத் தேடித் தேடி சாப்பிடுகிறோம். நம் பாரம்பர்ய  ஆரோக்கிய உணவு வகைகளைக் கிட்டத்தட்ட மறந்தே போய்விட்டோம்.  அதனால், இந்தப் பக்கத்தில் சாமை, கேழ்வரகு, தினை, சோளம், கைக்குத்தல் அரிசி என சிறுதானியங்களால் சமைக்கப்படும் உணவு வகைகளைப் பற்றி நிறைய தகவல்களைப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தோம். எதிர்பாராத அளவுக்கு ஆதரவு அதிகமானது.

இப்போது எங்கள் பக்கத்தில் 2 ஆயிரத்து 500 பேர் இணைந்திருக்கிறார்கள். இதில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் இணைந்திருப்பது ஆச்சர்யம்.  சிறுதானிய உணவுகள் எடையை குறைக்க, நீரிழிவைக் கட்டுப்படுத்த என பலவிதங்களில் பயன்படுகின்றன. `குழந்தைகள் இந்த உணவு வகைகளைச் சாப்பிட அடம்பிடிப்பார்கள், அதனால் சமைப்பதில்லை' என்று நிறைய பேர் சொல்கிறார்கள். ஆனால், குழந்தை களுக்குப் பிடித்த மாதிரி பிஸ்கட், குக்கீஸ் போல செய்து கொடுத்தால் நிச்சயம் விரும்பிச் சாப்பிடுவார்கள். சிறுதானிய உணவுகளின் பயன்கள், அலங்கரிப்பது குறித்த தகவல்களையும்கூட எங்களது பக்கத்தில் ஷேர் செய்கிறோம்” என்கிறார்.

ஆகவே மக்களே... ஷேரிங்  நல்லது!