Published:Updated:

என் பாடமும் பந்தமும் - வாழ்வை மாற்றிய புத்தகம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
என் பாடமும் பந்தமும்  - வாழ்வை மாற்றிய புத்தகம்
என் பாடமும் பந்தமும் - வாழ்வை மாற்றிய புத்தகம்

ஆர்.வைதேகி

பிரீமியம் ஸ்டோரி
என் பாடமும் பந்தமும்  - வாழ்வை மாற்றிய புத்தகம்

‘`பள்ளிக்கூடத்தில் சக மாணவிகள் திருக்குறளை மனப்பாடம் செய்வதை கடமையாகவும் சிரமமாகவும் பார்ப்பார்கள். எனக்கோ திருக்குறள் படிப்பதும், அதை மனப்பாடம் செய்வதும் மிகவும் பிடித்த செயலாக இருக்கும். பள்ளியில் விருப்பப்பாடமாக இருந்த திருக்குறள், பிறகு பிடித்தமான வாழ்க்கைப் பாடமாகவும் மாறியது. சன் டி.வி-யில் சேர்ந்த புதிது... யார் என்ன சொன்னாலும் கருத்து சொல்கிற முதல் நபர் நானாகத்தான் இருந்தேன். ஒரு கட்டத்தில் நான் சொல்கிற கருத்துகளே எனக்குப் பிரச்னைகளாக வந்து நின்றபோதுதான் ‘துறவு’ அதிகாரத்தின் முதல் குறளான

‘யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்'


படித்தேன். அதாவது ஒருவர் எந்தெந்தப் பொருள்களில் இருந்து பற்று நீங்கியவராக இருக்கிறாரோ, அந்தந்தப் பொருள்களால் அவருக்குப் பிரச்னைகள் வருவதில்லை என்பதே இந்தக் குறளின் அர்த்தம். அன்றுமுதல் தேவையற்ற விஷயங்களில் இருந்து விலகி இருக்கப் பழகினேன்.

எனக்கு ஐந்து நாத்தனார்கள். திருமணமான இத்தனை வருடங்களில் ஒருவருடன்கூட எனக்கு மனஸ்தாபம் வந்ததில்லை. யார் சொல்வதையும் யாரிடமும் பகிர்ந்துகொள்ளமாட்டேன். சில நேரம் என் கணவரிடம்கூட எதையாவது சொல்லத் தோன்றும். அப்போதெல்லாம் திருக்குறள் ஞாபகத்துக்கு வந்து அமைதியாகிவிடுவேன்.

‘எண்ணித்துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு...’


ஒரு காரியத்தில் இறங்குவதற்கு முன் பல விஷயங் களையும் ஆராய்ந்து, அலசி முடிவெடுக்க வேண்டும். அப்படி ஆராய்ந்து அந்தக் காரியத்தில் இறங்கிய பின், அதைப் பற்றி யோசிப்பது தவறு என்கிற குறளே என்னை ஒரு பிசினஸ் உமனாக்கியது.

என் நினைவில் இருந்து நீங்காத ஒரு விஷயம் என் நட்புகள். 

‘முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு’


இனிமையான முகம் காட்டுவதைவிட, உள்ளார்ந்த அன்பைக் காட்டுவதுதான் சிறந்தது என்பதை 32 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் நான் நினைவின்றி இருந்தபோது தன் பிரார்த்தனைகளால் என்னை மீட்டெடுத்த என் 25 வருட கால நட்புகள் உணர்த்தினார்கள்.

திருக்குறளுக்கும் எனக்குமான இந்த பந்தம் சாதாரண மானதல்ல. முதன் முதலில் குழந்தைகளுக்கான சி.டி வெளியிட்டதும் திருக் குறளை வைத்துதான். மறு படியும் ஏதேனும் செய்ய நினைத்தாலும் என் முயற்சி கள் திருக்குறளில் இருந்தே தொடங்கும்...’’
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு