Published:Updated:

மனுஷி - 5 - உன்னுடனே இருக்கிறேன்... உனக்காகவே இருக்கிறேன்!

மனுஷி - 5 - உன்னுடனே இருக்கிறேன்... உனக்காகவே இருக்கிறேன்!
பிரீமியம் ஸ்டோரி
மனுஷி - 5 - உன்னுடனே இருக்கிறேன்... உனக்காகவே இருக்கிறேன்!

சுபா கண்ணன் - ஓவியம்: ஸ்யாம்

மனுஷி - 5 - உன்னுடனே இருக்கிறேன்... உனக்காகவே இருக்கிறேன்!

சுபா கண்ணன் - ஓவியம்: ஸ்யாம்

Published:Updated:
மனுஷி - 5 - உன்னுடனே இருக்கிறேன்... உனக்காகவே இருக்கிறேன்!
பிரீமியம் ஸ்டோரி
மனுஷி - 5 - உன்னுடனே இருக்கிறேன்... உனக்காகவே இருக்கிறேன்!
மனுஷி - 5 - உன்னுடனே இருக்கிறேன்... உனக்காகவே இருக்கிறேன்!

னந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழைத் துளி கூட்டுகிறாய்
தூரத்து மரங்கள் பார்க்குதடி
தேவதை இவளா கேட்குதடி
தன்னிலை மறந்து பூக்குதடி
காற்றினில் வாசம் தூக்குதடி
அடி கோயில் எதற்கு தெய்வங்கள் எதற்கு
உனது புன்னகை போதுமடி!


- கவிஞர்  நா.முத்துக்குமார்

மனுஷி - 5 - உன்னுடனே இருக்கிறேன்... உனக்காகவே இருக்கிறேன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

னி - ஞாயிறு என்றால், அம்மா வீட்டுக்கு வந்துவிடுவார்கள் அக்கா அமுதாவும் தங்கை கவிதாவும். அமுதா பள்ளி ஆசிரியை. கவிதா வங்கியில் வேலை பார்க்கிறாள்.

ஒரு சனிக்கிழமையன்று வந்த கவிதா, தலையைப் பிடித்தபடி உட்கார்ந்துவிட்டாள். அமுதாவும், அம்மாவும், பாட்டியும் ஒரு சேர, ‘’என்னடி ஆச்சு?’’ என்று கேட்டனர்.

“ஸ்ருதியின் பள்ளியில் பெற்றோர்களுக்கு ஓரியன்டேஷன், பாட்டி. நான்கு வயசுப் பொண்ணுக்கு குழந்தை வளர்ப்பு நிபுணர், குழந்தை மனோதத்துவ மருத்துவர், ஹெச்.ஆர்... இவங்களெல்லாம் சேர்ந்து சொன்ன விஷயம் வயித்தைக் கலக்குது, பயமாவும் இருக்கு. நான் சரியாத்தான் குழந்தை வளர்க்கிறேனா பாட்டி?” என்றாள் கவலை தோய்ந்த குரலில்.

‘’அசடே! இதுக்கா சலிச்சுக்கறே? அழகுதான் போ!’’ எனச் சிரித்தபடி, அடுக்களைக்குள் சென்றுவிட்டாள் அம்மா... காபி கலக்க.

அமுதா பள்ளி ஆசிரியை ஆச்சே... தங்கையின் தோளைத் தொட்டு, ஆறுதலாகப் பேச ஆரம்பித்தாள்.

`‘பெற்றோரோ, உடனிருப்பவரோ குழந்தை களிடம் தொடர்ந்து நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். நம்பிக்கையையும், பாதுகாப்பையும் முழுமையாகப் பெறும் குழந்தையின் உடல், மனம், ஆத்மா மூன்றும் முழுமையாகி தனித்து நல்ல ஆளுமையுடன் வளரும். நிறைய பாராட்டி ஊக்குவிக்க வேண்டிய பருவம் இது. பாராட்டு கிடைக்காத பட்சத்தில் அருகில் இருப்பவரை அடிப்பது, கிள்ளுவது, பிடிவாதமாக இருப்பது போன்ற கவன ஈர்ப்பு நடவடிக்கையில் குழந்தை இறங்கும்'' என்று சொல்லி நிறுத்தினாள் அமுதா.

``ஆமாமா, என்னோட லக்கி சுடிதாரைக் கூட கத்தரிச்சுவிட்டாளே'' என்றாள் கவிதா.

``இந்த வயதில்தான் ஆட்டிஸம், இதயம் போன்ற உள்ளுக்குள் இருக்கும் உடல்ரீதியான பிரச்னைகளையும் கண்டு உணர முடியும். எனவே, இந்தப் பருவத்தை அலட்சியப்படுத்தாமல் பாதுகாக்கவேண்டியது நம் அனைவரின் கடமையுமாகும். அதனால்தான் இன்றைய கல்வியாளர்கள், பெற்றோருக்குத் திரும்பத் திரும்ப ஓரியன்டேஷன் செய்து வலியுறுத்துகிறார்கள். நீ பயப்பட வேண்டியதில்லை’’ என்று அமுதா சொல்லிக்கொண்டிருக்கும்போதே, பாட்டி குறுக்கிட்டுப் பேச ஆரம்பித்தாள்...

‘’எங்க காலத்துல நாங்க குழந்தைகளைத் தனியாவே விட மாட்டோம். ‘நான் உன்னுடனே இருக்கிறேன், உனக்காகவே இருக்கிறேன்’ என்பதைக் குழந்தைகள் உணரும் வகையில், குழந்தைகளைக் குளிப்பாட்டுவது, அவர்களை அலங்கரிப்பதுன்னு ஒவ்வொண்ணையும் சிரத்தையா செய்வோம்.

7 வயது முதல் 12 வயதுவரை உள்ள குழந்தைகளை சுவாஸினி யாக பூஜிப்போம். நலுங்கு என்ற பெயரில் மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த கலவையை குழந்தைகளின் பாதங்களில் பூசுவோம். குறிப்பாக விரதநாள்கள், வெள்ளிக் கிழமைகள், விருந்தினர்கள் வரும் போது இதைச் செய்வோம். இது வெறுமே அழகுக்கானது மட்டு மில்லை; இந்தக் கலவையானது குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்வதுடன், பாதங்களில் வெடிப்புகள் ஏற்படாமலும் பாதுகாக்கிறது.

நோய்களால் குழந்தைகளுக்கு உண்டாகும் பயத்தைத் தவிர்க்கவே வாசனையான மஞ்சள், சந்தனம் முதலியவற்றை குளியலுக்கும், ஈரத்தலையை உலர்த்த சாம்பிராணி புகையையும், மனதை மயக்க நறுமண மலர்களையும் சூடி அழகு பார்த்தோம். நல்ல வீரமான, தைரியமான கதைகளைச் சொல்லி, `பெண் என்பவள் மகா சக்தி, அவள் தடைகள், ஆபத்துகள் எல்லாவற்றையும் தாண்டி வருபவள்'னு குழந்தைங்க மனசுல பதியச் செய்தோம். இந்த சுவாஸினி பருவம் என்பது சடக்கென கோபம் கொள்ளும், சடக்கென பூரித்துச் சிரிக்கும் பருவம். சின்னச் சின்ன விஷயத்துக்கே மனம் உவக்கும் பருவம். அதனாலேயே சாக்த வழிபாட்டாளர்கள் இந்த வயதுக் குழந்தையாகவே அம்பிகையை வழிபடுவார்கள். சின்ன விஷயத்துக்கே மனம் உவந்து வரங்களை அள்ளித்தருவாள் அன்னை. அதனால் வீட்டில் இந்தப் பிராயத்து குழந்தைகள் சிறப்பு கவனம் பெறும்’’ என்றாள் பாட்டி.

‘’சரி பாட்டி, வீடுகள்ல சிறப்பு கவனம் கொடுத்துக் குழந்தைகளைப் பார்த்துக்கலாம். கூட்டமான விழா நாட்கள்ல குழந்தையை கவனிக்க முடியாதே?’’ என்று கேட்டாள் கவிதா.

``அதற்கும் வழிவகை செஞ்சிருக்காங்க நம்ம முன்னோர்கள். எந்த ஒரு விசேஷமாக இருந்தாலும் பெண்குழந்தைகளைத் தங்கள் பார்வையிலேயே இருக்கும்படி பார்த்துக்கொள்வார்கள். நவராத்திரி நாள்களில் பெண்குழந்தைகளுக்கு லக்ஷ்மி, சரஸ்வதி, ராதை போல் வேஷமிட்டு, அவர்களை எங்கள் பார்வையிலேயே இருக்கும்படி பார்த்துக்கொள்வோம். கல்யாணம் போன்ற வைபவங்களின்போது குழந்தைகளை மணப் பந்தலுக்கு அருகிலேயே சுற்றிச் சுற்றி வரச் செய்வோம். அவர்கள் தன்னிச்சையாக அப்படிச் செய்ய வேண்டும் என்பதற்காகவே, மணப்பந்தலுக்கு முன்பாக மண்சொப்புகளில் பாலிகை வைத்து, அதைப் பெண்குழந்தைகளுக்குத் தரும் வழக்கத்தை ஏற்படுத்தினோம். மண் சொப்புகளை வாங்க வேண்டும் என்பதற்காகவே குழந்தைகள் மணப்பந்தலின் அருகிலேயே சுற்றிச்சுற்றி வருவார்கள். வளைகாப்பு வைபவங்களில்கூட சித்ரான்னங்களையும் இனிப்புகளையும் முதலில் பெண்குழந்தைகளுக்கே தருவோம். எல்லா சம்பிரதாயங்களும் பெண் குழந்தை களின் நலனை உத்தேசித்தே இருக்கும்'' என்று ஒரு காலட்சேபமே செய்து முடித்த பாட்டி, “அப்பல்லாம் நிறைய குழந்தைகளைப் பெற்றும் நாங்க பயப்படவே இல்லை. நீங்க என்னடான்னா ஒரு குழந்தைக்கே இப்படித் தலையைப் பிச்சுக்கறீங்களே?’’ என்று முடித்தாள்.
``அரைநாள் பயமுறுத்திய விஷயத்தை,  ஐந்தே நிமிஷத்தில் அநாயாசமா போக்கிட்டியே பாட்டி, இனி, பள்ளியில் நடக்கும் ஓரியன்டேஷனுக்கு நீயே போயிட்டு வா!’’ என்று மனம் லேசாகிச் சிரித்தாள்  கவிதா.

எல்லாப் புகழும் பெண்களுக்கே!

வேத காலத்தில், ஆண் மகன் பிறந்தால், வித்தையைக் கற்க வாரிசு வந்ததாக எண்ணி மகிழும் சமூகம் அதே அளவு மகிழ்ச்சியை பெண்குழந்தை பிறந்தாலும் அடைந்தது. நல்ல வித்தையைக் கற்றவன் இல்லற தர்மத்தையும் காக்கவேண்டுமே! இல்லறத்தில் ஆண்  கடைப்பிடிக்கவேண்டிய ஒவ்வொரு தர்மத்துக்கும் ஒரு பெண்ணின் பங்கு அவசியமாகிறது. மனைவி என்ற உறவின் பங்களிப்பு இல்லாமல் ஒருவன் செய்யும் தர்மம் உரிய பலனைத் தராது, அவன் செய்யும் சடங்குகள் முழுமை பெறாது என்கிறது சாஸ்திரம். அதனாலேயே பெண்குழந்தைகளைப் பெறுவதை வேதகால சமூகம் பாக்கியமாகவே கருதியது.