‘சார்... கொஞ்சம் வழியை விடுங்க சார். இந்த 500 ரூபாயை மட்டும் மாத்திட்டுப் போயிடுறேன். பிள்ளைக்கு ஒடம்பு முடியல. அவசரமா மருந்து வாங்கணும்’ - கெஞ்சிக்கொண்டே வங்கியின் உள்ளே நுழைகிறார் ஒரு பெண்மணி.

‘எவ்ளோ நேரம்தான் பணம் எடுப்பீங்க? ஒரு மணி நேரமா லைன்ல நிக்கிறோம்ல, சீக்கிரம் இடத்தை காலி பண்ணுங்க’ என ஏ.டி.எம் வாசலில் ஒருவர் சத்தம் போட, பின்வரிசையிலும் அதேபோன்ற குரல்கள் ஆக்ரோஷமாய் விஸ்வரூபம் எடுக்கின்றன.

‘மூணு நாளா காசை மாத்த நேரமில்லாம சாப்பாட்டுக்குக்கூட கடனை வாங்கி செலவு பண்ணிட்டு இருக்கோம்’ - பசியில் கேட்கிறது ஒரு குரல்.

‘பொண்ணோட நகையை வாங்கி அடகு வெச்சிருந்தேன் மேடம். அக்கவுன்ட்ல போட்டு வெச்சிருந்த சீட்டுப் பணத்தை எடுத்து அடகு வெச்ச நகையையெல்லாம் மூட்டுடலாம்னு நினைச்சேன். ஆனா, அதுக்குள்ள இப்படி எல்லா காசும் செல்லாதுனு அறிவிச்சுட்டாங்க. வாரத்துக்கு 24 ஆயிரம்தான் எடுக்க முடியும்னா நான் 2 லட்சத்துக்கு வெச்ச நகையை எப்ப மீட்கப் போறேன்னு தெரியல. வட்டி ஒருபக்கம் மீட்டர் கணக்கா ஏறுது’ - தன் இயலாமையை கண்ணீராய் வெளிப்படுத்துகிறார் பெரியவர் ஒருவர்.

‘எவனோ எங்கேயோ கறுப்புப் பணம் வெச்சிருந்தா அவனைப் பிடிச்சு ஜெயில்ல போடாம எங்களை ஏன் இப்டி வெயில்ல நிக்கவெச்சு சாகடிக்கணும்? பெரிய பெரிய பணக்காரங்க யாராச்சும் க்யூவுல நிக்குறாங்களானு பாத்தீங்களா?’ என ஆக்ரோஷம் பொங்குகிறார் இன்னொருவர்.

கடந்த நவம்பர் 8-ம் தேதி, ‘இனி 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது’ என வந்த மத்திய அரசின் அறிவிப்பால் ஒவ்வொருக்கும் கிடைத்த அனுபவங்கள் அவரவர் தேவைகளைப் பொறுத்து மாறுபடுகின்றன.

மக்களால் இயங்கும் அரசு, இப்படி ஒட்டுமொத்த நாட்டு மக்களின் தினசரி வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு பெரும் முடிவை எடுக்கும்போது, அவர்களுக்கு சிக்கல் ஏற்படாத வகையில் முன்னேற்பாடுகளைச் செய்திருக்க வேண்டியதும் அவசியம்.

அரசின் இந்த அறிவிப்பு பொது மக்களிடம் வரவேற்பு, எதிர்ப்பு என இருவேறான மனநிலையை ஏற் படுத்தியிருக்கும் நிலையில், பெண்கள் இந்த அறிவிப்பால் எந்தெந்த வகை களில் பணத்தட்டுப்பாட்டை சமாளித் தார்கள் என்பதை அறிந்து கொள்ள, அவள் விகடன் சார்பில் ஆன்லைனில் ஆண்கள், பெண்கள் என இரு தரப்பினரிடமும், தமிழக அளவில் நேரடியாகப் பெண்களை மட்டும் சந்தித்தும் சர்வே எடுத்தோம்.

ஆன்லைனில் நடத்தப்பட்ட சர்வேயில் 18.11.2016-ல் தொடங்கி 25.11.2016 வரை அதிகப்பட்சமாக 1,120 பேர் ஆண்,பெண் இருவரும் கலந்து கொண்டனர்.

நேரடியாக தமிழகம் முழுக்க சுமார் 1000 பெண்கள் பங்கேற்றனர்.

இந்த சர்வேயில் 7 கேள்விகள் கேட்கப்பட்டன. முடிவுகள் இதோ...

சிக்கனம் முக்கியம்!

அரசின் அறிவிப்பு, பணத்தட்டுப்பாடு... இந்தப் பிரச்னைக்கான தீர்வு குறித்து நிதி ஆலோசகர் சித்ரா நாகப்பன் கூறும்போது, ‘’இந்தியா என்பது 100 கோடிக்கும் அதிக மான மக்களைக் கொண்ட நாடு என்பதால் அரசு எடுக்கும் எந்த நடவடிக்கையும் முன்னேற்பாடுகளுடன் நடப்பது நல்லது. 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு பதில் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் தாள்களை வெளியிட்ட அரசு போதுமான அளவுக்கு 100 மற்றும் 50 ரூபாய் தாள்களை இருப்பு வைத்திருக்கலாம்.

பொதுமக்கள் வங்கிக்குச் சென்று பணம் வாங்கும்போது 2000 ரூபாய் தாள்களையே பெறுகிறார்கள். இதற்குப் பதிலாக சம அளவில் 100, 500 தாள்களையும் மக்களிடம் கிடைக்கும்படி செய்திருந்தால் ஓரளவுக்காவது மக்களிடம் பணத்தட்டுப்பாடு குறைந்திருக்கும்.

வங்கியின் வேலை நேரத்தை கூட்டுவதுடன், வங்கிக் கணக்கு, ஏ.டி.எம் கார்டுகள் எல்லாம் இல்லாத கிராமப்புற மக்களுக்கு அரசு உதவினால் நல்லது’’ என்றவர் மக்களுக்கு சில ஆலோசனைகள் தந்தார்.

‘’இனிவரும் காலங்களில் பணத்தை வீட்டில் வைத்துக்கொள்ளாமல் தேவை போக மற்றதை வங்கிக் கணக்கில் வைத்துக்கொள்ளலாம். கூடுமான அளவுக்கு எல்லா செலவுகளுக்கும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்துவது நல்லது.

வங்கி, ஏ.டி.எம் என வரிசையில் நின்று பெறும் பணத்தை தேவைக்கு அதிகமாக செலவு செய்யாமல் சிக்கனமாக செலவு செய்வதையும், அத்தியாவசியத் தேவைக்கு மட்டும் செலவு செய்வதையும் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். நம்மிடம் இருப்பு இருக்கும் பணத்துக்கு ஏற்ற வகையில் திட்டமிட்டுச் செலவு செய்தால் இந்தப் பிரச்னையைச் சமாளிக்கலாம்’’ என்றார்.