Published:Updated:

விடுமுறை @ வேதாரண்யம்! - இது புதுசு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
விடுமுறை @ வேதாரண்யம்! - இது புதுசு
விடுமுறை @ வேதாரண்யம்! - இது புதுசு

அமெரிக்கக் குடும்பங்களின் வித்தியாசமான விடுமுறைக் கொண்டாட்டம்பிரேமா நாராயணன்

பிரீமியம் ஸ்டோரி
விடுமுறை @ வேதாரண்யம்! - இது புதுசு

ரையாண்டுத் தேர்வுகள் நெருங்குகிற நேரம் இது. அதன்பிறகு வரும் விடுமுறையைக் கழிக்க, உங்கள் வீட்டு குட்டீஸ் இப்போதே பிளான் செய்திருப்பார்கள். ஆனால், அமெரிக்காவில் வசிக்கும் `அவள்' வாசகி கவிதா பாலாஜி சமீபத்தில் இந்தியாவில் தான் செலவிட்ட விடுமுறையை நம்முடன் பகிர்ந்துகொண்டபோது ஆச்சர்யமாக இருந்தது. 

``அமெரிக்காவில் உள்ள `தமிழ்நாடு அறக்கட்டளை' மூலமாக, தமிழ்நாடு, வேதாரண்யத்தில் உள்ள கஸ்தூரிபாய் காந்தி கன்யா குருகுலம் பள்ளிக்கு அவ்வப்போது உதவிகள் செய்திருக்கோம். அங்கே படிக்கிற பிள்ளைகளில் பலர், பெற்றோரை இழந்த குழந்தைகள். அவங்ககூட எங்க விடுமுறையை கழிக்கணும்னு நானும் என் தோழிகள் சத்யா காமேஷ், சசிகலா முத்து மற்றும் மங்களா ஐயர் ஆகியோர் பிளான் பண்ணி எங்க குழந்தைகள்கிட்ட சொன்னோம். `டபுள் ஓகே' சொன்னாங்க. இந்தியா வந்திறங்கினதும் நேரா குருகுலத்துக்குதான் விசிட் அடிச்சோம்.

``பள்ளி தாளாளரைக்கூட வாய் நிறைய அன்போட `அண்ணா'னு கூப்பிடுற குழந்தைகள், புல்தரை, குளுமையான சூழல், கடற்கரை, மணல்வெளினு... எங்க பசங்க பல மடங்கு சந்தோஷத்தை அனுபவிச்சாங்க. குருகுல மாணவிகளுக்கு ஒரு வார காலமும் நானும் தோழிகளும் ஆங்கிலம், சுய ஒழுக்கம், ஆளுமைத் திறன், கம்ப்யூட்டர் பற்றியெல்லாம் கத்துக்கொடுத்தோம். அந்த குழந்தைங்க எங்களுக்கு பாட்டு, நடனம், மெஹந்தி, கிராஃப்ட்னு அவங்களுக்கு தெரிஞ்சதை சொல்லிக் கொடுத்து அசத்தினது அழகான பரிவர்த்தனை'' என்று நெகிழ்ந்த கவிதாவும் அவர் தோழிகளும் அமெரிக்காவில் மேடை நாடகங்கள் நடத்தி அதன் மூலமாக குருகுலத் துக்கு உதவுகிறார்கள்!

``இந்த ஸ்கூலில் ‘சார், மேடம்’ எல்லாம் இல்லை. டீச்சர் முதல் ஊழியர் வரை எல்லோரையும் ‘அண்ணா, அக்கா’ன்னு தான் கூப்பிடறாங்க. ஜனாதிபதியே இங்கே வந்தாலும், இவங்களுக்கு அவர் ‘ஜனாதிபதி அண்ணா’ தான். நிறைய பேருக்கு ஓவியம். பின்னல் வேலை, நடனம், பாட்டுன்னு பல திறமைகள் இருக்கு. நாம் என்ன சொல்லிக் கொடுத்தாலும், எல்லாத்திலேயும் ஈடுபாடு காட்டுறாங்க. வெளியே தெரியாத பல திறமைகள் இவங் களுக்குள்ளே இருக்கு” என்கிறார்கள் சசிகலாவும் மஞ்சுளாவும்.

``என்னதான் நாம பண உதவி செய்தாலும், அவங்க விரும்புறது, அவங்க பக்கத்தில் உட்கார்ந்து, கையைப் பிடிச்சு ரெண்டு வார்த்தை பேசுறதைத்தான். அப்படி ஒரு மகிழ்ச்சி அந்தக் குழந்தைங்க முகத்தில்! அதுக்குத்தான் ஏங்குறாங்க. இங்கே வந்த அனுபவம், ஒரு வருஷத்துக்கும் சேர்த்து உடம்புக்கும் மனசுக்கும் சார்ஜ் ஏத்திக்கிட்ட மாதிரி புத்துணர்வைத் தந்திருக்கு!” என்று மனம் கரைந்து பேசினார் சத்யா.

``வாழ்க்கையையே புரட்டிப்போடும் புதிய அனுபவம் இது. ‘அவள்’ வாசகிகள் இப்படியும் விடுமுறையைக் கழிக்கலாம்னு தெரிஞ்சுக் கிட்டு, இந்த அனுபவத்தை எல்லோரும் பெறணும் என்பதுதான் என் விருப்பம்’’ என்று நெகிழ்ச்சியான குரலில் சொன்னார் கவிதா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு