Published:Updated:

குழந்தை பெற்ற பிறகு வேலையை விட்டவரா நீங்கள்?! இதோ ‘செகண்ட் இன்னிங்ஸ்’ வாய்ப்புகள்..!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
குழந்தை பெற்ற பிறகு வேலையை விட்டவரா நீங்கள்?! இதோ ‘செகண்ட் இன்னிங்ஸ்’ வாய்ப்புகள்..!
குழந்தை பெற்ற பிறகு வேலையை விட்டவரா நீங்கள்?! இதோ ‘செகண்ட் இன்னிங்ஸ்’ வாய்ப்புகள்..!

ஸ்ரீலோபமுத்ராதகவல்

பிரீமியம் ஸ்டோரி
குழந்தை பெற்ற பிறகு வேலையை விட்டவரா நீங்கள்?! இதோ ‘செகண்ட் இன்னிங்ஸ்’ வாய்ப்புகள்..!

திருமணத்துக்குப் பிறகு குடும்பம், குழந்தை வளர்ப்புப் பொறுப்புகளால் தங்கள் கரியரைத் தொலைத்த பெண்கள் பலர். இவர்களின் சூழலைக் கருத்தில்கொண்டு, குழந்தைப்பேறுக்குப் பிறகான வேலைவாய்ப்பை உருவாக்கித் தர, பல வலைதள நிறுவனங் கள் களமிறங்கியுள்ளன. அப்படிப்பட்ட இரண்டு வலைதளங்களை நடத்திவரும் இரண்டு பெண்கள் இவர்கள்.

பெங்களூரில் வசிக்கும் மஞ்சுளா தர்மலிங்கம், www.hersecondinnings.com வலைதளத்தை நிர்வகித்து, பல மம்மிக்கள் மீண்டும் வேலைக்குச் செல்ல வழிகாட்டி வருகிறார். அவரிடம் பேசினோம்.

``திருமணத்துக்குப் பிறகு வேலைக்குச் செல்லும் பல பெண்களால், குழந்தை வளர்ப்பு என்கிற பெரிய பொறுப்பை சமாளிக்க வேலையில் இருந்து பிரேக் எடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்படு கிறது. ஆனால், ‘கரியர் பிரேக் என்பது தற்காலிகம்தான்’ என்ற நம்பிக்கையைக் கொடுத்து, அவர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பை உண்டாக்கித் தருவதே எங்கள் வலைதளத்தின் வேலை. செகண்ட் இன்னிங்ஸில் ஜெயிக்க, துறை வல்லுநர்களின் ஆலோசனை, தலைமைப் பண்புகளை வளர்த்துக்கொள்ள பயிற்சி, திறமை, ஊக்குவிப்பு மற்றும் தன்னம்பிக்கை பயிற்சி என மீண்டும் அவர்களை அலுவல் சூழலுக்குத் தயார்படுத்தும் வகுப்புகளையும் ஆன்லைனிலேயே வழங்குகிறோம். பெங்களூரு, மும்பை, டெல்லி என எங்களிடம் பயிற்சி பெற்ற பல பெண்கள் இன்று பெரிய நிறுவனங்கள், புராஜெக்ட் கன்சல்டன்ஸி, வொர்க் ஃப்ரம் ஹோம், பெண் தொழில்முனைவோர் என்று அனைத்துத் தளங்களிலும் கலக்குகிறார்கள். தமிழ்ப் பெண்களும் இரண்டாம் ஆட்டத்துக்கு வாருங்கள்” என்று அழைக்கிறார் மஞ்சுளா.

தேபோல பெங்களூரை மையமாகக் கொண்டு சென்னை, மும்பை மற்றும் டெல்லியில் வசிக்கும் பெண்களுக்கு www.jobsforher.com இணையதளத்தின் மூலம் பணி வாய்ப்புகளை ஏற்படுத்தி வரும் நேஹா பகாரியா நம்மிடம் பகிர்ந்த விஷயங்கள், குறித்துக்கொள்ள வேண்டியவை.

``பொதுவாக, கரியர் பிரேக்குக்கு பிறகு வேலை தேடும் பெண்களுக்கு விண்ணப்பம் தயாரித்தலில் இருந்து, நீண்டகால நோக்கில் திட்டமிடுவது, புதிய வாய்ப்புகளை அறிந்து, மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை பெறுவது, தன்னால் மீண்டும் திறம்பட புணிபுரிய முடியும் என்ற எண்ணத்தை பலப்படுத்துவது, கவுன் சலிங் என அனைத்து விதமான வழி காட்டல்களையும் வழங்குகிறோம். கடந்த மகளிர் தினத்தின்போது, கரியர் பிரேக்குக்குப் பிறகு வேலைதேடும் பெண்களுக்கென ஒரு பிரத்யேக வேலைவாய்ப்பு முகாமை (Job Fair) நடத்தினோம். இதில் கலந்துகொண்ட பல பெண்கள் இப்போது, பிரபலமான நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். காலத்தின் தேவைக்கேற்ப புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி முழு நேர வேலை, பகுதி நேர வேலை, வீட்டில் இருந்தபடி செய்யும் வேலை என பல வாய்ப்புகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி தன்னம் பிக்கையை வளர்க்கிறோம்'' என்று புன்னகைக்கிறார் நேஹா.

செகண்ட் இன்னிங்ஸ் சலோ அம்மாக்களே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு