ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு வைராக்கியம், ஓர் உத்வேகம் ஒளிந்து கொண்டிருக்கும். அவை தட்டி எழுப்பப்படும் நேரத்துக்காகக் காத்திருக்கும். அப்படி உங்களுள் ஒளிந்திருக்கும் உத்வேகத்தை திறமையை தட்டி எழுப்பவே `அவள் சேலஞ்ச்' அறிவிப்பு வெளிவந்தவுடன் வாசகிகளின் விசாரிப்புகள் பொங்கி வழிகிறது. `அவள் சேலஞ்ச்' பற்றி மேலும் தெரிந்து கொள்ள இதோ...

அவள் சேலஞ்சில் பங்கெடுக்க இந்த கேட்டகரிகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் யோசித்திருக்கும் சாதனை இப்பட்டியலில் அடங்காவிட்டாலும் கவலை வேண்டாம். அவற்றையும் சிறப்பு சேலஞ்சாக கருதி பரிசீலிப் போம்.

இவை மட்டுமல்ல... வியக்க வைக்கும், அசாதாரணமான, அபார மான எந்தவொரு சாகச சவாலையும் தகுந்த பயிற்சி மற்றும் பாதுகாப்புடன் நீங்கள் சந்திக்கலாம்!

இலக்கியம்
இசை
நடனம்
சேவை
மொழி
வரலாறு
விழிப்பு உணர்வு
சமையல் / உணவு
விளையாட்டு
பயணம்
ஆர்ட் & கிராஃப்ட் / இன்டீரியர்
கல்வி - அறிவியல் - தொழில்நுட்பம்
புகைப்படக்கலை / வீடியோ
சுற்றுச்சூழல் / வேளாண்மை /
தோட்டக்கலை மாற்றுத்திறனாளிகள்
குழுச் செயல்பாடுகள் / பயிற்சி

உங்கள் சவால்களை அனுப்ப வேண்டிய முகவரி:
அவள் சேலஞ்ச்,
அவள் விகடன்,
757 அண்ணா சாலை, சென்னை - 600 002.
email: aval@vikatan.com

81 வயதில் என்ன ஓர் எனர்ஜி!

அவள் வாசகிகளின் அருமையான சவால்கள்

தினம் தினம் நம் வாசகிகள் அனுப்புகிற சேலஞ்ச் கடிதங்களால் நிறைகிறது நம் அலுவலகம். தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு சவாலையும் எப்படி நிறைவேற்ற வேண்டும் என அந்தந்த வாசகிக்கு தொலைபேசி அல்லது மின் அஞ்சல் வாயிலாகத் தெரிவித்து வருகிறோம்.

சாதித்த சவால்கள் பற்றிய விரிவான விவரங்கள் விரைவில் வெளியாகும். இப்போது நம் வாசகிகளின் சவால் எண்ணங்களில் ஒருசில உங்கள் பார்வைக்காக...

‘குடும்பச் சூழல், வேலையின்மை, பொருளாதாரச் சிக்கல், அதைத் தொடர்ந்து பிள்ளைப் பேறு என எழுதுவதையே நிறுத்திவிட்டேன். ‘அவள்’தான் எனக்கும் எழுதத் தெரியும் என்று உணர வைத்தது. இப்போது அவளே என்னால் சாதிக்க முடியும் என்கிறாள். இதோ... அவள் சேலஞ்சில் இலக்கியத்தை டிக் செய்கிறேன்’ என்கிறார் திருச்சி, உறையூர் வாசகி காவியா சேகரன்.

‘அவள் சேலஞ்சில் பங்கெடுக்க ஆவல். இருந்தாலும், முதுமை காரணமாகத் தயங்கினேன். எனக்குள் இருக்கும் அவள் தந்த உத்வேகத்தால் சரஸ்வதி மேல் நான் எழுதி மெட்டமைத்த ஒரு பாடலை என் சகோதரிகளுக்குச் சொல்லிக் கொடுத்துவிட்டு, அக்டோபர் 11 முதல் சணல் பையில் ஃபேப்ரிக் பெயின்ட் கொண்டு பூக்கள் வரைந்து நவம்பர் 9 உடன் 30 பைகளுக்கு மேல் அழகு செய்துவிட்டேன். என்னை உற்சாகப்படுத்திய அவளுக்கு என் மனமார்ந்த ஆசிகள்’ என்று நம்மை வியக்கும் வைக்கும் சென்னை மில்லர்ஸ் ரோடு வாசகி மாலதி ராஜகோபாலனுக்கு வயது 81.

மதுரை வாசகி கே.ஜெயசீலி தோட்டக்கலை பிரிவில் சாதனை புரிய காத்திருக்கிறார்.

‘அவள் சேலஞ்ச் பற்றி படித்ததும் எனக்குள் புதிய நம்பிக்கை பூத்திருக்கிறது. என் ஆசைக்கும் திறமைக்கும் வாய்ப்பு கிடைக்குமா?’ எனக் காத்திருப்பதாகச் சொல்கிறார் இலக்கியம் பிரிவில் சாதிக்க விரும்பும் சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை வாசகி சி.ஆர்.அனுராதா.

30 நாட்களில் 30 விதமான ஓவியங்கள் வரைய விரும்புகிறார் அவள் வாசகி எம்.அமுதவல்லி.

ஃபேன்ஸி, பேப்பர், டெரகோட்டா, சில்க் திரட் ஜுவல்லரி உள்பட 30 வகை ஜுவல்லரிகள் செய்ய ஆவலாக இருக்கிறார் சென்னை, அயனாவரத்தைச் சேர்ந்த வாசகி ராகினி.

இன்டீரியர் பிரிவில் 30 நாட்களில் `இதுவரை இல்லாத மாதிரி’ சாதிக்க விரும்புகிறார் சென்னை வாசகி கீதா.

‘அவள் சேலஞ்சுக்காக 30 நாட்களில் 30 டிசைனர் பிளவுஸ் உருவாக்கலாமா?’ என்று கேட்டிருக்கிறார் மதுரை வாசகி ராஜேஸ்வரி.

(சவால்களும் சாதனைகளும் தொடரும்!)