ஒரு டஜன் யோசனைகள் - குளிரைச் சமாளி!

“மார்கழி மாசக்குளிரு மச்சத் துளைக்கும்; தை மாசக்குளிரு தரையைத்  துளைக்கும்’’ - இது குளிர்காலத்தைப் பற்றி, நம் கிராமங்களில் சொல்லும் முதுமொழி. நம் ஒவ்வொருவருக்கும் குளிர்காலம் என்றாலே வாயில் பற்கள் தந்தியடிக்கும் அளவுக்கு, குளிர் பற்றிய நினைவுகளும், அதில் பட்ட துன்பங்களும் குயிக் ஃப்ளாஷ்பேக்காக ஒரு மின்னல் வெட்டிச் செல்லும். எனவே, குளிர்காலத்துக்கு ஏற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு, நம்மை நாம் தயார்படுத்தி வைத்துக்கொள்வது ஒன்று மட்டுமே, நோய்களில் இருந்து தப்பிக்க உதவும் ஒரே வழி” என்கிற, திருச்சியைச் சேர்ந்த சித்த மருத்துவ நிபுணரான சபரிநாதன், அதற்கு எளிய வழிமுறைகளையும் கூறுகிறார்.

* குடிநீரை குமிழ் வரும்வரை கொதிக்கவைத்து, வடிகட்டி அருந்த வேண்டும். மேலும், வீட்டைச்சுற்றி இருக்கும் தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய்ச் சிரட்டை, டயர் ஆகியவற்றை அகற்றிவிட வேண்டும். ஏனெனில், இவற்றில் தங்கும் நீரில் டெங்குவை உருவாக்கும் கொசுக்கள் உற்பத்தி ஆகும்.

* நாட்டு மருந்துக் கடை களில் விற்கக்கூடிய ‘அதி மதுரம்’ வேரை, தேவையான அளவு வாங்கி நன்கு மென்று சுவைத்து சாப்பிட்டுவர, இருமலால் ஏற்படும் குரல் மாறுபாடு, தொண்டைக் கட்டு குணமாகும்.

ஒரு டஜன் யோசனைகள் - குளிரைச் சமாளி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!* குளிர்காலத்தில் குழந்தைகள் அருந்தும் பாலுடன் சிறிது மிளகுத்தூள், மஞ்சள்தூள், பனங்கற்கண்டு சேர்த்துக் கொடுப்பது நல்லது. ஏனெனில், இவை சளியை உண்டாக்கக்கூடிய கிருமிகளை எதிர்க்கும் தன்மை கொண்டவை.

* ஆஸ்துமா நோயாளிகள் இரவில் எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவு களை உட்கொள்ள வேண்டும். பின்னர், இரண்டு மணி நேரம் கழித்துதான் உறங்கச் செல்ல வேண்டும்.

* குளிர்காலத்தில் காலை நேரங்களில் ஈரப்பதமும், பூக்களின் மகரந்தமும், பூஞ்சையும் காற்றில் அதிகமாக கலந்திருக்கும். குறிப் பாக, ஆஸ்துமா தொந்தரவு உள்ளவர் கள், காலையில் நடைப் பயிற்சி செய்வதைத் தவிர்த்து, மாலை வெயிலில் நடக்கலாம்.

* தும்மல் மற்றும் தலை வலியால் பாதிக்கப் படுபவர்கள், நொச்சி இலைகள் சேர்த்த சுடுநீரில் ஆவிபிடிக் கலாம். குளிக்கும்போது இளஞ்சூடான நீரில் குளிப்பது நல்லது.

* வயதானவர்களுக்கு உடலில் வாதத்தால் (குளிர்ச்சியால்) உண்டாகும் முதுகுவலி, மூட்டுவலி பிரச்னை களுக்கு, அரை டீஸ்பூன் ‘சித்தரத்தை சூரணத்தை’ பாலில் கலந்து காலை, மாலை என இருவேளை கொடுத்துவர, வலியின் தீவிரம் குறையும்.

* குளிர்காலத்தில் உண்டாகக்கூடிய வைரஸ் தொற்றிலிருந்து தப்பிக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிலவேம்பு கஷாயத்தை வாரத்தில் மூன்று நாளைக்கு காலை நேரத்தில் குடிப்பது நல்லது.

* குளிர்காலத்தில் எளிதில் செரிமானம் ஆகாத தயிர், எண்ணெய், கொழுப்புச் சத்துமிக்க உணவுப் பொருட்களை தவிர்த்துவிட்டு உளுந்து, கோதுமை, பயறு வகைகள், நெல்லி, தேன் என செரிமானம் ஆகும் உணவுப்பொருட்களை எடுத்துக் கொள்வதால் உடலில் எனர்ஜி அதிகரிக்கும்.

* துளசி சேர்த்த தேநீர், தூதுவளை அடை, ஆடுதொடா இலை சிரப் அல்லது இரண்டு டீஸ்பூன் கற்பூரவல்லி இலைச்சாறுடன் தேன்... இவற்றில் ஏதாவது ஒன்றை சாப்பிட்டாலே வறட்டு இருமல் தொல்லை நீங்கும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். தகுந்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில், அரசு மருத்துவமனைகளில் கிடைக்கும், ‘கபசுர குடிநீரை' வாங்கிக் குடிக்கலாம்.

* குழந்தைகளுக்கு உண்டாகும் மூச்சிரைப்பு தொந்தரவுகளுக்கு, நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் ‘கற்பூராதி தைலத்தை’ மார்புப் பகுதியில் தேய்த்துவர, மூச்சி ரைப்பு கட்டுப்படும்.

* குளிர்காலத்தில் தோலில் வறட்சி ஏற்பட்டு, பல இடங்களில் தோல் வெடித்து காணப்படும். இதனைத் தடுக்க அருகன் தைலம், கற்றாழை, குங்கிலிய எண்ணெய் ஆகியவற்றை தடவி வர, எளிதில் தோல் வெடிப்பு சரியாகும்.