Published:Updated:

“நான் கொஞ்சம் குண்டாத்தான் இருந்தேன்!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“நான் கொஞ்சம் குண்டாத்தான் இருந்தேன்!”
“நான் கொஞ்சம் குண்டாத்தான் இருந்தேன்!”

நட்சத்திரம்ஆர்.வைதேகி

பிரீமியம் ஸ்டோரி

வுதம் மேனன் படங்களின் கதாநாயகிகள் வழக்கமான ஹீரோயின்கள் போலில்லை... ‘காக்க காக்க’ மாயா, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ ஜெஸ்ஸி போலவே ‘அச்சம் என்பது மடமையடா’ லீலா ராமனும் சம்திங் ஸ்பெஷல். அதனாலோ என்னவோ, முதல் படத்திலேயே கவனம் ஈர்த்திருக்கிறார் ஸ்டெல்லா மாரிஸ் ஸ்வீட்டி மஞ்சிமா மோகன்!

தமிழுக்குத்தான் மஞ்சிமா புதுமுகம். மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக ஏகப்பட்ட படங்களில் நடித்தவர். இவருடைய அப்பா விபின் மோகன் மலையாளத்தில் பிரபல கேமராமேன். அம்மா கிரிஜா, டான்ஸர்.

“நான் கொஞ்சம் குண்டாத்தான் இருந்தேன்!”

சாக்லேட், ஐஸ்க்ரீம் என விரும்பியதைக் கொடுத்தும் கொஞ்சியும் குழந்தை நட்சத்திரங்களை கேமரா முன் நடிக்க வைப்பார்கள். விவரம் தெரிகிற வயதில் நடிப்பு தனக்கானதல்ல என ஒதுங்கிப் போனவர்கள் பலர். மஞ்சிமாவுக்கு அப்படியொரு ஃபீல் வந்ததில்லையா?

‘`எனக்கு அப்படியொரு ஃபீல் வந்ததே இல்லை. சைல்ட் ஆர்ட்டிஸ்ட்டா நடிச்சிட்டிருந்தபோதே பெரியவளானதும் ஹீரோயினாகணும்கிற கனவோடவே திரிஞ்சேன். அப்பா ஏற்கெனவே இந்த ஃபீல்டுல இருந்தவர். குழந்தையா இருந்தபோது எவ்வளவு என்ஜாய் பண்ணினேனோ, அதைவிட அதிகமா இப்ப என்ஜாய் பண்றேன். நம்மால மத்தவங்களை என்டர்டெயின் பண்ண முடியும்கிறதும், அதுக்கொரு வாய்ப்பு கிடைக்கிறதும் எவ்வளவு பெரிய விஷயம்!’’

`` `அச்சம் என்பது மடமையடா' படத்தில் சில ஷாட்களில் சற்றே பூசினாற்போலத் தெரிகிறார் மஞ்சிமா. டூப் இல்லையே அது?''

``சேச்சே... நான்தான் அது. மொதல்ல கொஞ்சம் குண்டாத்தான் இருந்தேன். அதனால தமிழ்ல பிரபலமான ஒரு  டைரக்டர், ஹீரோவுக்கு நான் மேட்ச் ஆக மாட்டேன்னு சொல்லி என்னை ரிஜெக்ட்டே பண்ணினார். அதுக்காக நான் அப்செட் ஆகலை. ஆனா, அந்த ரிஜெக் ஷனுக்கு பிறகுதான் நான் வெயிட்டையே குறைச்சேன். வெயிட்டை குறைச்சா நான் இன்னும் கொஞ்சம் ஆரோக்கியமா இருப்பேன்.என் ஸ்கின் நல்லாருக்கும்னு தோணினது... குறைச்சுட்டேன். இப்ப ரெகுலரா ஜிம்முக்குப் போறேன். எல்லா டைரக்டர்ஸும் ஒல்லியான ஹீரோயின்ஸ்தான் வேணும்னு கேட்கறதில்லை. அது அவங்கவங்க பார்வையைப் பொறுத்தது. அந்த வகையில கவுதம் மேனன் சார் சூப்பர். ‘ஒல்லியாகு, வெயிட்டை குறை’ங்கிற மாதிரி எந்த கண்டிஷனும் சொல்லாம என்னை ஹீரோயினா கமிட் பண்ணினார்!’’

``கவுதம் மேனனிடமிருந்து ‘அச்சம் என்பது மடமையடா’ படத்துக்கு அழைப்பு வந்தப்ப எப்படி இருந்தது?''

‘`அப்பதான் மலையாளத்தில நான் நடிச்ச ‘வடக்கன் செல்ஃபி’ சூப்பர் ஹிட் ஆகியிருந்த டைம்... திடீர்னு ஒருநாள் கவுதம் மேனன் சார் ஆபீஸ்லேருந்து ஆடிஷனுக்கு வரச் சொல்லி போன். சந்தோஷத்துல நிஜமாவே துள்ளிக் குதிச்சேன். ஆடிஷனுக்குப் போனேன். எப்படியாவது இந்தப் படத்துல செலக்ட் ஆயிடணுமேங்கிற மாதிரி எந்த ஆசையும் இல்லை. கவுதம் சார் படத்தோட ஆடிஷன்ல கலந்துக்கிறதே ஒரு சூப்பர் எக்ஸ்பீரியன்ஸ்னு அதுக்காகவே போனேன். ஆனா, சார் என்னை செலக்ட் பண்ணினதுதான் ஆச்சர்யம்.

கவுதம் சார் படங்கள்ல ஹீரோயின்ஸை அவர் சித்திரிக்கிற விதமே அவ்வளவு அழகா இருக்கும். ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ ஜெஸ்ஸி, ‘காக்க காக்க’ மாயானு நிறைய உதாரணங்கள் சொல்லலாம். தமிழ்ல அவர் மூலம் அறிமுகமாகறோம்கிற ஃபீலே சந்தோஷமா இருந்தது. ‘அச்சம் என்பது மடமையடா’ மாதிரி ஒரு படம் பண்ணினாலும் போதும்... காலத்துக்கும் மக்கள் என்னை மறக்க மாட்டாங்க...’’

``ஹீரோ சிம்புவாச்சே?''

“சிம்புவோட பெர்சனல் கேரக்டரை பத்தின விஷயங்களை நினைச்சு நான் பயப்படலை... நடிப்புல அவர்கூட எப்படி போட்டிப் போடப் போறோம்கிற பயம்தான் இருந்தது. ஆனா, அவர் ரொம்ப நல்ல மனுஷன். கேமராவை எப்படி ஃபேஸ் பண்ணணும், டயலாக் எப்படி சொல்லணும்னு பல விஷயங்களை எனக்கு சொல்லிக் கொடுத்தார்.”

``நயன்தாராவுக்குப் பிறகு கோலிவுட்டின் நம்பர்-1 நாற்காலி யாருக்கு? கீர்த்தி சுரேஷ் வெர்சஸ் மஞ்சிமா மோகன் என்கிறார்களே?''

‘`அச்சச்சோ... அப்படியா எழுதுறாங்க? கீர்த்தி சுரேஷும் நானும் சின்ன வயசுலேருந்தே ஃபேமிலி ஃப்ரெண்ட்ஸ். சினிமாவுல அவங்க என்னைவிட நாலு வருஷம் சீனியர். என்னோட முதல் தமிழ்ப்படம் ரிலீஸ் அன்னிக்கு எனக்கு போன் பண்ணி விஷ் பண்ணினாங்க. அவங்க படங்கள் ரிலீஸாகறபோது நானும் வாழ்த்துவேன். கீர்த்தி சூப்பரா பண்ணிட்டிருக்காங்க. கீர்த்தியை மட்டுமல்ல... இங்கே யாரையுமே நான் எனக்குப் போட்டியா பார்க்கிறதில்லை. நான் இங்கே நடிக்க வந்திருக்கேன். என் வேலையை நான் சரியா செய்யணும். அவ்வளவுதான்!’’

``மஞ்சிமா மோகன் குழந்தை நட்சத்திரமாக கேரளா ஸ்டேட் அவார்ட்  வாங்கியவர். அந்த நாள் ஞாபகம் இருக்கா?''

``அந்த அவார்ட் வாங்கினபோது அது என்ன, எதுக்கு எனக்கு தர்றாங்கனுகூட தெரியாது. ஸ்கூல்ல நல்லா படிச்சா பிரைஸ் கொடுப்பாங்களே... அப்படித்தான் நினைச்சேன். ‘ஒரு வடக்கன் செல்ஃபி’ படம் பண்றவரைக்கும்கூட எனக்கு பேர், புகழ், பாராட்டு... இதோட மதிப்பெல்லாம் புரிஞ்சதில்லை. அந்தப் படம் ஹிட் ஆகி, மக்கள் என்னைக் கொண்டாட ஆரம்பிச்சாங்க. `ஆஹா... இதெல்லாம் சின்ன விஷயமில்லை'னு அப்பதான் புரிஞ்சது. அறியாத வயசுல வாங்கின அவார்ட் இருக்கட்டும். இப்போ நடிப்புன்னா என்னங்கிற சீரியஸ்னஸ் புரிஞ்சிடுச்சு. அவார்ட் வாங்கணும்கிற ஆசையும் இருக்கு... பார்ப்போம்!”

`` ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் பாதி காட்சிகளில் சிம்பு உடன் பைக் ரைடு. நிஜத்தில் பைக் ரைடு பிடிக்குமா? யார்கூட ரைடு போகணும்னு ஆசை?''


‘‘ஒரு பையனோட பைக்ல சுத்தின அனுபவமெல்லாம் இல்லவே இல்லை. சிம்பு கூட போனதுதான் ஃபர்ஸ்ட் டைம். ஷூட்டிங்குக்காக என்றாலும், கொஞ்சம் பயமாவும் கஷ்டமாகவும் இருந்தது. பயங்கர வெயில்... அனல் காற்று...  உண்மையில் அந்த ரைடை என்ஜாய் பண்ணவே முடியலை. ஷூட்டிங் முடிஞ்சதும் செம டயர்டா இருக்கும். ஆனா, இப்ப பைக் ரைடு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. மறுபடி எப்போ அப்படி சுத்தப்போறோம்னு ஆசையா இருக்கு. ஆனா என்ன செய்ய... கூட்டிட்டுப் போறதுக்கு இன்னும் ஆள் கண்டுபிடிக்கலை!’’

“நான் கொஞ்சம் குண்டாத்தான் இருந்தேன்!”

மஞ்சிமா பயோடேட்டா

குடும்பம்?

அப்பா விபின் மோகன், ஒளிப்பதிவாளர்.
அம்மா கிரிஜா மோகன், ஹவுஸ்வொய்ஃப்.
அண்ணன் விவேக் மோகன், பெங்களூரில் பணி
அண்ணி நீது.

பிடித்த உணவு

அனைத்து அசைவ உணவுகளும்.

சென்னையில் பிடித்த இடம்?

சத்யம் தியேட்டர்

எதையாவது மிஸ் பண்ணுகிறீர்களா?

நான் படித்த ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியை, அந்த நாட்களை.

செல்லப் பெயர் உண்டா?

உண்டு. ஆனால் அது சீக்ரெட்!

வளர்ப்புச் செல்லங்கள்?

நாய்க்குட்டிகள் என்றால் உயிர். ஆனால், வளர்ப்பதில்லை!

பயமுறுத்துகிற விஷயங்கள்?


அன்புக்கு உரியவர்களின் இழப்பு.

பிடித்த தமிழ் படங்கள்?

`அலைபாயுதே', `விண்ணைத் தாண்டி வருவாயா'.

எதற்கு அடிமை?


இசைக்கும் தூக்கத்துக்கும்.

இன்ஸ்பையரிங் நபர்கள்?


அம்மாவும் அப்பாவும்.

கனவு நனவான தருணம்?


கவுதம் மேனன் சார் படத்துக்கு தேர்வானது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு