Published:Updated:

அமெரிக்கர்கள் ஆடிய இந்திய நடனம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அமெரிக்கர்கள் ஆடிய இந்திய நடனம்!
அமெரிக்கர்கள் ஆடிய இந்திய நடனம்!

சங்கமம்ஜி.பாலாஜி

பிரீமியம் ஸ்டோரி
அமெரிக்கர்கள் ஆடிய இந்திய நடனம்!

டனக் கலை என்பது ஓர் அழகியல் நிகழ்வு மட்டுமல்ல... அதை ஒரு கலையாக மட்டுமே பார்க்கக்கூடாது. நடனத்தை சமூக மாற்றத்துக்காகவும் வளர்ச்சிக்காகவும் பயன்படுத்த வேண்டும்... இந்த நோக்கத்தில் ஒரு நடனக் குழு செயல்பட்டு வருகிறது. இங்கல்ல... அமெரிக்காவிலுள்ள வாஷிங்டனில்!

இந்திய நடனக் கலையையும் நவீன நடனக் கலையையும் இணைத்து இந்தியாவிலும் அமெரிக்காவிலும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது தக்‌ஷினா நடனக் குழு. பரதநாட்டியம், மோகினி ஆட்டம் போன்ற இந்திய நடனக் கலைகளுக்கும், நவீன நடன வடிவங்களுக்குள்ளும் உள்ள பன்முக அடையாளங்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதே இக்குழுவின் நோக்கம். தக்‌ஷினா கலைஞர்களின் புதுமையான நிகழ்ச்சியை அமெரிக்க துணைத் தூதரகமும் கலாக்ஷேத்ரா அகாடமியும் இணைந்து அண்மையில் சென்னையில் நடத்தின.

கலாக்ஷேத்ரா மாணவர்கள், நடனக் கலைஞர்கள், கலா ரசிகர்கள் எனப் பல தரப்பினராலும் நிரம்பியிருந்தது அரங்கம். ஒரு பக்கம் ஒளி விளையாட்டு, இன்னொரு பக்கம் கலைஞர்களின் வியக்க வைக்கும் நடனம் என வித்தியாசமான விருந்தாக அமைந்தது அந்த மாலை நேர நிகழ்வு. டேனியல் பீனிக்ஸ் சிங் தலைமையில் 12 அமெரிக்க நடனக் கலைஞர்கள் இதற்காக வந்திருந்தனர். கலைகள் எப்போதுமே மானுட சமூகத்துக்குத் தேவை... அது இனம், மொழி, பால் பேதங்களுக்கு அப்பாற்பட்டது என வலியுறுத்தியது இந்தச் சங்கமம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு